- Home
- Politics
- தேர்தலில் போட்டியிடாமலேயே அமைச்சர் பதவி..! 36 வயது இளைஞருக்கு கிடைத்த திடீர் வாய்ப்பு..!
தேர்தலில் போட்டியிடாமலேயே அமைச்சர் பதவி..! 36 வயது இளைஞருக்கு கிடைத்த திடீர் வாய்ப்பு..!
மிகவும் ஆச்சரியமாக தீபக் பிரகாஷ், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஒதுக்கீட்டில் இருந்து அமைச்சராகியுள்ளார். தீபக் பிரகாஷ் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா தலைவர் உபேந்திர குஷ்வாஹாவின் மகன்.

பீகாரின் புதிய முதலமைச்சராக முதல்வர் நிதிஷ் குமார் பதவியேற்றுள்ளார். அவருடன் 26 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம், ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து கொண்டனர். அவர்களில் மிகவும் ஆச்சரியமாக தீபக் பிரகாஷ், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஒதுக்கீட்டில் இருந்து அமைச்சராகியுள்ளார். தீபக் பிரகாஷ் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா தலைவர் உபேந்திர குஷ்வாஹாவின் மகன். சுவாரஸ்யம் என்னவென்றால், தீபக் பிரகாஷ் பீகார் சட்டமன்ற உறுப்பினராகவே தேர்ந்தெடுக்கப்படாதவர்.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் சசாரம் தொகுதியில் போட்டியிட்ட அவரது தாயார் சினே லதா குஷ்வாஹாவுக்காக பிரச்சாரத்தை தீபக் பிரகாஷ் வழிநடத்தினார்.
அக்டோபர் 22, 1989 அன்று பிறந்த தீபக் பிரகாஷ், கணினி அறிவியலில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர்.
எம்.ஐ.டி. மணிபாலில் பட்டம் பெற்றார். 2011-ல் கணினி அறிவியல் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். 2005-ல் ஐ.சி.எஸ்.இ வாரியத்தில் 10 ஆம் வகுப்பையும், 2007-ல் சி.பி.எஸ்.இ வாரியத்தில் 12 ஆம் வகுப்பையும் முடித்தார். எம்.ஐ.டி. மணிபாலில் பி.இ. பட்டம் பெற்ற பிறகு, 2013 வரை மென்பொருள் பொறியாளராகவும் பணியாற்றினார். தீபக் பிரகாஷ் 2019-ல் அரசியலில் நுழைந்தார்.
எளிமையாக, மென்மையாக பேசும் வழக்கம் கொண்ட தீபக் பிரகாஷ் காதல் திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவியின் பெயர் ஸ்மிருதி மிஸ்ரா. பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது தீபக் பிரகாஷுடன் ஸ்மிருதி மிஸ்ராவும் பிரச்சாரம் செய்தார். பீகார் சட்டமன்றத் தேர்தலில் சசாரம் தொகுதியில் போட்டியிட்ட சினேகலதா, 25,000 வாக்குகளுக்கு மேல் வெற்றி பெற்றார். அவருக்கு 105,006 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆர்ஜேடி வேட்பாளர் சத்யேந்திர சஹா 79,563 வாக்குகள் பெற்றார்.
நவம்பர் 20 அன்று சட்டமன்றத்தின் மைய மண்டபத்தில் நடந்த 202 என்டிஏ எம்.எல்.ஏ-க்களின் கூட்டத்தில் நிதிஷ் குமார் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போடு ஜேடியு தனது சட்டமன்றக் கட்சித் தலைவராக நிதீஷ் குமாரைத் தனிக் கூட்டத்தில் தேர்ந்தெடுத்தது. கடந்த வாரம் பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றியுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. சட்டமன்றத் தேர்தலில் 243 இடங்களில் 202 இடங்களை வென்றது. தேர்தல் ஆணையத் தகவல்களின்படி இந்தத் தேர்தலில், பாஜக 89 இடங்களையும், ஜேடியு 85 இடங்களையும், எல்ஜேபி (ஆர்வி) 19 இடங்களையும், எச்ஏஎம் 5 இடங்களையும், ஆர்எல்எம் 4 இடங்களையும் பெற்றன.
பீகார் அமைச்சராக பதவியேற்ற பிறகு, ஆர்.எல்.எம் தலைவர் தீபக் பிரகாஷ் கூறுகையில், "எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக எனது தலைவரும், தந்தையுமான உபேந்திர குஷ்வாஹாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் கட்சியின் அனைத்து தலைவர்கள், தொண்டர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பாகச் செயல்பட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது’’ எனக்கூறினார்.
