MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Tamil Nadu News
  • அன்று அதிமுக வட்ட செயலாளர்... இன்று லண்டன் மேயர் வேட்பாளர்.. யார் இந்த தாமோதரன்?

அன்று அதிமுக வட்ட செயலாளர்... இன்று லண்டன் மேயர் வேட்பாளர்.. யார் இந்த தாமோதரன்?

சென்னையில் அதிமுக வட்டச் செயலாளராக இருந்த தாமோதரன் சீனிவாசன், தற்போது லண்டன் கிரேடன் நகராட்சியில் கவுன்சிலராகவும், முன்னாள் துணை மேயராகவும் உள்ளார். தொழிலாளர் கட்சியில் இணைந்து பிரிட்டன் அரசியலில் முத்திரை பதித்துள்ளார்.

2 Min read
Author : Raghupati R
Published : Nov 20 2025, 03:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
லண்டன் மேயர் வேட்பாளர்
Image Credit : Social Media

லண்டன் மேயர் வேட்பாளர்

தமிழ்நாட்டில் அதிமுக வட்டச் செயலாளராக செயல்பட்ட தாமோதரன் சீனிவாசன், தற்போது இங்கிலாந்தில் அரசியல் வரலாறு படைக்கும் ஒருவராக உருவெடுத்து வருகிறார். லண்டனின் கிரேடன் நகராட்சியில் கவுன்சிலராக தேர்வு பெற்ற அவர், துணை மேயர் பதவியையும் வகித்துள்ளார். அடுத்த ஆண்டு அந்த நகரத்தின் மேயர் அல்லது பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினராக உயர வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

குடும்பத்தின் அரசியல் பின்னணி

1980களில் சென்னை வில்லிவாக்கத்தில் 128வது வட்ட அதிமுக செயலாளராக இருந்தார் தாமோதரன், தனது குடும்பத்தின் எம்ஜிஆர்–ஜெயலலிதா அரசியல் நெருக்கத்தால் கட்சிப் பணிகளில் தீவிரமாக இருந்தார். பின்னர் அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களால், தாயின் ஆலோசனையின்படி லண்டனில் மேல்படிப்புக்காக செல்ல அவர் முடிவு செய்தார். அங்கிருந்த படிப்பு அவருடைய வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

தொழிலாளர் கட்சியில் இணைப்பு

லண்டனில் படிப்பை முடித்த பிறகு அவர் ஒரு தொழிற்சாலையில் நல்ல வேலை பெற்றார். ஆனால் வேலை மட்டும் பார்க்காமல், அங்கு வாழும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முனைந்ததால் சமூகத்தில் நம்பிக்கையைப் பெற்றார். தமிழர்களுக்காக செய்த சேவையால், அப்போதைய பிரிட்டன் அமைச்சர் ஸ்டீவ் ரீட் அவரை தொழிலாளர் கட்சியில் சேர ஊக்குவித்தார். பிரிட்டனில் குடியேறிய மக்களுக்கு அதிக அக்கறை காட்டும் கட்சியாக இருப்பதால், தாமோதரன் அதை ஏற்றுக்கொண்டார். கட்சிப்பணிகளில் செயல்பட்ட அவர், விரைவில் கவுன்சிலர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
துணை மேயர் முதல் மேயர் வாய்ப்பு வரை
Image Credit : Social Media

துணை மேயர் முதல் மேயர் வாய்ப்பு வரை

கிரேடன் நகராட்சியில் கவுன்சிலராக நல்ல பணிகளை செய்து வந்தார், கடந்த ஆண்டு துணை மேயராக தேர்வு செய்யப்பட்டார். இன்னும் ஒரு ஆண்டில் அந்த நகரத்தின் மேயராக உயர வாய்ப்பு உள்ளது. மேலும் அடுத்த பொதுத்தேர்தலில் எம்.பி. வேட்பாளராகவும் பரிசீலிக்கப்படுகிறார்.

தமிழ்நாட்டு அரசியல்

லண்டனில் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் கவனித்து வருகிறார் தாமோதரன். பிரிட்டனுக்கு சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினையும் அவர் வரவேற்றார். மேலும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதும் அவர் வரவேற்றதாகவும் கூறினார். தமிழ்நாடு தேர்தலைப் பற்றி அவர் கூறுவது, “நான் அண்ணாதிமுக ஆதரவாளர்; எம்ஜிஆர்–ஜெயலலிதா கொடுத்த ஆட்சி தமிழர்களுக்கு மீண்டும் வர வேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார்.

Related Articles

Related image1
தவறான திட்ட அறிக்கை கொடுத்துட்டு வதந்தி பரப்பும் முதல்வர் ஸ்டாலின்..! நயினார் ஆவேசம்!
Related image2
மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அசத்தல்!

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்தியா
உலகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tomorrow Power Cut: நாளைக்கு பவர் கட்..உங்க ஊர் பெயர் இருக்கா? முழு லிஸ்ட்டையும் செக் பண்ணுங்க!
Recommended image2
Investment: லண்டனில் முதல்வர் விஜய்... ஆட்டோமொபைல், க்ரீன் எனர்ஜியில் குவியும் முதலீடுகள்!
Recommended image3
Digital Driving Licence: லைசென்ஸ் இனி கையில் வராது! இன்று முதல் டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் அறிமுகம்
Related Stories
Recommended image1
தவறான திட்ட அறிக்கை கொடுத்துட்டு வதந்தி பரப்பும் முதல்வர் ஸ்டாலின்..! நயினார் ஆவேசம்!
Recommended image2
மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அசத்தல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved