- Home
- Politics
- பாதிக்கப்பட்ட குடும்பங்கள் விஜயை போய் பார்க்கலாமா..? தம்பியை பார்த்தால் நடுக்கம் வருது..! கலங்கும் சீமான்..!
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் விஜயை போய் பார்க்கலாமா..? தம்பியை பார்த்தால் நடுக்கம் வருது..! கலங்கும் சீமான்..!
ஒப்பனையை அழித்த உடனே அரியணை. நீங்கள் நடிக்கும் போது நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு. நடிப்பதை நிறுத்திவிட்டால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு என்கிற நிலைப்பாடு.
- FB
- TW
- Linkdin
- GNFollow Us

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களை மாமல்லபுரத்துக்கு அழைத்து வந்து ஆறுதல் கூறிவருகிறார் தவெக தலைவர் விஜய்.
இதுகுறித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், ‘‘வரலாறு திரும்புகிறது என்று என் தம்பியே குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல இது ஒரு வரலாறு திரும்புகிறது என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். இதில் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். ஆன்றோர்களும், சான்றோர்களும், மிகப்பெரிய அறிஞர் பெருமக்களும் இருந்து இந்த இடத்தில் அரசியல் செய்த நிலம். இது எங்கள் தாத்தா தெய்வத்திருமகன் முத்துராமலிங்க தேவர், மூக்கையா தேவர், காமராஜர், கக்கன், ஜீவானந்தம், சிங்காரவேலர், அயோத்திதாசர், எம்.சி.ராஜா, ரெட்டமலை சீனிவாசன் என ஏகப்பட்ட பெருமக்கள். அவர்களை பார்த்து, அவர்களைப் போல ஒரு நல்ல அரசியல் நாட்டில் உருவாக வேண்டும். நல்லாட்சி இந்த நாட்டுக்கு மக்களுக்கு மலர வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் போது வேற பக்கம் திசை திருப்பி செல்கிறது.
தமிழன் ஏன் அடிமையானான் என்பதற்கு க.ப.அரவாணன் காரணங்களை ஒரு புத்தகத்தில் சொல்கிறார். இந்த இடத்தில் இருப்பது உயர்ந்தது என்கிற சிந்தனை, போர்க்களம் இன்மை, போர்க்களம் அற்று போனது. கடைசியாக அவர் சொல்கிற கொடுமையான காரணம் அளவுக்கு அதிகமாக திரைக்கவர்ச்சி என்கிறார். இதுதான் அடிமையானதற்கு பெரிய காரணம் என்கிறார். ஆகையால் அந்த நடுக்கம் நமக்கு வருகிறது. கல்வி என்பது அரசியலை கற்பிக்கவில்லை. பிரச்சனை என்னவென்றால் அரசியலை தாண்டி கல்வி இங்கு ஒன்றும் இல்லை. அரசியலை கற்பிக்காதது கல்வியும் இல்லை. நம்முடைய கல்வி அறிவையோ ஒழுக்க நெறியையோ வளர்க்கிற கல்வியாக அல்லாமல், வியாபாரமாக மாறிவிட்டதனால் வரும் சிக்கல் இது.
கலையை போற்ற வேண்டியதுதான். கலைஞர்களை கொண்டாட வேண்டியதுதான். ஆனால் நடித்தாலே போதும் நாட்டை ஆளுகிற அனைத்து திறமையும் வந்து விடுகிறது, தகுதிகள் வந்து விடுகிறது என்று ஒரு நாட்டு மக்கள் கருதுவார்களேயானால் அது ரொம்ப கொடுமையான போக்காக மாறிவிடும். அதை வருங்கால தலைமுறையினர் போகப் போக ஒரு சமூகம் அறிவார்ந்த சமுதாயமாக வளர்ந்து வாழும் என்று தான் நாம் பார்க்கிறோம். ஆனால், அதில் ஒரு நடுக்கம் வருகிறது. ஏனென்றால் ஒப்பனையை அழித்த உடனே அரியணை. நீங்கள் நடிக்கும் போது நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு. நடிப்பதை நிறுத்திவிட்டால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு என்கிற நிலைப்பாடு.
இதை இந்த அறிவார்ந்த தமிழ் சமூகம் ஏற்றுக் கொள்கிறது. உலகத்திற்கு அறிவையே கடன் கொடுத்த கலை, இலக்கியம், பண்பாடு, வேளாண்மை, நாகரீகம் எல்லாவற்றையும் கற்பித்துக் கொடுத்த உலகில் ஒரு மூத்த இனம். இந்தியாவில் எல்லா மாநிலமும் இருக்கிறது. எல்லா மாநிலத்திலும் திரைப்படம் இருக்கிறது. ஆனால் எந்த மாநிலத்திலும் இல்லாத விபத்து இங்கே தொடர்ந்து நிகழ்கிறது. ஏன் என்று பார்க்க வேண்டும். அருகில் இருக்கும் கேரளாவில் திரைப்படம் இல்லையா? அங்கே மோகன்லால், மம்முட்டியும் இந்த மாதிரி ஒரு வேலையை செய்ய முடியுமா? இந்த போக்கிலிருந்து இந்த திரை கவர்ச்சியில் மூழ்கிக் கிடக்கிறார்கள். தமிழின இளம்தலைமுறையினர் விழிப்புற்று எழ வேண்டும்.
அரசியல் என்பது வேறு. ஒரு வாழ்வியல். அதை நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் ஈடுபட்டு அரசியல் செய்தார்களோ அதையெல்லாம் படித்து தெளிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் இந்த அரசியல் பெரும் சிக்கலாகி போய்விடும். தங்கை, தம்பிகளுக்கு சொல்ல வேண்டியது மூத்த அண்ணனாக எனது கடமை. அதனால் சொல்கிறேன். தம்பி விஜய் அவர்களது விருப்பம். இங்கே வரவைத்து பார்ப்பதை நாம் கருத்து சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவருடைய நிலைப்பாடு அது. நாங்களாக இருந்தால் அந்த இடத்தை விட்டு (கரூர்) நகர்ந்திருக்க மாட்டோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.