- Home
- Politics
- உட்கட்சி எதிரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை..!இன்னுமும் பவர் தான்னு காட்டிய மோடி..!
உட்கட்சி எதிரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை..!இன்னுமும் பவர் தான்னு காட்டிய மோடி..!
உடல் மொழி சொல்லும் அண்ணாமலை அண்ணா மீது மோடி வைத்திருக்கும் அன்பினை! இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள பிணைப்பு வெறும் அரசியல் சார்ந்தது என்று நினைப்பவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்

பாஜகவின் முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்தவர் அண்ணாமலை. கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். திமுக அரசின் ஊழல், சாதி அரசியல், ஆணவக்கொலை போன்ற விவகாரங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, பாஜகவின் தமிழ்நாட்டில் வாக்குகளை பலப்படுத்தியவர்.
அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இது அதிமுகவின் அழுத்தத்தால் டெல்லி தலைமையின் முடிவு என்றும் விவாதிக்கப்பட்டது. இது பாஜகவில் அண்ணாமலையின் அரசியல் வாழ்க்கையின் முடிவு என்று விமர்சித்தனர். கடந்த மே மாதம் நடைபெற்ற, "ஒரு நாடு ஒரு தேர்தல்" கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை. அண்ணாமலை திடீரென டேரி ஃபார்ம் மற்றும் முதலீட்டு நிறுவனம் தொடங்குவதாக அறிவித்தார். இது அவர் "பாஜகவை விட்டு விலகல்" என்ற யூகத்தை கிளப்பியது. அவரது ஆதரவாளர்கள் பாஜகவில் அண்ணாமலை இல்லாதது உயிரிழந்தது போல் உள்ளது" என வருத்தத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் "பாஜக தலைமை மீது எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிறு பிரச்சினைகள் களையப்படும்" எனத் தெரிவித்தார்.பாஜகவின் டெல்லி தலைமை, அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நெல்லையில், அண்ணாமலைக்கு ரசிகர் மன்றம் வைத்தது, புதியத் தொழிலை தொடங்கியது உள்ளிட்ட ரிப்போட் பாஜக தலைமைக்கு சென்றாக கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கோவை, கொடிசியா மைதானத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டின் முதல் நாளில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அதற்கு முன்பாக, கோவை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் சாமிநாதன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அந்த சந்திப்பின்போது கோவாவில் சமீபத்தில் நடைபெற்ற அயர்ன்மேன் போட்டியில் கலந்து கொண்டு நிறைவு செய்த அண்ணாமலை மோடியிடம் எடுத்துக் கூறினார். அதை கேட்ட மோடி அண்ணாமலையில் தோள்களில் தட்டிக்கொடுத்து ‘அயர்ன்மேன்’ எனப் பிரதமர் பாராட்டி ஆசீர்வாதம் வழங்கினார். இதைப்பார்த்த பலரும் அண்ணாமலைக்கு எப்போதும் மவுசுதான். அதை மோடியே பாராட்டி நிரூபித்துள்ளார் என்கிறார்கள்.
இந்த ஒரே ஒரு படம் சொல்லும். அதில் இருக்கும் முகபாவங்கள் சொல்லும். உடல் மொழி சொல்லும் திரு.அண்ணாமலை அண்ணா மீது வைத்திருக்கும் அன்பினை!
தமிழகம் வந்து இறங்கிய பிரதமர் மோடிஜியை வரவேற்க வந்த அண்ணாமலை அண்ணனை பார்த்ததும்.. கையை பிடித்து செல்லமாக தோளில் தட்டி கொடுத்து "அயன்மேன்" என்ற… pic.twitter.com/4CKyGuFpmh— Sk Palanikumar Yadav (@p_nikumar) November 19, 2025
மோடி பாராட்டிய இந்த புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ள அண்ணாமலையின் ஆதரவாளர்கள், ‘‘இந்த ஒரே ஒரு படம் சொல்லும். அதில் இருக்கும் முகபாவங்கள் சொல்லும். உடல் மொழி சொல்லும் அண்ணாமலை அண்ணா மீது மோடி வைத்திருக்கும் அன்பினை! இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள பிணைப்பு வெறும் அரசியல் சார்ந்தது என்று நினைப்பவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்’’ எனக் கூறி வருகின்றனர்.
