நீங்களும் இந்த தவறை செய்யாதீங்க! பழங்களின் முழு சத்தும் கிடைக்க இப்படி சாப்பிடுங்க!
சிலர் பழங்களை அப்படியே சாப்பிடுவார்கள் இன்னூம் சிலரோ ஜூஸ் போட்டு குடிப்பார்கள். ஆனால் பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லதா? அல்லது ஜூஸாக குடிப்பது நல்லதா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
Whole Fruits Vs Juice
பழங்கள் ஆரோக்கியமானவை என்பது நம் அனைவருக்கும் தெரியும். தினமும் நம் உணவு முறையில் பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சிலர் பழங்களை அப்படியே சாப்பிடுவார்கள் இன்னூம் சிலரோ ஜூஸ் போட்டு குடிப்பார்கள். ஆனால் பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லதா? அல்லது ஜூஸாக குடிப்பது நல்லதா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
பழச்சாறுகள் வைட்டமின்கள் இருந்தாலும், முழு பழங்களில் அதாவது தோல் மற்றும் கூழ் காணப்படும் உணவு நார் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இல்லை. குறிப்பாக ஜூஸில் நார்ச்சத்து குறைவாகவே இருக்கும். ஏனெனில் பழங்களில் உள்ள உணவு நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.
Whole Fruits Vs Juice
பழங்களில் இருந்து சாறு எடுக்கும் செயல்முறையானது பழங்களில் இருந்து பெரும்பாலான திரவ உள்ளடக்கத்தை பிரித்தெடுக்கிறது. இதன் விளைவாக, பழச்சாறுகளில் நார்ச்சத்து குறைவாக உள்ளது. சரியான குடல் செயல்பாட்டை பராமரிப்பதில் நார்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் தனிநபர்கள் குறைவான கலோரிகளுடன் முழுமையாக உணர உதவுகிறது.
நார்ச்சத்து நிறைந்த பழங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. மேலும் பழங்கள் சாப்பிடுவதால் உடல் பருமன் மற்றும் இருதய நோய்களின் அபாயங்களைக் குறைக்கின்றன.
அப்ப தேன் சாப்பிட்டால் உடல் எடை குறையாதா? கட்டுக்கதைகளும் உண்மைகளும்!
முழு பழங்களையும் அவற்றின் பழச்சாறுகளையும் உட்கொள்வதில் உள்ள வேறுபாடுள் குறித்து பல ஆய்வுகள் செய்யப்பட்டன. உதாரணமாக, ஒரு நடுத்தர ஆரஞ்சு பழத்தில் சுமார் 12 கிராம் சர்க்கரை உள்ளது, அதே சமயம் ஒரு கப் ஆரஞ்சு சாற்றில் தோராயமாக 21 கிராம் உள்ளது.
பழச்சாறுகளில் உள்ள சர்க்கரையின் இந்த செறிவு இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும் மற்றும் பசியின்மையை அதிகரிக்கும், இது காலப்போக்கில் எடை அதிகரிப்புக்கு பங்களிக்கும்.
Whole Fruits Vs Juice
நீரிழிவு, பிசிஓடி, உடல் பருமன், இதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை சீக்கிரம் சீர்குலைத்து, புதிய பழங்கள்/காய்கறிகளை முறையாக மென்று சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பொதுவாக பசியின்மையை அனுபவிக்கும் போது மட்டுமே ஜூஸ் குடிக்கலாம் என்றும், மற்ற நேரங்களில் பழங்களை உட்கொள்வது மட்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மீனையும் முட்டையையும் ஒன்னா சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன ஆகும்?
Whole Fruits Vs Juice
பழங்களை ஜூஸாக மாற்றும்போது, கரையாத நார்ச்சத்தை இழக்கப்படுகிறது. இது உடலுக்கு தேவையான ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். இது சர்க்கரையை உறிஞ்சுவதை தாமதப்படுத்த உதவுகிறது. எனவே ஜூஸ் குடிக்கும் போது நார்ச்சத்து இல்லாமல், வெறும் சர்க்கரைகள் மற்றும் கலோரிகள் மட்டுமே உடலில் சேரும்.
ஜூஸாக குடிக்கும் போது நார்ச்சத்து மட்டுமின்றி, நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் உயிரியக்கச் சேர்மங்களும் இழக்கப்படுகின்றன. ஆனால் மறுபுறம், முழு பழங்களையும் சாப்பிடும் போது அத்தியாவசிய உணவு நார்ச்சத்தை வழங்குகின்றன. இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகின்றன. மேலும் ஊட்டச்சத்துக்களின் சீரான உட்கொள்ளலை வழங்குகின்றன. எனவே ஜூஸாக குடிப்பதை காட்டிலும் பழங்களாக சாப்பிடுவதே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.