- Home
- Lifestyle
- Health Tips : பயறு வகைகளை 'இப்படி' தான் சாப்பிடனும்!! ஒட்டுமொத்த உடலுக்கும் அப்பதான் சத்துக்கள் ஈசியா கிடைக்கும்
Health Tips : பயறு வகைகளை 'இப்படி' தான் சாப்பிடனும்!! ஒட்டுமொத்த உடலுக்கும் அப்பதான் சத்துக்கள் ஈசியா கிடைக்கும்
இந்த பதிவில் பயிர்களை முளைகட்டி சாப்பிடுவது நல்லதா? அல்லது வேக வைத்து சாப்பிடுவதா? எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று பார்க்கலாம்.

இந்த நவீன காலத்தில் நாவிற்கு சுவையான துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை நோக்கி ஒரு சிலர் ஓடிக்கொண்டிருந்தாலும், மறுபுறம் ஆரோக்கியமான உணவுகளின் தேவையும் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், முளைகட்டிய பயிர்களை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
பயிர் வகைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்வதை விட முளைகட்டிய பிறகு சாப்பிடால் கூடுதல் சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்குமாம். இப்போது பலருடைய கேள்வி என்னவென்றால், பயிறு வகைகளை முளைகட்டி சாப்பிடுவது நல்லதா?௦ அல்லது வேகவைத்து சாப்பிடுவது நல்லதா? இதற்கான பதிலை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
முளைகட்டிய பயிர் பச்சையாக இருப்பதால் அதில் ஈ-கோலி, சல்மோனெல்லா போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் இருக்கும். எனவே பச்சையாக சாப்பிடும் போது அந்த கிருமிகள் காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அது மட்டுமல்லாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்படும், செரிமானம் அடைவதும் கடினமாக இருக்கும். மேலும் நம் உடலானது எல்லா வகையான சத்துக்களையும் அடைய முடியாமல் போகும்.
முளைகட்டிய பயிர் பச்சையாக சாப்பிட்டால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரும் என்பதால், பயிறு வகைகளை வேகவைத்து சாப்பிடுவது தான் சிறந்த வழியாகும். பயிர் வகைகளை வேக வைக்கும் போது வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் கம்மியாக கிடைத்தாலும் அவையே உடலுக்கு போதுமானது தான். வேக வைத்து பயிரை சாப்பிட்டால் செரிமானத்திற்கு ரொம்பவே நல்லது.
ஒருவேளை நீங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைக்க விரும்பினால் அதற்கு சிறந்த தேர்வு. ஏனெனில் முளைகட்டிய பயிர்கள் தான் கலோரிகள் ரொம்பவே கம்மி. அதேசமயம் புரதம் அதிக அளவில் உள்ளன. இது தவிர மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் இருக்கிறது. உடலுக்கு மிகுந்த ஆற்றலை கொடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு கூட ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக முளைகட்டிய பயிரை பச்சையாக கொடுக்காமல் அவித்துக் கொடுக்கலாம்.