Pachai payaru dosa: முளை கட்டிய பச்சை பயறு தோசை மாவு..வெறும் 10 நிமிடத்தில் தயார் செய்து மொறுமொறு தோசை சுடலாம்
Pachai payaru dosai in Tamil: உடல் எடையை குறைத்து, உடல் ஆரோக்கியமாக வைத்து கொள்ள விரும்புபவர்கள் முளை கட்டிய பச்சை பயறு கொண்டு தோசை சுட்டு பாருங்கள். சுவையும், மணமும் வேற லெவலில் இருக்கும்.
உடல் எடையை குறைத்து, உடல் ஆரோக்கியமாக வைத்து கொள்ள விரும்புபவர்கள் முளை கட்டிய பச்சை பயறு கொண்டு தோசை சுட்டு பாருங்கள். சுவையும், மணமும் வேற லெவலில் இருக்கும். அப்படியாக, வெறும் 10 நிமிடத்தில் எப்படி மாவு அரைத்து தோசை சுடுவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.
தேவையான பொருட்கள்:
முளைகட்டிய பச்சைப் பயிறு – ஒரு கப்
பச்சை மிளகாய் – ஒன்று
இரண்டு பல் – பூண்டு
சிறு துண்டு – இஞ்சி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
1. முந்தின நாளே முளை கட்டிய பச்சை பயிறு தயார் செய்து வைத்து கொள்ளுங்கள். பின்னர், இந்த முளை கட்டிய இந்த பச்சை பயிரை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் அரைத்துக் கொள்ளுங்கள்.
2. பின்னர் இதனுடன் ரெண்டு பூண்டு பற்கள், ஒரு இன்ச் அளவிற்கு இஞ்சியை தோலுரித்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் காரத்திற்கு ஒரே ஒரு பச்சை மிளகாய் போட்டுக் கொள்ளுங்கள்.
3. இதனுடன் அரை கப் அளவிற்கு கொஞ்சம் போல் தண்ணீர் விட்டு நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். பிறகு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள்.
4. அவ்வளவுதான், முளைகட்டிய பச்சை பயறு தோசை மாவு ரெடி. இதை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. இதை தினமும் காலையில் செய்து சாப்பிட்டால் உடல் எடை குறைவது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.