Health Tips: டீயுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள கூடாத உணவுகள்..மீறினால், ஆரோக்கியத்திற்கு என்ன பிரச்சனை..?
Health Tips: தேநீருடன் உட்கொள்ளும் சில பொருட்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அவை என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
espressos
நம்மில் பலர் காலையில் எழுந்ததும் காபி, டீ குடித்துவிட்டுதான் உங்கள் எல்லா வேலைகளையும் தொடங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறோம். ஏனெனில், டீ அல்லது காபி குடித்த பிறகுதான் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பது போல உணர்கிறோம். அந்த அளவுக்கு தேநீருக்கென்று பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சிலருக்கு காலையில் டீ கிடைக்காமல் போனால் தலைவலி வந்துவிடும். டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது.
espressos
பல பேச்சிலர்களுக்கு தேநீர் தான் உணவாகவே இருக்கிறது. அலுவலகத்தில் பணிபுரியும் நபர்களுக்கு டீ குடித்தால் தான் பணி செய்ய முடியும் என்ற நிலை கூட சில சமயம் ஏற்படுகிறது. அதிலும் பெரும்பாலானோர், தேநீருடன் ஏதாவது நொறுக்கு தீனிகள் அல்லது பிஸ்கட் சாப்பிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள். எனினும், தேநீருடன் உட்கொள்ளும் சில பொருட்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அவை என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
டீயுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்
டீயுடன் பகோடா பஜ்ஜி சாப்பிடுவது:
மழைக்காலம் வந்தாலே, பக்கோடா, பஜ்ஜி, வடையுடன் டீ குடிக்க மிகவும் பிடிக்கும். ஆனால், கடலை மாவிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை டீயுடன் உட்கொண்டால், அது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து உட்கொள்வதால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவதோடு, வயிறு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படத் தொடங்கும்.
முட்டை
சிலருக்கு டீயுடன் முட்டை சாப்பிடுவது பிடிக்கும். இந்த இரண்டையும் சேர்த்து உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஏனெனில் தேயிலைகளில் இருக்கும் டானிக் அமிலம் முட்டையில் உள்ள புரதத்துடன் கலக்கும் போது, அமிலங்கள் புரோட்டீன் கலவைகளை உருவாக்கி மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் அபாயத்தை அதிகரிக்கும்.
healthy vegetables
பச்சை காய்கறிகள் சூடான தேநீர்:
பச்சை காய்கறிகள் சூடான தேநீருடன் சேர்த்து சாப்பிடவே கூடாது. பொதுவாக நாம் அப்படி சாப்பிடுவதில்லை. ஒருவேளை சாப்பிடும் நேரத்தில் உணவுடன் சேர்த்து டீ எடுத்துக் கொள்பவர்களுக்கு இது பல்வேறு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, தேநீரில் உள்ள டானின்கள் மற்றும் ஆக்சிலேட்டுகள் உடல் இரும்புச் சத்தை உறிஞ்சுவதைத் தடுத்து விடும். அதனால் சாப்பிடும்போது டீயோ அல்லது சாலட் போன்றவையோ எடுத்துக் கொள்ளக் கூடாது.
இனிப்பு பிஸ்கட்
டீயுடன் இனிப்பு பிஸ்கட் சாப்பிடுவதையும் பெரும்பாலானோர் விரும்புவார்கள். தேநீருடன் இனிப்பு பிஸ்கட்களை உட்கொள்வது சர்க்கரையின் அளவை பெரிதும் அதிகரிக்கும். உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகனால், உடல் ஆரோக்கியத்தை பெருமளவு பாதிக்கும்.
டீயுடன் மஞ்சள்:
காலை நேரத்தில் தேநீர் குடிப்பது வழக்கம். ஆனால் தேநீருடன் சேர்த்து மஞ்சள் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.