- Home
- Lifestyle
- Pregnancy Diet : கர்ப்பிணிகளே உஷார்!! 'கருவை' தாங்கும் பெண்கள் சாப்பிடவே கூடாத பழங்கள்!!
Pregnancy Diet : கர்ப்பிணிகளே உஷார்!! 'கருவை' தாங்கும் பெண்கள் சாப்பிடவே கூடாத பழங்கள்!!
கர்ப்ப காலத்தில் சாப்பிடவே கூடாத சில பழங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Fruits Pregnant Women Should Not Eat
கர்ப்ப காலத்தில் பெண்கள் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் அந்த நேரத்தில் அவர்கள் மன மற்றும் உடல் ரீதியாக பல வகையான மாற்றங்களை எதிர் கொள்வார்கள். எனவே கர்ப்ப காலத்தில் அவர்கள் வாழ்க்கை முறை, உணவு, உடை என அனைத்திலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இத்தகைய சூழ்நிலையில், கர்ப்ப காலத்தில் பழங்கள் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. ஏனெனில் அவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளதால் அவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஆற்றலை வழங்கும். குறிப்பாக கருவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆனாலும், கர்ப்ப காலத்தில் சில பழங்கள் சாப்பிடுவது தாய் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் மேலும் கருசிதைவு ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் எந்தெந்த பழங்களை சாப்பிடக்கூடாது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் சாப்பிட கூடாத பழங்கள் :
அன்னாசி பழம் :
கர்ப்பிணிகள் அன்னாசி பழம் சாப்பிடுவது நல்லதல்ல. இதில் இருக்கும் ப்ரோமிலைன் கர்ப்பப்பை சுருக்கத்தை ஏற்படுத்தும் இதன் விளைவாக குறைபிரசவம் ஏற்பட வாய்ப்பு உள்ளன. எனவே கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் அன்னாச்சி பழம் மறந்தும் சாப்பிடக்கூடாது.
திராட்சை பழம் :
திராட்சை சுவையான மற்றும் சத்தான பழம் தான். ஆனால் கர்ப்பிணிகள் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் ரெஸ்வெராட்ரோல் என்னும் தனிமம் உள்ளன. அது கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். எனவே கர்ப்பிணிகள் திராட்சை சாப்பிடும் முன் ஒரு முறை மருத்துவரை அணுகுவது நல்லது.
வாழைப்பழம் :
கர்ப்ப காலத்தில் வாழைப்பழம் சாப்பிடலாம். ஆனால் உங்களுக்கு கர்ப்ப கால சர்க்கரை நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் வாழைப்பழம் சாப்பிட வேண்டாம். ஏனெனில் வாழைப்பழத்தில் லேடெக்ஸ் உள்ளதால், இது ஒவ்வாமை, ஏற்படுத்தும். இதுதவிர உடல் சூடு மற்றும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். எனவே கர்ப்ப காலத்தில் வாழைப்பழம் தவிர்ப்பது நல்லது.
பப்பாளி பழம் :
பப்பாளி பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றாலும் கர்ப்ப காலத்தில் இதை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் உள்ள லேடெக்ஸ் கர்ப்பப்பை சுருக்கம், இரத்தப்போக்கு, கருச்சிதைவை ஏற்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் பப்பாளி பழத்தை சாப்பிட வேண்டாம்.
தர்பூசணி :
தர்பூசணி உடலுக்கு நீர்ச்சத்தை வழங்கும். ஆனால் கர்ப்ப காலத்தில் இரத்தத்தில் சர்க்கரை பிரச்சனை இருக்கும் பெண்கள் தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். இதனால் தாய் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் தர்பூசணி அதிகமாக சாப்பிட வேண்டாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

