- Home
- Lifestyle
- Vegetables for Pregnancy : கர்ப்பிணிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய 5 காய்கறிகள் ! அப்பதான் குழந்தைக்கும் ஏராளமான சத்துக்கள் கிடைக்கும்
Vegetables for Pregnancy : கர்ப்பிணிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய 5 காய்கறிகள் ! அப்பதான் குழந்தைக்கும் ஏராளமான சத்துக்கள் கிடைக்கும்
கர்ப்பிணி பெண்கள் அனைவரும் தங்களது உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில காய்கறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Vegetables for Pregnant Women
கர்ப்பகாலத்தில் சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவது மிகவும் அவசியம். இதனால் கருவில் இருக்கும் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். மேலும் அதன் வளர்ச்சியும் அதிகரிக்கும். ஆகவே, கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் தங்களது உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அப்படி ஆரோக்கியமான உணவுக்கு அடிப்படை தான் காய்கறிகள். எல்லா காய்கறிகளும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், கர்ப்பகாலத்தில் சில காய்கறிகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். அவை என்னென்ன என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
பச்சை இலை காய்கறிகள் :
கீரை, முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, கால்சியம், இரும்புச்சத்து, ஃபோலேட், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் கர்ப்பிணி பெண்ணிற்கும் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் உதவுகிறது. குறிப்பாக பிறப்பு குறைப்பாடுகளை சரி செய்யும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு :
கர்ப்ப காலகட்டத்தில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு கண்டிப்பாக சாப்பிட வேண்டும். வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. இவை கர்ப்பிணியிக்கு தேவையான ஆற்றலை வழங்குவது மட்டுமல்லாமல், குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
பீட்ரூட் :
பீட்ருட்டில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. குறிப்பாக இதில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின் இருப்பதால், உடலில் நோய்யெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
குடைமிளகாய் :
குடைமிளகாய் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சினையை நீக்கும்.
ப்ரோக்கோலி :
ப்ரோக்கோலியில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஃபோலேட் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை கர்ப்பிணியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கும். மேலும் இதில் இருக்கும் ஃபோலேட் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும்.