- Home
- Lifestyle
- Relationship Tips: திருமணத்திற்கு பின் கூகுளிடம் பெண்கள் ரகசியமாக கேட்கும் 'அந்த' கேள்விகள்! பெண்களின் டாப் சர்ச் லிஸ்டில் இருப்பது இதுதான்!
Relationship Tips: திருமணத்திற்கு பின் கூகுளிடம் பெண்கள் ரகசியமாக கேட்கும் 'அந்த' கேள்விகள்! பெண்களின் டாப் சர்ச் லிஸ்டில் இருப்பது இதுதான்!
Newly Married Women Google Searches: புதிதாக திருமணமான பெண்கள் கூகுளில் எந்த விஷயங்களை அதிகம் தேடுகிறார்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Newly Married Women Google Searches
ஒரு பெண்ணுக்கு திருமணம் என்பது அவளது வாழ்க்கையையே மாற்றக்கூடியதாக இருக்கும். திருமணத்திற்குப் பின்னர் ஒரு பெண்ணானவள் புதிய வீடு, புதிய மனிதர்கள், நிறைய பொறுப்புக்களை ஏற்கும் புதிய பயணத்தைத் தொடங்குகிறார். அத்தகையச் சூழலில் அந்த பெண்களின் மனதில் நிறைய கேள்விகள் எழும். இந்த கேள்விகளை அவர்களால் நேரடியாக பிறரிடம் கேட்க முடியாது என்பதால் கூகுளில் பதில் தேடுகிறார்கள். அப்படி திருமணமான பெண்கள் அதிகம் தேடும் கேள்விகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்: Washing Machine Cleaning: வாஷிங் மெஷின்ல தண்ணி சரியா வெளியேற மாட்டிக்குதா? 5 நிமிஷத்துல நீங்களே சரிபண்ணிடலாம்.!
கணவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எப்படி?
திருமணத்திற்குப் பின்னர் ஒவ்வொரு பெண்ணும், தன்னுடைய கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புகிறார். தனக்கும் கணவருக்குமான உறவு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். கணவருடைய விருப்பு வெறுப்பு அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், கணவரின் மனதில் தனக்கென தனியான இடத்தை உருவாக்கவும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக கணவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எப்படி? உறவில் நம்பிக்கையை காப்பாற்றுவது எப்படி? போன்ற கேள்விகளை அதிகம் தேடுகின்றனர்.
இதையும் படியுங்கள்: Old Nighties Reuse Ideas: பழைய நைட்டியை தூக்கிப் போடாதீங்க.! வீட்டுக்கு தேவையான 5 சூப்பர் பொருட்களை செய்யலாம்.!
கணவரை எப்படி சம்மதிக்க வைப்பது?
சமீப காலமாக பல திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. இதற்குக் காரணம் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் தான். குடும்ப உறவில் இருப்பவர்கள் தன் கருத்தை மற்றவரிடம் தைரியமாகவும், வெளிப்படையாகவும் சொல்லும் உரிமையை வழங்க வேண்டும். வாக்குவாதங்கள், சண்டைகள் இல்லாமல் தன் கருத்தை மற்றவருக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும். எனவே பெண்கள் தன் கணவரிடம் சண்டை அல்லது வாக்குவாதம் இல்லாமல் தன்னுடைய கருத்துக்களை எப்படி சொல்லி சம்மதிக்க வைப்பது என்ற வழிமுறைகள் மற்றும் தந்திரங்கள் குறித்து அதிகம் தேடுகின்றனர்.
இதையும் படியுங்கள்: Bay Leaf Benefits: சாதம் வடிக்கும்போது ஒரு பிரியாணி இலை.! இவ்வளவு மருத்துவ நன்மைகள் கிடைக்குமா?
மாமியாரின் அன்பைப் பெறுவது எப்படி?
திருமணமான பெண்களுக்கு கணவருடன் நல்ல உறவு இருக்கும். அதே சமயம் மாமனார் மற்றும் மாமியாரிடம் மோதல் போக்கு இருக்கும். இதன் காரணமாக கணவர் அன்பாக நடந்து கொண்டாலும் வீட்டில் எந்நேரமும் சண்டை மற்றும் சச்சரவுகள் இருக்கும். மேலும் மாமியார் மற்றும் நாத்தனார் போன்றவர்களுடன் ஆரம்பத்தில் நெருங்கி பழகவும் சிரமமாக இருக்கும். எனவே மாமனார் மற்றும் மாமியாரின் அன்பைப் பெறுவது எப்படி? மாமியாருடன் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது எப்படி? போன்ற விஷயங்களை அதிகம் கூகுளில் தேடுகின்றனர்.
இதையும் படியுங்கள்: ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்.! கோடைக்காலத்திற்கு ஏற்ற இந்த 5 சிறந்த பாய் வகைகளை டிரை பண்ணுங்க.!
வீட்டை எப்படி சரியாக நிர்ணயம் நிர்வகிப்பது?
தற்போதைய காலத்தில் சில பெற்றோர்கள், பெண் பிள்ளைகளை மிகவும் சுதந்திரமாகவும், குறைவான பொறுப்புகளுடனும் வளர்க்கின்றனர். திருமணத்திற்கு முன்னர் பல பெண்களுக்கு வாழ்க்கை சுலபமாக இருக்கும். ஆனால் திருமணத்திற்குப் பின்னர் வீட்டுப் பணிகள், சமையல் வேலைகள், அன்றாடப் பொறுப்புகள் திடீரென அதிகரிக்கிறது. இதன் காரணமாக பெண்கள் உடல் அளவிலும், மனதளத்திலும் சோர்வடைகிறார்கள். எனவே நேரத்தை எப்படி கையாளுவது? வீட்டை எப்படி சரியாக நிர்ணயம் நிர்வகிப்பது? போன்ற வழிகளை இணையத்தில் அதிகம் தேடுகின்றனர்.
இதையும் படியுங்கள்: இனி சிலிண்டர் பத்தி கவலை வேண்டாம்.! இந்த அடுப்பு இருந்தா போதும்.! 24 மணி நேரமும் சமைக்கலாம்.! ராக்கெட் அடுப்பு செய்வது எப்படி.? முழு விவரம் உள்ளே.!
குடும்பத்தில் எவ்வாறு சமநிலையை பேணுவது?
பணிக்குச் செல்லும் சில பெண்களுக்கு குடும்ப பொறுப்புகளை கையாள்வது மிகுந்த சிரமமாக இருக்கும். வேலை பார்க்கும் பெண்களுக்கு வேலைக்கும் குடும்பத்திற்கும் இடையே சமநிலையை பராமரிப்பது மிகவும் சவாலான காரியமாக இருக்கும். திருமணம் முடிந்த பிறகு தங்கள் வேலையில் பாதிப்பு ஏற்படுமோ என்கிற பயமும் ஏற்படும். எனவே அலுவலக வேலையுடன் சேர்த்து குடும்பப் பொறுப்புக்கள் மற்றும் குடும்பத்தில் எவ்வாறு சமநிலையை பேணுவது என்பதை பெண்கள் அதிகம் தேடுகின்றனர்.
கர்ப்பம் குறித்த கேள்விகள்
இது மட்டுமல்லாமல் கர்ப்பம் தரிப்பதற்கான சரியான நேரம், குடும்ப கட்டுப்பாடு ஆகியவை குறித்தும் பெண்கள் அதிகம் தேடுகின்றனர். கர்ப்பம் குறித்த விதிகள், அது குறித்த பயங்கள், மலட்டுத்தன்மை குறித்த கேள்விகள், தாய்மையை அடையும் சரியான வயது, கருத்தரிப்புக்கு முன்னர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் போன்றவற்றையும் அதிகம் படித்து தெரிந்து கொள்கின்றனர்.
இந்த விஷயத்தை மறக்காதீர்கள்.!
இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் குறிப்புகள் ஆகியவற்றை படித்து தெரிந்து கொள்வதில் தவறில்லை. ஆனால் ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு குடும்பத்தினரும் வேறுபட்டவர்கள். ஒருவர் கூறும் தீர்வு, மற்றவர்களுக்கு ஒர்க்அவுட் ஆகாமல் போகலாம். எனவே எந்தப் பிரச்சனைக்கும் இணையத்தில் தீர்வு தேடுவதை விட, சம்பந்தப்பட்டவர்களுடன் திறந்த மனதுடன் பேசி தீர்த்துக் கொள்வது சரியான முடிவாகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

