- Home
- Lifestyle
- Smart Gadgets: வெறும் ரூ.5,000-ல் உங்க வீட்டை ஹை-டெக்கா ஆக்கலாம்! இந்த 5 கேட்ஜெட்ஸ் போதும்.!
Smart Gadgets: வெறும் ரூ.5,000-ல் உங்க வீட்டை ஹை-டெக்கா ஆக்கலாம்! இந்த 5 கேட்ஜெட்ஸ் போதும்.!
Smart Home Gadgets Under Rs.5000: ரூ.5000-க்குள்ள உங்க வீட்ட ஹை-டெக்கா மாத்தணுமா? பழைய ஃபேன், லைட்டை கூட ஸ்மார்ட்டா மாத்த முடியும். வீட்டு பாதுகாப்புக்கு என்ன கேட்ஜெட் இருக்கு? இதோ லிஸ்ட்.

Smart Home Gadgets Under Rs.5000
இப்போதெல்லாம் எல்லா இடத்திலும் புதுசு புதுசா டெக்னாலஜி வந்துடுச்சு. அப்படி இருக்கும்போது, உங்க வீடு மட்டும் ஏன் பின்தங்கியிருக்கணும்? உங்க பட்ஜெட்டுக்குள்ளேயே கிடைக்கிற சில கேட்ஜெட்கள் உங்க வீட்டையும் ஹை-டெக்கா மாத்திடும். ஸ்மார்ட் ஹோம் கேட்ஜெட்கள் இப்போ வெறும் ஆடம்பரம் இல்லை, நம்ம வசதிக்கு தேவையான ஒன்றாகிவிட்டது. நல்ல விஷயம் என்னன்னா, இந்த கேட்ஜெட்கள் எல்லாமே 5000 ரூபாய்க்குள்ளேயே கிடைக்குது. இது உங்க வீட்டுக்கு ஒரு மாடர்ன் லுக் கொடுக்குறது மட்டுமில்லாம, அன்றாட வேலைகளையும் ரொம்ப ஈஸி ஆக்கிடும். அப்படிப்பட்ட 5 ஸ்மார்ட் கேட்ஜெட்கள் பத்தி இப்போ பார்க்கலாம்.
Facts: அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?
Smart Plug - ஸ்மார்ட் பிளக்
இன்னமும் உங்க வீட்ல பழைய எலக்ட்ரானிக் பொருட்களை யூஸ் பண்றீங்களா? இனி அந்த கவலை வேண்டாம். 5000 ரூபாய்க்குள்ளேயே உங்களுக்கு நல்ல ஸ்மார்ட் பிளக் கிடைக்கும். இத வெச்சு உங்க வீட்டு ஃபேன், கெட்டில் அல்லது வேற எந்த டிவைஸையும் உங்க மொபைல் மூலமாவே ஆன்/ஆஃப் பண்ணி கண்ட்ரோல் பண்ணலாம். அதாவது, சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் நீங்க எழுந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.
Gold Earrings: பட்ஜெட் விலையில் தங்க தோடு.! ரூ.10,000-க்குள் 6 சூப்பர் டிசைன்ஸ் இதோ.!
Smart LED Bulb - ஸ்மார்ட் LED பல்பு
ஸ்மார்ட் LED பல்புகளை உங்க மொபைல் ஆப் அல்லது வாய்ஸ் கமெண்ட் மூலமா கண்ட்ரோல் பண்ணலாம். ஒருமுறை பெட்ல படுத்துட்டா, லைட்டை ஆஃப் பண்ண திரும்பவும் ஸ்விட்ச் போர்டு வரைக்கும் போக வேண்டாம். ஒரு வாய்ஸ் கமெண்ட் கொடுத்தாலே போதும், லைட் ஆஃப் ஆகிடும். தேவைப்பட்டா, அதோட பிரைட்னஸை கூட கூட்டிக் குறைக்கலாம்.
Baby Swing: இனி கை வலிக்க ஆட்ட வேண்டாம்.! அதிரடி ஆபஃரில் 3 பெஸ்ட் எலக்ட்ரிக் தொட்டில்கள்.!
Smart Security Camera - வைஃபை செக்யூரிட்டி கேமரா
வீட்டு பாதுகாப்புக்கு வைஃபை செக்யூரிட்டி கேமரா பொருத்தலாம். நீங்க அதிக நேரம் வீட்டை விட்டு வெளியே இருப்பீங்கன்னா, உங்க வீடு மற்றும் சுற்றுப்புறத்துல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க இந்த கேமரா ரொம்ப உதவியா இருக்கும். உங்க ஸ்மார்ட்போன்லயே லைவ் வீடியோவை பார்க்கலாம்.
Smart Speaker - ஸ்மார்ட் ஸ்பீக்கர்
5000 ரூபாய்க்குள்ள கிடைக்கிற இந்த வைஃபை ஸ்மார்ட் ஸ்பீக்கர்ல உங்களுக்கு பிடிச்ச பாட்டுகளை கேட்குறது மட்டுமில்லாம, வானிலை அறிக்கை போன்ற தகவல்களையும் தெரிஞ்சுக்கலாம். வாய்ஸ் கமெண்ட் மூலமா இதுல பல வேலைகளை செய்ய முடியும். இது உங்க குடும்பத்துக்கு ரொம்ப பயனுள்ள ஒரு கேட்ஜெட்டா இருக்கும்.
Motion Sensor Light - மோஷன் சென்சார் நைட் லைட்
கரண்ட் பில்லை மிச்சப்படுத்தணும்னு நினைச்சா, மோஷன் சென்சார் லைட்டை ராத்திரி நேரத்துல வீட்டு அலமாரி, ரூம் அல்லது பாத்ரூம்ல பொருத்தலாம். இந்த லைட் பக்கத்துல போனாலே அதுவா ஆன் ஆகிடும், கொஞ்ச நேரத்துல அதுவாவே ஆஃப் ஆகிடும். படிக்கட்டுகள், பாத்ரூம் அல்லது பெட்ரூம்ல இந்த மாதிரி லைட்ஸை பொருத்தலாம். இது ரொம்ப கம்மி பட்ஜெட்ல உங்க வீட்டுக்கு ஒரு ஹை-டெக் லுக்கையும் கொடுக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

