MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இனி சிலிண்டர் பத்தி கவலை வேண்டாம்.! இந்த அடுப்பு இருந்தா போதும்.! 24 மணி நேரமும் சமைக்கலாம்.! ராக்கெட் அடுப்பு செய்வது எப்படி.? முழு விவரம் உள்ளே.!

இனி சிலிண்டர் பத்தி கவலை வேண்டாம்.! இந்த அடுப்பு இருந்தா போதும்.! 24 மணி நேரமும் சமைக்கலாம்.! ராக்கெட் அடுப்பு செய்வது எப்படி.? முழு விவரம் உள்ளே.!

How to Make Rocket Stove in Tamil : சிலிண்டர் தட்டுப்பாடு அல்லது சிலிண்டர் விலை உயர்வு போன்ற காலகட்டங்களில் ராக்கெட் அடுப்பு சிறந்த மாற்றாக அமைகிறது. இந்த அடுப்பை செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

3 Min read
Author : Ramprasath S
Published : Apr 16 2026, 01:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
How to Make Rocket Stove in Tamil
Image Credit : ChatGPT

How to Make Rocket Stove in Tamil

உலக அளவில் நிகழ்ந்து வரும் போர் பதற்றங்கள் மற்றும் பிற காரணங்களால் இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, வீட்டு உபயோக சிலிண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளன. மேலும் 25 நாட்களுக்கு ஒரு முறை சிலிண்டர் புக் செய்யும் முறையும் நடைமுறைக்கு வந்துள்ளது. வணிக சிலிண்டர்களை நம்பி இருக்கும் ஹோட்டல்கள், டீக்கடைகள் மற்றும் பிற தொழில்கள் இதனால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.

27
ராக்கெட் அடுப்பு செய்வது எப்படி
Image Credit : Yotube

ராக்கெட் அடுப்பு செய்வது எப்படி

சிலிண்டர் தட்டுப்பாடு அல்லது கேஸ் விலை உயர்வு போன்ற சமயங்களில் ராக்கெட் அடுப்பு ஒரு சிறந்த மாற்றாக அமைகிறது. குறைந்த விறகுகளைப் பயன்படுத்தி, அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் ஒரு புகையில்லா வகையில் சமைக்க உதவும் ஒரு தொழில்நுட்பமாகும். இது ஒரு பிரத்யேகமான வடிவமைப்பை கொண்ட அடுப்பு. விறகுகளை முழுமையாக எரித்து புகையை குறைத்து வெப்பத்தை நேரடியாக சமையல் பாத்திரத்திற்கு செலுத்துகிறது. இதன் அடுப்பு அறை பொதுவாக L வடிவில் இருக்கும். இதன் காரணமாக காற்றோட்டம் அதிகரிக்கப்பட்டு நெருப்பு தீவிரமாக எரியச் செய்யப்படுகிறது.

Related Articles

Related image1
LPG cylinder : கேஸ் சீக்கிரம் தீர்ந்துடுதா? 20 நாள் எக்ஸ்ட்ரா வரணுமா? இந்த 5 சிம்பிள் டிப்ஸ் ஃபாலோவ் பண்ணுங்க.!
Related image2
LPG-க்கு மாற்றாக வருகிறது PNG.! இனி 24 மணிநேரமும் கேஸ் சப்ளை கிடைக்கப்போகுது.! முழு விவரம் இதோ.!
37
புகையில்லா விறகு அடுப்பு தயாரிக்கும் முறை
Image Credit : Yotube

புகையில்லா விறகு அடுப்பு தயாரிக்கும் முறை

பாரம்பரிய விறகு அடுப்புகளை விட மிகக் குறைந்த அளவு விறகுகளே இதற்கு போதுமானது. சிறிய குச்சிகள், காய்ந்த இலைகள், சிறிய கிளைகளைக் கொண்டு இதில் எளிதாகச் சமைக்கலாம். விறகுகள் முழுமையாக எரிவதால் புகை வெளியேற்றம் மிகவும் குறைவு. இதனால் சுவாசப் பிரச்சனைகள் தடுக்கப்பட்டு சமையலறை மிகவும் தூய்மையாக இருக்கும். வெப்பம் பிற பகுதிகளுக்கு சிதறாமல் பாத்திரத்திற்கு நேரடியாக செல்வதால் கேஸ் அடுப்பிற்கு இணையான வேகத்தில் உணவு சமைக்க முடியும். மேலும் காசு கொடுத்து விறகு வாங்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.

47
ராக்கெட் அடுப்பு வடிவமைப்பு
Image Credit : Yotube

ராக்கெட் அடுப்பு வடிவமைப்பு

நீங்கள் வீட்டிலேயே செங்கற்களை கொண்டு இந்த ராக்கெட் அடுப்பை எளிதாகச் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் 10 முதல் 15 செங்கற்கள். களிமண் அல்லது சிமெண்ட் கலவை. ஒரு இரும்பு சல்லடை அல்லது கம்பி. தரையில் செங்கற்களை கொண்டு ஒரு L வடிவப் பாதையை உருவாக்கவும். இதுதான் காற்று உள்ளே சென்று விறகு எரியும் இடமாகும். அதன் மேல் பகுதியில் ஒரு செங்குத்தான புகை போக்கி போன்ற அமைப்பை ஏற்படுத்தவும். இதை செங்கற்களை அடுக்கி உருவாக்கவும். செங்கற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளை களிமண் அல்லது சிமெண்ட் கொண்டு நன்றாக அடைத்து விடவும். இது காற்று கசிவைத் தடுத்து வெப்பத்தை மேல் நோக்கி செலுத்த உதவும்.

57
ராக்கெட் அடுப்பு பயன்படுத்தும் முறை
Image Credit : Youtube

ராக்கெட் அடுப்பு பயன்படுத்தும் முறை

இதன் மேற்புறத்தில் பாத்திரம் வைப்பதற்கான ஒரு ஸ்டாண்ட் அல்லது மூன்று செங்கற்களை முக்காலி போல வைக்கவும். யூடியூபில் ராக்கெட் ஸ்டவ் செய்வது எப்படி என்று தேடினால் இது போன்ற அடுப்புகளை கட்டும் செய்முறை வீடியோக்களை பார்த்து எளிதாக கற்றுக் கொள்ளலாம். ராக்கெட் அடுப்புகளை மூடிய அறைக்குள் பயன்படுத்தக் கூடாது. நன்கு காற்றோட்டமான வெளிப்புற இடங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீயை கையாளும் பொழுது கவனமாக இருக்கவும். உங்கள் வீடுகளில் சமையலறைக்கு வெளியே பால்கனி போன்ற அமைப்பு இருந்தால் அங்கு இந்த அடுப்பை வைத்துக் கொண்டால் எளிதாக இருக்கும் அல்லது மொட்டை மாடிகளில் இந்த செட்டப்பை அமைத்துக் கொள்ளலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் இந்த அடுப்பை பயன்படுத்தி சமைக்கலாம்.

67
ராக்கெட் அடுப்பின் பயன்கள்
Image Credit : Yotube

ராக்கெட் அடுப்பின் பயன்கள்

இந்த அடுப்பில் பயன்படுத்த நீங்கள் விறகுகள் வாங்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. மரக்கட்டைகள், மரத்துண்டுகள், தேங்காய் ஓடுகள், காய்ந்த இலைகள், விவசாயக் கழிவுகள், தென்னை மட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பாக சமைக்கலாம். இதனால் 50% முதல் 70% வரை விறகு செலவு குறைகிறது. இதன் வடிவமைப்பு வெப்பத்தை ஒருமுகப்படுத்துவதால் சமைப்பதற்கு குறைந்த நேரமே தேவைப்படுகிறது. மேலும் விவசாயக் கழிவுகளை பயன்படுத்துவதால் மரங்களை வெட்டுவது தவிர்க்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்தது. கார்பன் உமிழ்வு மிகக் குறைவு. சிலிண்டர் தட்டுப்பாடு அல்லது மின்சாரத் தடையால் உங்கள் சமையல் பாதிக்கப்படாது. எந்நேரமும் எளிய முறையில் சமைக்கலாம்.

77
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ராக்கெட் அடுப்பு
Image Credit : Yotube

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ராக்கெட் அடுப்பு

அளவில் சிறியதாக இருப்பதால் இதை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். சுற்றுலா, பண்ணை வீடுகள் மற்றும் கிராமப்புறங்களுக்கு இது மிகவும் சிறந்ததாகும். அவ்வபோது அடுப்பின் அடியில் சேரும் சாம்பலை அகற்ற வேண்டும். இது காற்றோட்டத்தை சீராக வைத்திருக்க உதவும். திறந்தவெளி அல்லது நன்கு காற்றோட்டமான இடத்தில் பயன்படுத்துவது நல்லது. பயன்படுத்திய பிறகு அடுப்பை முற்றிலும் அணைத்து விட்டதை உறுதி செய்யவும். சிறு குழந்தைகள் இருந்தால் அடுப்பின் அருகில் விட வேண்டாம். கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இதுபோன்ற எளிய தொழில்நுட்பங்கள் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் கட்டுப்பாடு நிலவும் காலங்களில் தன்னிறைவான சமையலுக்கு வழிவகை செய்கின்றன. உங்கள் வீட்டிலேயே குறைந்த செலவில் இதை செய்து பயன்படுத்துவது பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் சிறந்தது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
எரிவாயு உருளை
வாயு உருளை

Latest Videos
Recommended Stories
Recommended image1
80 வயது வரை இளமை.! 150 வயது வரை ஆயுட்காலம்.! ரகசிய இனக்குழு மக்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் தெரியுமா? இந்த ஒரு விதை தான் காரணமாம்.!
Recommended image2
Now Playing
Kitchen Hacks | இந்த டிப்ஸ் தெரிஞ்சா குக்கிங் ரொம்ப ஈஸி..! இனி 10 நிமிடத்திலேயே சமையல் ஓவர்.!
Recommended image3
Kitchen Hacks: இந்த டிப்ஸ் தெரிஞ்சா குக்கிங் ரொம்ப ஈஸி..! இனி 10 நிமிடத்திலேயே சமையல் ஓவர்.!
Related Stories
Recommended image1
LPG cylinder : கேஸ் சீக்கிரம் தீர்ந்துடுதா? 20 நாள் எக்ஸ்ட்ரா வரணுமா? இந்த 5 சிம்பிள் டிப்ஸ் ஃபாலோவ் பண்ணுங்க.!
Recommended image2
LPG-க்கு மாற்றாக வருகிறது PNG.! இனி 24 மணிநேரமும் கேஸ் சப்ளை கிடைக்கப்போகுது.! முழு விவரம் இதோ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved