MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Property Law: தந்தை உயில் எழுதவில்லை என்றால் சொத்து யாருக்குப் போகும்? மகள்களின் சட்டப்பூர்வ உரிமை என்ன?

Property Law: தந்தை உயில் எழுதவில்லை என்றால் சொத்து யாருக்குப் போகும்? மகள்களின் சட்டப்பூர்வ உரிமை என்ன?

Will a Married Daughter Get a Share in Her Fathers Property: ஒரு தந்தை உயிர் எழுதாமல் இறந்து விட்டால் அவரின் சொத்துக்கள் திருமணமான பெண்ணுக்கு கிடைக்குமா? சட்டம் என்ன சொல்கிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jun 14 2026, 01:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Will a Married Daughter Get a Share in Her Fathers Property
Image Credit : ChatGPT

Will a Married Daughter Get a Share in Her Fathers Property

இந்தியாவைப் பொறுத்தவரை அனைத்து பெற்றோர்களும் தாங்கள் சேர்க்கும் சொத்துக்களை தனக்கு பிறகு தன் பிள்ளைகளுக்கு சேர வேண்டும் என்று விரும்புகின்றனர். உயில்களில் எந்த சொத்துக்கள் மற்றும் எவ்வளவு பங்குகள் யாருக்கு எவ்வளவு சேர வேண்டும் என்பதை தெளிவாக எழுதுகிறார்கள். அவர்கள் இறந்த பிறகு உயில் படி சொத்துக்கள் வாரிசுகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்படுகின்றன. உயில் எழுதுவது என்பது சொத்து தொடர்பான தகராறுகள், நீதிமன்ற வழக்குகளை தவிர்க்க உதவுகிறது. ஆனால் சிலர் உயில் எழுதாமல் இறந்து விடுகிறார்கள். அப்படி இறந்துவிட்டால் இறந்தவரின் சொத்துக்களை யார் பெறுவார்கள்? மகனும், மகளும் அதை எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் அதற்கான சட்ட விதிகள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:  சொத்து பத்திரத்தில் பிழைகள் இருந்தால் அதை சரி செய்ய முடியுமா? அதற்கான சரியான வழிமுறைகள் என்ன? முழு விவரம் இதோ.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சுய சம்பாத்திய சொத்தில் மகளுக்கும் உரிமை உண்டு
Image Credit : Asianet News

சுய சம்பாத்திய சொத்தில் மகளுக்கும் உரிமை உண்டு

ஒரு தந்தையானவர் தான் சுயமாக சம்பாதித்து சேர்த்த சொத்தில் திருமணமான பெண்ணாக இருந்தாலும் சரி, திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களுக்கும் சமமான பங்கு இருக்கிறது. இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005 படி தந்தை சேர்த்த சொத்தில் மகனுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதேபோல மகளுக்கும் உரிமை இருக்கிறது. தந்தை உயில் எழுதாத பட்சத்தில் சட்டபூர்வமான வாரிசுகள் என்று கருதப்படும் நேரடி வாரிசுகளுக்கு சம உரிமை உள்ளது. ஆனால் திருமணம் ஆன பெண்ணின் தந்தை, அவர் சொத்தை வேறு யாருக்காவது உயில் எழுதி வைத்திருந்தால் அதில் பங்கு கேட்க முடியாது. அதே வேளையில் சுய சம்பாத்தியம் இல்லாமல் பரம்பரை சொத்தாக இருக்கும் பட்சத்தில் அதில் அனைவருக்கும் சம பங்கு உள்ளது.

இதையும் படியுங்கள்:  சொத்து பத்திரம் தொலைந்துவிட்டதா? கவலை வேணாம்.! இந்த வழிகளைப் பின்பற்றினால் ஈஸியா வாங்கிடலாம்.!

Related Articles

Related image1
சொத்து பத்திரம் தொலைந்துவிட்டதா? கவலை வேணாம்.! இந்த வழிகளைப் பின்பற்றினால் ஈஸியா வாங்கிடலாம்.!
Related image2
சொத்து பத்திரத்தில் பிழைகள் இருந்தால் அதை சரி செய்ய முடியுமா? அதற்கான சரியான வழிமுறைகள் என்ன? முழு விவரம் இதோ.!
34
விவாகரத்தான பெண் தனது வாரிசுக்கு உரிமை கோரலாம்
Image Credit : AI

விவாகரத்தான பெண் தனது வாரிசுக்கு உரிமை கோரலாம்

விவாகரத்தான ஒரு பெண் தன்னுடைய மகனுக்கு முன்னாள் கணவரின் பூர்வீக சொத்துக்களில் பங்கு இருக்கிறதா என்ற கேள்விகளும் எழுகிறது. வாரிசுரிமைச் சட்டத்தின்படி பூர்வீக சொத்தில் நேரடி வாரிசுகளுக்கும் பங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் விவாகரத்து ஆகியிருந்தாலும், முன்னாள் கணவர் மற்றொரு பெண்ணை மணந்து, அவருக்கு குழந்தைகள் இருந்தாலும், விவாகரத்து பெற்ற பெண்ணின் மகனுக்கும் பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

44
உயில் எழுதி வைப்பது நல்ல முறையாகும்
Image Credit : X/Twitter

உயில் எழுதி வைப்பது நல்ல முறையாகும்

சுயமாக சம்பாதித்து சொத்து சேர்க்கும் தந்தை தன்னுடைய காலத்திற்குப் பிறகு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு உயில் எழுதி வைப்பது நல்ல முறையாகும். உயிரோடு இருக்கும் காலத்திலேயே யாருக்கு எவ்வளவு சொத்து என்பதை தெளிவாக குறிப்பிட்டு எழுதுவது பல வழிகளில் நன்மையை தரும். ஒரு தந்தை சொந்தமாக சம்பாதித்து இரண்டு வீடுகள் வைத்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தால் ஆளுக்கு ஒரு வீடு என்று அவரால் கொடுக்க முடியும். ஆனால் அவர் ஒரு வீட்டில் வசித்து வருகிறார் என்றால், அவர் உயிருடன் இருக்கும் காலம் வரை அந்த வீட்டின் உரிமையாளராக இருந்து அவருடைய காலத்துக்குப் பிறகு அந்த வீடு பிள்ளைகளுக்கு செல்லும் வகையில் உயில் எழுதி வைக்கலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Number 13: விமானங்களில் 13-ம் நம்பர் சீட் ஏன் இல்லை? அந்த எண் அவ்வளவு துரதிர்ஷ்டமானதா?
Recommended image2
Term Insurance Mistakes: டேர்ம் இன்ஷூரன்ஸ் வாங்கும் முன் இந்த 5 விஷயங்களை மறக்காதீங்க.!!
Recommended image3
Good News For Central Employees: ஜூலை மாத சம்பளத்தில் கூடுதல் பணம்? அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அப்டேட்!
Related Stories
Recommended image1
சொத்து பத்திரம் தொலைந்துவிட்டதா? கவலை வேணாம்.! இந்த வழிகளைப் பின்பற்றினால் ஈஸியா வாங்கிடலாம்.!
Recommended image2
சொத்து பத்திரத்தில் பிழைகள் இருந்தால் அதை சரி செய்ய முடியுமா? அதற்கான சரியான வழிமுறைகள் என்ன? முழு விவரம் இதோ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved