- Home
- Lifestyle
- Mosquitoes : வீடு துடைக்குறப்ப தண்ணீர்ல இந்த 2 பொருளை போடுங்க!! கொசுத் தொல்லையே இருக்காது!
Mosquitoes : வீடு துடைக்குறப்ப தண்ணீர்ல இந்த 2 பொருளை போடுங்க!! கொசுத் தொல்லையே இருக்காது!
வீடு துடைக்கும் தண்ணீரில் இந்த இரண்டு பொருள் கலந்து துடைங்க. வீட்டில் கொசு தொல்லை இருக்காது.

Mosquito-Free Home
மழைக்காலம் வந்தாலே வீட்டில் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் கொசு கடிப்பதால் தூக்கம் பாதிக்கப்படும். கொசு கடித்தால் சருமத்தில் சிவத்தல் மற்றும் தாங்க முடியாத அளவிற்கு அரிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல், டெங்கு மலேரியா போன்ற ஆபத்தான நோய்களையும் ஏற்படுத்தும்.
இத்தகைய சூழ்நிலையில் கொசுக்களை இயற்கை முறையில் முற்றிலுமாக அகற்ற வீடு துடைக்கும் தண்ணீரில் இந்த இரண்டு பொருட்களை சேர்க்கவும். இனி வீட்டில் கொசு தொல்லை இருக்கவே இருக்காது.
இலவங்கப்பட்டை
சமையலறையில் கிடைக்கும் இந்த மசாலா பொருள் கொசுக்களை விரட்ட உதவும். இதற்கு கொதிக்கும் தண்ணீரில் 2-3 லவங்கப்பட்டையை சேர்த்து அதை ஒரு வாளியில் ஊற்றி அந்த நீரைக் கொண்டு முழு வீட்டையும் துடையுங்கள். கொசுக்களுக்கு இலவங்கப்பட்டையின் வாசனை பிடிக்காது. எனவே அவை வீட்டிற்குள் வராது. இது தவிர எறும்புகள் மற்றும் சின்ன சின்ன பூச்சிகளும் வீட்டிலிருந்து ஓடி விடும்.
வினிகர்
கொசுக்களை விரட்ட மற்றொரு இயற்கை வழி வினிகர் தான். இதற்கு ஒரு வழி தண்ணீரில் ஒரு கப் வினிகர் கலந்து அந்த நீரைக் கொண்டு வீடை துடைக்க வேண்டும். வினிகரின் வாசனை கொசுக்கள் வீட்டிற்குள் வருவதை தடுக்கும் மற்றும் வீட்டின் தரையையும் சுத்தமாக்கும்.
வாசனை எண்ணெய்
லாவண்டர் போன்ற வாசனை எண்ணெய் கொசுக்களுக்கு பிடிக்காது. எனவே வீடு துடைக்கும் தண்ணீரில் 8-12 சொட்டு வாசனை எண்ணெய் கலந்து வீட்டை துடைத்தால் வீட்டிற்குள் கொசு வரவே வராது. கூடுதலாக வீட்டில் நறுமணம் வீசும்.
குறிப்பு
கொசுக்களை விரட்டுவதற்கு பயன்படுத்தும் இந்த இயற்கை முறைகள் எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. குறிப்பாக பெரியவர்கள், குழந்தைகள், செல்லப்பிராணிகளின் ஆரோக்கியத்திற்கு எந்த தீங்கும் விளைவிக்காது. எனவே மழைக்காலத்தில் இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி கொசுக்களை விரட்டியுங்கள்.