MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஃபிரிட்ஜ் மேல் கண்டிப்பா இந்த 6 பொருட்களை வைக்காதீங்க! ஏன் தெரியுமா?

ஃபிரிட்ஜ் மேல் கண்டிப்பா இந்த 6 பொருட்களை வைக்காதீங்க! ஏன் தெரியுமா?

ஃபிரிட்ஜ் மேல் இருக்கும் அந்த 'கொஞ்சம்' இடத்தை நாம் எல்லாரும் ஒரு மினி ஸ்டோர் ரூம் மாதிரி தான் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால், அங்கு நாம வைக்கும் சில சாதாரண பொருட்கள், ஃபிரிட்ஜின் ஆயுளைக் குறைப்பதோடு நமக்கு பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தலாம்.

1 Min read
Author : Priya Velan
Published : Jun 18 2026, 02:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மருந்து மாத்திரைகள் :
Image Credit : Getty

மருந்து மாத்திரைகள் :

ஃபிரிட்ஜ் இயங்கும் போது அதன் மேல் பகுதி எப்போதும் லேசான வெப்பத்துடன் இருக்கும். இந்த சூட்டில் மருந்து, மாத்திரைகள் அல்லது சிரப்களை வைக்கும் போது, அதிலிருக்கும் வேதிப்பொருட்கள் மாறி, மருந்தின் வீரியம் குறைந்துவிடும். சில நேரங்களில் அது நச்சுத்தன்மையாக மாறவும் வாய்ப்புண்டு!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
பிளாஸ்டிக் கவர்கள், தடிமனான துணிகள் :
Image Credit : Getty

பிளாஸ்டிக் கவர்கள், தடிமனான துணிகள் :

ஃபிரிட்ஜ் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அதன் மேல் தடிமனான துணிகளையோ அல்லது பிளாஸ்டிக் ஷீட்களையோ போடுகிறீர்களா? அது ஃபிரிட்ஜில் இருந்து வெளியேறும் வெப்பத்தைத் தடுத்து, கம்ப்ரஸரை ஓவர்ஹீட் ஆக்கிவிடும். இதனால் கரண்ட் பில் எகிறும், ஃபிரிட்ஜும் சீக்கிரம் பழுதாகும்.

Related Articles

Related image1
Fridge Safety: கோடையில் இந்த தப்பை செஞ்சா உங்க ஃபிரிட்ஜ் வெடிகுண்டு மாதிரி வெடிக்கலாம்! ஜாக்கிரதை
Related image2
Fridge Hack: 5 ரூபாய் ஸ்பான்ஜ்ல இப்படி ஒரு மேஜிக்கா? காய்கறி இனிமே வேஸ்ட் ஆகாது!
36
வாசனை திரவியங்கள் :
Image Credit : Getty

வாசனை திரவியங்கள் :

சமையலறை வாசனைக்காகவோ அல்லது அழகுக்காகவோ எசென்ஷியல் ஆயில் மற்றும் பெர்ஃப்யூம்களை ஃபிரிட்ஜ் மேல் வைப்பதைத் தவிருங்கள். ஃபிரிட்ஜ் மேலிருக்கும் தொடர் வெப்பத்தால், இந்த பாட்டில்களில் அழுத்தம் அதிகரித்து, அவை வெடிப்பதற்கோ அல்லது தீப்பிடிப்பதற்கோ வாய்ப்புகள் அதிகம்.

46
எலக்ட்ரானிக் கேஜெட்டுகள்:
Image Credit : Getty

எலக்ட்ரானிக் கேஜெட்டுகள்:

வீட்டில் இடம் இல்லை என்று வைஃபை ரவுட்டர் அல்லது பவர் பேங்க் போன்றவற்றை ஃபிரிட்ஜ் மேல் வைக்காதீங்க. ஃபிரிட்ஜ் வெளியிடும் எலக்ட்ரோ மேக்னடிக் அலைகள், ரவுட்டரின் சிக்னலைக் குறைக்கும். அதேபோல், ஃபிரிட்ஜ் லேசாக அதிர்வை (Vibration) வெளிப்படுத்துவதால், எலக்ட்ரானிக் பொருட்களின் உள் பாகங்கள் சேதமடையலாம்.

56
சமையல் எண்ணெய் பாட்டில்கள் :
Image Credit : Getty

சமையல் எண்ணெய் பாட்டில்கள் :

ஃபிரிட்ஜ் மேல் பகுதியை எண்ணெய் வைக்கும் இடமாக மாற்றிவிட்டால், அங்குள்ள சூட்டினால் எண்ணெய் சீக்கிரமே "சிக்கு வாடை" (Rancid) அடிக்கத் தொடங்கிவிடும். மேலும், தவறி எண்ணெய் கீழே கொட்டினால், ஃபிரிட்ஜின் ரப்பர் பீடிங் (Gasket) பாழாகி, கதவு சரியாக மூடாமல் போய்விடும்.

66
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், சிப்ஸ் பாக்கெட்டுகள் :
Image Credit : Getty

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், சிப்ஸ் பாக்கெட்டுகள் :

ஃபிரிட்ஜின் மேல் பகுதி எப்போதும் கதகதப்பாக இருப்பதால், பூச்சிகளுக்கும் எலிகளுக்கும் அது மிகவும் பிடித்தமான இடம். அங்கே சிப்ஸ், நூடுல்ஸ் போன்ற பாக்கெட் உணவுகளை வைத்தால், எலிகள் எளிதில் கடித்து உள்ளே அசுத்தம் செய்துவிடும். அதுமட்டுமில்லாமல், அந்த சூட்டில் பேக் செய்யப்பட்ட உணவுகள் மொறுமொறுப்பை இழந்துவிடும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
சமையலறை குறிப்புகள்
வீட்டு அலங்காரம்
பெண்கள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Towel Washing Tips: ஒரு டவலை ரொம்ப வருஷமா யூஸ் பண்றீங்களா? இதை படியுங்கள் முதலில்.! நிபுணர்கள் சொல்ற எச்சரிக்கை இதுதான்.!
Recommended image2
Eye Health: மீன் சாப்பிடுவது கண்களுக்கு நல்லதா? அறிவியல் சொல்வது என்ன?
Recommended image3
Gen Z மைக்ரோ டிடாச்மென்ட்: நவீன மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்க ஜென் ஜி காட்டும் புதிய வழி!
Related Stories
Recommended image1
Fridge Safety: கோடையில் இந்த தப்பை செஞ்சா உங்க ஃபிரிட்ஜ் வெடிகுண்டு மாதிரி வெடிக்கலாம்! ஜாக்கிரதை
Recommended image2
Fridge Hack: 5 ரூபாய் ஸ்பான்ஜ்ல இப்படி ஒரு மேஜிக்கா? காய்கறி இனிமே வேஸ்ட் ஆகாது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved