- Home
- Lifestyle
- Electricity Bill: ஜீரோ வாட்ஸ் பல்பு எவ்வளவு மின்சாரம் இழுக்கும் தெரியுமா? உண்மை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!
Electricity Bill: ஜீரோ வாட்ஸ் பல்பு எவ்வளவு மின்சாரம் இழுக்கும் தெரியுமா? உண்மை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!
Is Zero Watt Bulb Really Zero Power Consumption: ஜீரோ வாட் பல்பு போட்டா கரண்ட் பில்லே வராதுன்னு ஒரு நம்பிக்கை நம்மகிட்ட இருக்கு. ஆனா, அது உண்மையா? அந்த பல்பு உண்மையிலேயே கரண்ட் இழுக்காதா? இந்த உண்மையை தெரிஞ்சிக்கிட்டா நீங்க கண்டிப்பா ஷாக் ஆகிடுவீங்க.

Is Zero Watt Bulb Really Zero Power Consumption
இந்தியால கிட்டத்தட்ட எல்லா வீடுகள்லயும் ராத்திரி நேரத்துல பெட்ரூம்லயோ ஹால்லயோ ஒரு சின்ன பல்பு எரிஞ்சிட்டே இருக்கும். இதைத்தான் நாம 'ஜீரோ வாட் பல்பு'னு சொல்றோம். ஆனா, இது உண்மையிலேயே ஜீரோ கரண்ட்தான் எடுக்குதா? இந்த நம்பிக்கைக்குப் பின்னால இருக்கிற உண்மையை இப்போ பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்: Water Bottle: வாட்டர் பாட்டிலில் இந்த கோடுகள் ஏன் இருக்கு? இது வெறும் டிசைன் இல்ல, செம இன்ஜினியரிங் ட்ரிக்!
ஜீரோ கரண்ட் சாத்தியமா?
ஜீரோ கரண்ட்ங்கிறது சாத்தியமே இல்லாத ஒண்ணு. ஒரு பல்பு எரியுதுன்னா, அது கண்டிப்பா கரண்ட்டை எடுத்துக்குதுனு அர்த்தம். இது ரொம்ப சிம்பிளான அறிவியல். கரண்ட்டே எடுக்காம எந்த பல்பும் எரியாது. அதனால, 'ஜீரோ வாட்'ங்கிறது வெறும் பேரு மட்டும்தான்.
இதையும் படியுங்கள்: Bird Flight: பறவைகள் ஏன் 'V' வடிவத்தில் பறக்குது? இதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய சயின்ஸ் இருக்கா!
அப்போ எப்படி இந்த பேர் வந்துச்சு?
இந்தப் பேருக்குப் பின்னால ஒரு பெரிய ஃப்ளாஷ்பேக் இருக்கு. அந்தக் காலத்துல நம்ம வீடுகள்ல அனலாக் மீட்டர் இருந்துச்சு. அதுல ஒரு தட்டு சுத்தும், மீட்டர் முள் நகரும். அந்தப் பழைய மீட்டரால ரொம்ப கம்மியான கரண்ட் பயன்பாட்டைக் கண்டுபிடிக்க முடியாது. வீட்டுல ஃபேன், டிவி எல்லாத்தையும் ஆஃப் பண்ணிட்டு, இந்த சின்ன பல்பு மட்டும் போட்டா, மீட்டர் முள் நகரவே நகராது. அதைப் பார்த்துட்டு, 'அட, இதுக்கு கரண்ட் பில்லே வராது போல'னு மக்கள் நினைச்சுக்கிட்டாங்க. அப்படித்தான் இதுக்கு 'ஜீரோ வாட் பல்பு'னு பேர் உருவாச்சு.
இதையும் படியுங்கள்: Ship: லட்சக்கணக்கான டன் எடை கொண்ட கப்பல்கள் எப்படி கடலில் மிதக்கிறது? வியப்பூட்டும் அறிவியல்.! 99% பேருக்கு இது தெரியாது.!
டிஜிட்டல் மீட்டர் வந்ததும் மொத்த சீனும் மாறிடுச்சு!
ஆனா இப்போ காலம் மாறிடுச்சு. பழைய அனலாக் மீட்டர்களுக்கு பதிலா டிஜிட்டல் மீட்டர்ஸ் வந்துடுச்சு. இந்த புது டிஜிட்டல் மீட்டர்ஸ் ரொம்ப ஷார்ப்பா வேலை செய்யும். ரொம்ப குறைவான கரண்ட் பயன்பாட்டைக் கூட இது ஈசியா கண்டுபிடிச்சிடும். அதனால, நீங்க ஜீரோ வாட் பல்ப் போட்டா கூட, டிஜிட்டல் மீட்டர்ல ரீடிங் ஓடும். கரண்ட் பில்லும் கொஞ்சமா ஏறும்.
இதையும் படியுங்கள்: Hotel Safety Tips: ஹோட்டல் அறைக்குள் போனதும் பெட்டுக்கு அடியில பாட்டில உருட்டி விடுங்க! 99% பேருக்கு இந்த சேஃப்டி ட்ரிக் தெரியாது.!
அப்போ இதுல உண்மையான வாட்ஸ் எவ்வளவு?
நாம பயன்படுத்துற பழைய ஜீரோ வாட் பல்புகள் உண்மையில 10-ல இருந்து 15 வாட்ஸ் வரைக்கும் கரண்ட் எடுக்கும். சில பல்புகள் 5 வாட்ஸ் எடுத்தாலும், அது எப்பவுமே ஜீரோ வாட் கிடையாது. ஆனா, இப்போ வர்ற நவீன LED ஜீரோ வாட் பல்புகள் 0.3-ல இருந்து 1 வாட் வரைக்கும்தான் கரண்ட் எடுக்குது. இது பழைய பல்புகளை விட ரொம்பக் குறைவு, ஆனா ஜீரோ கிடையாது.
இதையும் படியுங்கள்: Petrol Bunk: இந்தியாவின் முதல் பெட்ரோல் பங்க்! அப்போலாம் இப்படித்தான் பெட்ரோல் நிரப்புவாங்களாம்.!
அப்போ LED ஜீரோ வாட் பல்புக்கு மாறலாமா?
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

