Soaked vs Dry Dates : பேரிச்சம்பழம் இப்படிதான் சாப்பிடனுமா? அட! இது தெரியாம போச்சே!
பேரிச்சம்பழத்தை அப்படியே சாப்பிடணுமா? அல்லது ஊறவைத்து சாப்பிடனுமா? எப்படி சாப்பிட்டால் அதிக நன்மை பயக்கும் என்று இங்கு காணலாம்.

Soaked vs Dry Dates
இயற்கை நமக்கு தந்த வரப் பிரசாதம் தான் பேரிச்சம்பழம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த பேரிச்சம்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நம்மை விடுவிக்கும். இதனால் தான் தினமும் காலையில் 4-5 பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டுமென்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் பேரிச்சம் பழத்தை அப்படியே சாப்பிடவது நல்லதா? அல்லது தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது நல்லதா? எது அதிக நன்மை பயக்கும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உலர் பேரிச்சம் பழத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் :
பேரிச்சம் பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளா நிறைந்துள்ளதால் அவை உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கிறது. சோர்விலிருந்து நம்மை விடுவிக்கிறது. எனவே உடல் பலவீனமாக இருக்கும்போது இதை அப்படியே சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்க உலர்ந்த பேரிச்சம்பழம் தான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுபோல உலர்ந்த பேரிச்சம்பழத்தில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், அவை எலும்புகளை வலுப்படுத்தும் மற்றும் இரத்த சோகையை தடுக்கும். ஆனால் உலர்ந்த பேரிச்சம்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வாயு, மலச்சிக்கல் பிரச்சனையை அதிகரிக்கும்.
ஊறவைத்த பேரிச்சம் பழத்தின் நன்மைகள் :
- பேரிச்சம் பழத்தை தண்ணீரில் அல்லது பாலில் ஊற வைத்தால் எளிதில் ஜீரணம் ஆகிவிடும்.
- ஊற வைத்த பேரிச்சம்பழத்தில் சர்க்கரையானது குறைவாகவே இருக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் தயக்கமின்றி சாப்பிடலாம். ஆனால் மிதமான அளவில் மட்டுமே.
- ஊறவைத்த பேரிச்சபழம் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை குறைக்க உதவுகிறது.
- தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த 4 பேரிச்சபழத்தை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரட்டிப்பாக கிடைக்கும். மேலும் உடலானது ஊட்டச்சத்துக்களை வேகமாக உறிஞ்ச உதவும்.
- வாயு, நெஞ்செரிச்சல், செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு ஊற வைத்த பேரிச்சம்பழம் தான் சிறந்த தீர்வு.
எது நல்லது?
உலர்ந்த மற்றும் ஊறவைத்த பேரிச்சம்பழம் இரண்டுமே ஆரோக்கியமானது தான். இரண்டு வெவ்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளன. உங்களது உடல்நிலை, தேவை பொறுத்து நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். உடனடி ஆற்றல் உடலை சூடாக வைக்க உலர்ந்த பேரிச்சம்பழம் தான் சிறந்தது. செரிமானத்தை எளிதாக ஊறவைத்த பேரிச்சம்பழம் சாப்பிடலாம். எனவே உங்களது விருப்பத்திற்கு ஏற்ப பேரிச்சம்பழத்தை எப்படி வேணுமானாலும் சாப்பிடுங்கள்.