- Home
- Lifestyle
- Dates : எச்சரிக்கை! பேரிச்சம் பழம் 'இப்படி' இருந்தா சாப்பிடாதீங்க.. உடல்நல பிரச்சனைகள் வரும்
Dates : எச்சரிக்கை! பேரிச்சம் பழம் 'இப்படி' இருந்தா சாப்பிடாதீங்க.. உடல்நல பிரச்சனைகள் வரும்
பேரீச்சம் பழத்தில் பூஞ்சைகள் இருப்பதால் அதை சாப்பிடும் முன் சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் பல உடல்நிலை பிரச்சினைகளுக்கு ஆளாவீர்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பேரிச்சம்பழம் நம்முடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் பல அத்தியவாசிய தாதுக்கள் செரிமானம், இதயம் மற்றும் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. இதனால்தான் தினமும் 2 பேரிச்சம்பழம் கண்டிப்பாக சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பேரிச்சம் பழத்தில் ஏராளமான ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளதால் அவை புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்களின் அபாயத்தை குறைக்கவும், உடலில் இருக்கும் செல்களை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, பேரிச்சம் பழத்தில் மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் அவை எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வருவதை தடுக்கும்.
இப்படி பல ஆரோக்கிய நன்மைகளை நிறைந்த பேரிச்சம்பழத்தை சாப்பிடுவதற்கு முன் கண்டிப்பாக சரிப்பார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் அதில் பூஞ்சைகள் மறைந்துள்ளதால், அதை சாப்பிட்டால் பல உடல்நல பிரச்சினைகள் வரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே நீங்கள் எப்போது பேரிச்சம்பழத்தை சாப்பிட்டாலும் அதை சாப்பிடுவதற்கு முன் இரண்டு துண்டாக வெட்டி உள்ளே பூஞ்சைகள் இருக்கிறதா.. இல்லையா? என்பதை பார்க்கவும். இதனால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க முடியும்.
எப்படி கண்டறிவது? : பேரிச்சம்பழத்தை சுற்றி அல்லது அதன் உள்ளே கருப்பு, வெள்ளை, சாம்பல் அல்லது பச்சை நிறத்தில் புள்ளிகள் இருந்தால் அதை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். மேலும் பேரிச்சம்பழத்தில் ஒரு விதமான துர்நாற்றம் அல்லது புளித்த வாசனை வீசினால் அது கெட்டுப் போய்விட்டது என்று அர்த்தம்.
பேரிச்சம் பழத்தில் பூஞ்சை ஏன் வருகிறது? : பேரிச்சம் பழத்தில் பூஞ்சைகள் வருவதற்கு முக்கிய காரணம் அதில் அதிகமாக இருக்கும் சர்க்கரை மற்றும் ஈரப்பதம் தான். அதுபோல அதிக அமிலத்தன்மை நிறைந்த உணவுகளிலும் பூஞ்சைகள் அதிகமாக வளருமாம்.
பூஞ்சையால் பாதிக்கப்பட்ட பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்? : பேரிச்சம்பழத்தில் பூஞ்சை இருந்தால் அதை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.