MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • நீங்க இந்த '6' விஷயம் பண்ற பெற்றோரா? அப்போ குழந்தையை நல்ல வளர்க்குறீங்கனு அர்த்தம் 

நீங்க இந்த '6' விஷயம் பண்ற பெற்றோரா? அப்போ குழந்தையை நல்ல வளர்க்குறீங்கனு அர்த்தம் 

பெற்றோர் தங்கள் குழந்தைகளை நன்றாக வளர்ப்பதற்கான 6 விஷயங்களை குறித்து இங்கு காணலாம்.  

2 Min read
Author : Kalai Selvi
| Updated : May 04 2025, 07:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Six Signs You Are Doing Good At Parenting : குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோருக்கு மிகப்பெரிய பொறுப்பு. எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல், எல்லா சூழ்நிலைகளிலும் குழந்தைகள் உங்களிடம் வர முடிந்தால் அது நிச்சயமாக நல்ல உறவாக இருக்கும். ஆனால் அதற்கும் சில எல்லைகள் உண்டு. இந்தப் பதிவில் சிறந்த பெற்றோர் செய்யும் 6 விஷயங்கள் குறித்து காணலாம். 

25
நல்ல பெற்றோருக்குரிய குறிப்புகள்

நல்ல பெற்றோருக்குரிய குறிப்புகள்

குழந்தைகள் எந்த பயமுமின்றி பெற்றோரிடம் மனம் திறந்து பேச முடிந்தால் அது நிச்சயம் நல்ல அறிகுறி. பெற்றோர் கேள்விகள் கேட்கும்போது அல்லது பேச ஆரம்பிக்கும்போது குழந்தைகள் தங்களுடைய மனம் திறந்து உண்மையை பேசினால் பெற்றோராக நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள். பொதுவாக  குழந்தைகள் தங்களுடைய கனவுகள், பயங்கள், நம்பிக்கைகள் குறித்து வெளிப்படுத்தினால் உணர்வுரீதியாக பெற்றோரிடம் பாதுகாப்பாக உணர்வதாக அர்த்தம். இது பெற்றோருக்கும் குழந்தைக்கும் இருக்க வேண்டிய மிக முக்கியமான விஷயமாகும். வீட்டில் எவ்வளவு பிரச்சனைகள், துயரங்கள் இருந்தாலும் அதன் நடுவில் கொஞ்சம் மகிழ்ச்சியும் இருக்க வேண்டும். எவ்வளவு கடினமான நாளிலும் கூட அதை புன்னகையுடன் கையாள தெரிந்த பெற்றோர் குழந்தைகளை பாதுகாப்பாக உணர செய்வார்கள். இது ஆரோக்கியமான விஷயம். முழுக்க சோகமாக இருக்காமல் மகிழ்ச்சியும் தேவை. 

Related Articles

Related image1
பெற்றோர் குழந்தைகள் முன் இதை பண்ணாதீங்க; சாணக்கியர் அட்வைஸ் 
35
தவறுகளுக்கு எந்த இடம்?

தவறுகளுக்கு எந்த இடம்?

குழந்தைகள் தங்களுடைய தவறுகளை குறித்து வெட்கப்படாமல், பயப்படாமல் பேசக்கூடிய சூழலை பெற்றோர் உருவாக்கி தர வேண்டும். பெற்றோர் தங்களுடைய தவறை திருத்தவும் தயாராக இருக்கவேண்டும். குழந்தை பெற்றோரிடம் வந்து தான் செய்த தவறை ஒப்புக்கொண்டால் அது அவர்களுடைய உணர்ச்சி நுண்ணறிவை காட்டுகிறது. இது குழந்தைகளை நீங்கள் பாதுகாப்பாக உணர செய்ததன் வெளிப்பாடு. அவர்களுடைய தவறு சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்படும் என்பதை அவர்கள் புரிந்து இருக்கிறார்கள். வெறும் கீழ்படிதலை மட்டுமின்றி பொறுப்பையும் குழந்தைகளுக்கு கற்பிப்பது அவசியம். 

இதையும் படிங்க: பெற்றோரே! உங்க குழந்தைக்கு மன அழுத்தம் இருக்கா? இந்த விஷயத்தை கவனிங்க!! 

45
பெற்றோர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும்

பெற்றோர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும்

மன்னிப்பு என்பது இருதரப்பிலிருந்து வரக்கூடியது. குழந்தைகள் மன்னிப்பு கேட்பது போல பெற்றோரும் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்த வேண்டும். பெற்றோர் வலிமையானவர்களாக, சரியானவர்களாக இருப்பது அவசியம். அதே நேரத்தில் மன்னிப்பு கேட்க தயங்காத மனிதர்களாகவும் இருப்பது அவசியம். இது குழந்தைகளிடம் மரியாதை என்பது ஒருதலைபட்சமானது என்ற எண்ணத்தை விளக்கி புரிதலை ஏற்படுத்தும். குழந்தைகளும் கனிவுடன் கருணையுடனும் நடந்து கொள்வார்கள். 

இதையும் படிங்க:  குழந்தைங்க தூங்க அடம் பிடிக்குறாங்களா? இந்த '1' விஷயம் பண்ணா சீக்கிரமே தூங்கிடுவாங்க!! 

55
குழந்தைகளின் வளர்ச்சி தனித்துவமானது

குழந்தைகளின் வளர்ச்சி தனித்துவமானது

- மதிப்பெண்கள், தோற்றம், திறமை உள்ளிட்ட எந்த விஷயத்திலும் உங்களுடைய குழந்தையை  பிற குழந்தைகளோடு ஒப்பிடாத பெற்றோராக இருந்தால் நிச்சயம் சரியான பாதையை தான்  தேர்ந்தெடுத்துள்ளீர்கள். குழந்தைகளின் வளர்ச்சி தனித்துவமானது. அவர்கள் சிறந்தவர்களாக வளர மற்றவர்களோடு ஒப்பிடக் கூடாது. 

- நீங்கள் குழந்தைகளிடம் மிகவும் கடுமையாக மட்டும் நடந்து கொள்வது சரியான அணுகுமுறை அல்ல. ஒரு சிறு தவறுக்குப் பிறகு பெற்றோரின் கடமையாக நீங்கள் கண்டிப்பாக நடந்து கொண்டிருப்பீர்கள். அதன் பின்னர் குழந்தை உங்களிடம் வந்து அருகே அமர்ந்தால் பேச முயற்சி செய்தால் அதை தடுக்காமல் அவர்களிடம் உரையாடுங்கள். இது குழந்தையின் சுய மதிப்பை வளர்க்கக்கூடிய வழிமுறையாகும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
பெற்றோர் ஆலோசனை
பெற்றோர் குழந்தை உறவுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Related Stories
Recommended image1
பெற்றோர் குழந்தைகள் முன் இதை பண்ணாதீங்க; சாணக்கியர் அட்வைஸ் 
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved