- Home
- Lifestyle
- மூக்கில் கரும்புள்ளியா? இனி பார்லர் போகாதீங்க... கிச்சனில் இருக்கும் இந்த ஒரு பொருள் போதும்!
மூக்கில் கரும்புள்ளியா? இனி பார்லர் போகாதீங்க... கிச்சனில் இருக்கும் இந்த ஒரு பொருள் போதும்!
மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் (Blackheads) முகத்தின் அழகையே கெடுத்து விடுகிறதா? பார்லருக்குப் போய் காசை கரியாக்காமல், உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் மேஜிக் பொருட்களை வைத்தே இரண்டே நாட்களில் மூக்கை பளிச்சென்று மாற்றலாம்.

ஓட்ஸ் மற்றும் தயிர் ஸ்க்ரப்
ஓட்ஸை மிக்ஸியில் லேசாக கரகரப்பாக அரைத்து, அதனுடன் கொஞ்சம் புளித்த தயிர் சேர்த்து பேஸ்ட் செய்யுங்கள். இதை மூக்கின் மீது தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து கழுவுங்கள். ஓட்ஸ், துவாரங்களில் உள்ள அழுக்கை உறிஞ்சும், தயிர் சருமத்தை சாஃப்ட் ஆக்கும்.
வீட்டிலேயே பீல்-ஆஃப் மாஸ்க்!
முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து மூக்கில் தடவுங்கள். அதன் மேல் ஒரு மெல்லிய டிஷ்யூ பேப்பரை ஒட்டி, மீண்டும் அதன் மேல் வெள்ளைக்கருவைத் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து அது நன்றாகக் காய்ந்ததும், கீழிருந்து மேல்நோக்கி டிஷ்யூவை உரித்து எடுத்தால்... பிளாக்ஹெட்ஸ் மொத்தமாக டிஷ்யூவோடு வந்துவிடும்!
பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு
ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் ஆக்குங்கள் (லேசாக நுரைக்கும், பயப்பட வேண்டாம்). இதை மூக்கில் தடவி 2 நிமிடத்தில் கழுவி விடுங்கள். இது பிளாக்ஹெட்ஸை வேரோடு தளர்த்தி வெளியேற்றும். (குறிப்பு: சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் இதைத் தவிர்க்கலாம்).
தக்காளி-அரிசி மாவு ஸ்க்ரப்!
தக்காளி பழத்தை பாதியாக வெட்டி, அதை பச்சரிசி மாவில் டிப் செய்து கொள்ளுங்கள். அதை அப்படியே மூக்கின் மீது வட்ட வடிவில் (Circular motion) நன்றாக தேய்க்கவும். தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், அரிசி மாவின் கரகரப்பு தன்மையும் கரும்புள்ளிகளை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடும்.
இலவங்கப்பட்டை தூள் மற்றும் தேன்
ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டை தூளுடன் (Cinnamon powder) சுத்தமான தேன் கலந்து மூக்கில் தடவி 10 நிமிடம் ஊற விடுங்கள். பட்டத்தூள் சரும துவாரங்களை சுருங்கச் செய்யும், தேன் புதிய பிளாக்ஹெட்ஸ் வராமல் தடுக்கும் ஆன்டி-பாக்டீரியல் அரணாகச் செயல்படும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

