warts removal: உடலில் இருக்கும் மருக்களை விரட்ட 5 சூப்பரான வீட்டு வைத்தியம்!
உடலில் ஆங்காங்கே இருக்கும் மருக்களால் கவலையா? வலிக்காமல், தழும்பு இல்லாமல் உடலில் இருக்கும் மருக்களை உதிர செய்வதற்கு வீட்டில் இருக்கும் எளிமையான சில பொருட்களை பயன்படுத்தினாலே போதும். அப்படி 5 சூப்பரான வீட்டு வைத்திய முறைகள் இதோ...

அன்னாசிப்பழ சாறின் மேஜிக்
அன்னாசிப்பழத்தில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ‘புரோமிலைன்’ (Bromelain) என்ற என்சைம் மருக்களை சுருக்க வல்லது. தினமும் ஒரு துண்டு புதிய அன்னாசிப்பழத்தை மருவின் மீது தேய்த்து வாருங்கள். சில நாட்களில் அது தானாகவே காய்ந்து உதிர்ந்துவிடும்!
'பேக்கிங் சோடா' + விளக்கெண்ணெய்!
பேக்கிங் சோடாவுடன் சில துளிகள் விளக்கெண்ணெய் (Castor Oil) கலந்து கெட்டியான பேஸ்ட் ஆக்குங்கள்.இதை மருவின் மீது தடவி, இரவு முழுவதும் 'பான்ட்-எய்ட்' (Band-aid) போட்டு மூடி வையுங்கள். மருவின் வேர் வரை சென்று அதை காலி செய்யும் எளிய வழி இது!
பூண்டுப் பல்லின் பவர்!
பூண்டில் உள்ள 'அலிசின்' (Allicin) என்ற ஆன்டி-வைரல் பொருள் மருக்களை உருவாக்கும் வைரஸை வேரறுக்கும். ஒரு பூண்டுப் பல்லை நசுக்கி மருவின் மீது வைத்து, பிளாஸ்திரி ஒட்டி விடுங்கள். 20 நிமிடங்களில் கழுவி விடலாம். (சருமம் sensitive ஆக இருந்தால் கவனமாக இருக்கவும்).
வாழைப்பழத் தோலை தூக்கி வீசாதீங்க!
வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை குப்பையில் வீசுகிறோம். ஆனால், அதில் மருக்களை நீக்கும் என்சைம்கள் ஏராளம். வாழைப்பழத் தோலின் உள்பகுதியை மருவின் மீது வைத்து தேய்க்கவும் அல்லது இரவு முழுவதும் தோலை மருவின் மீது வைத்து கட்டி வைக்கவும்.
ஆப்பிள் சைடர் வினிகர் (ACV)
மருக்களை உதிர்ப்பதில் இது ஒரு கிங்! இதிலுள்ள அசிட்டிக் அமிலம் மருவின் திசுக்களை அழிக்கும். பஞ்சில் சில துளிகள் ACV-ஐ நனைத்து, மருவின் மீது வைத்து ஒட்டி விடுங்கள். சில நாட்களிலேயே மரு கருப்பாக மாறி உதிர்ந்து போவதை நீங்களே பார்க்கலாம்.
மருக்கள் வராமல் தடுக்க
மருக்கள் வராமல் தடுக்க உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகமாக வைத்திருக்க வேண்டும். வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். மருக்களை ஒருபோதும் நகத்தாலோ அல்லது பிளேடாலோ கட் செய்ய முயற்சிக்காதீர்கள்! அது மற்ற இடங்களுக்கும் பரவிவிடும்.

