சிரிக்குறப்ப கன்னத்தில் குழி விழுந்தால் அழகுனு நினைச்சீங்களா? இந்த நோயா இருக்கலாம்
சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழ என்ன காரணம் என இங்கு காணலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
Reason Behind Dimples : கன்னத்தில் குழி விழும் நபர்கள் பார்ப்பதற்கே அழகாக தெரிவார்கள். கன்னக் குழி அழகியலாக கருதப்படுகிறது. ஆனால் ஏன் எல்லோருக்கும் கன்னத்தில் குழி விழுவதில்லை. ஒரு சிலருக்கு மட்டும் விழுவது ஏன்? இந்தப் பதிவில் அதை குறித்து காணலாம்.
கன்னத்தில் குழி விழுவது நோயின் அறிகுறி என்பதை நீங்கள் அறிவீர்களா? இதை தசை குறைபாட்டின் (muscle deficiency) வெளிபாடு என்கிறார்கள். முகத்தில் இருக்கும் ஜிகோமாடிகஸ் என்ற தசை தொடர்புடையதுதான் கன்னத்தில் விழும் குழி.
கன்னத்தில் குழி விழுவது சிலருக்கு பரம்பரை பரம்பரையாக கடத்தப்படுகிறது. மரபுவழியாக சிலருக்கு கன்னத்தில் குழிவிழும். சிலருடைய முகத்தில் தசைகள், எலும்புகள் சரியாக பொருந்தாமல் இருப்பதால் இது ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.
கன்னத்தில் குழி விழுவதை பெரிய குறைபாடாக கருதத் தேவையில்லை. இது தீவிரமான நோயும் கிடையாது. வெறும் தசை குறைபாடுதான். இதனால் உடலுக்கு எந்த கெட்ட விளைவுகளும் ஏற்படாது. அதனால் கவலைப்படத் தேவையில்லை.