- Home
- Lifestyle
- வீட்டிற்குள் கெட்ட சக்தி உலா வருதா..? ஒரே ஒரு எலுமிச்சை பழம் போதும், அமானுஷ்ய கெட்ட சக்திகளை விரட்டி அடிக்கும்
வீட்டிற்குள் கெட்ட சக்தி உலா வருதா..? ஒரே ஒரு எலுமிச்சை பழம் போதும், அமானுஷ்ய கெட்ட சக்திகளை விரட்டி அடிக்கும்
Vastu tips: வீட்டில் அமானுஷ்ய கெட்ட சக்திகளை விரட்டி அடிக்கும் எலுமிச்சை பழம்..எப்படி பயன்படுத்தினால், என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

Vastu tips
கடவுள் பூமியில் இருப்பது உண்மை என்றால், கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு கெட்ட சக்தி இந்த பூமியில் இருப்பது உண்மை ஆகும். ஆம், வீட்டில் எப்போதும் சிலருக்கு உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். என்னதான் மருத்துவரை பார்த்து சிகிக்சை மேற்கொண்டாலும் நம்மை விட்டு பிரச்சனை நீங்கவே நீங்காது. சிலருக்கு பண இழப்பு , சிலருக்கு தொழில் இழப்பு இருக்கும். அதற்கு அமானுஷ்ய கெட்ட சக்திகள் வீட்டில் உலா வருவது, கழிப்பை தாண்டுவது, கண் திருஷ்டி, போன்றவை காரணம் என்பார்கள். என்னதான் கோடி கோடியாய் பணம் செலவழித்தாலும் இதற்கு தீர்வே இருக்காது. எனவே, இதை சரி செய்ய எலுமிச்சம் பழத்தை வைத்து ஒரு சின்ன பரிகாரம் செய்தால் இந்த பிரச்சனை உடனடியாக தீரும்.
Vastu tips
இதற்கு நீங்கள் முதலில் கரும்புள்ளிகள் இல்லாத ஒரே பழுத்த எலுமிச்சம் பழத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த எலுமிச்சம் பழத்தை உங்களுடைய உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு குலதெய்வத்தை நினைத்து பூஜையறையில் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பிராத்தனையில், கண் திருஷ்டி அல்லது காத்து கருப்பு போன்ற செய்வினைப் பிரச்சினை எது இருந்தாலும், அது என்னை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று வேண்டி கொள்ள வேண்டும். பிறகு, அந்த எலுமிச்சை பழத்தை எடுத்து உங்கள் உடம்பில் ஏதேனும் ஒரு இடத்தில் இருக்குமாறு வைத்து கொள்ள வேண்டும்.
Vastu tips
பின்னர், எலுமிச்சம் பழத்தை கொண்டு கண்ணுமு தெரியாத இடத்தில் தூக்கி போட வேண்டும். இல்லையென்றால், ஊருக்கு ஒதுக்க பக்கமாக ஒரு இடத்தில் மண்ணைத் தோண்டி புதைத்து விட்டு வரலாம். இந்த பரிகாரத்தை மாதம் ஒருமுறை அமாவாசை தினத்தன்று செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Vastu tips
இந்த எலுமிச்சை பழம் அமானுஷ்ய சக்திகளை விரட்டியடிக்கவும் செய்யும் அற்புதம் நிறைந்தது. இதனை தவிர்த்து,.நிலை வாசலில் வைக்கப்படும் எலுமிச்சையும், உப்பும் கண் திருஷ்டிகளை அகற்றும். அது மட்டும் அல்லாமல் தரித்திரம், பீடை போன்றவற்றையும் நீக்கும் அற்புதமான சக்தி கொண்டுள்ளது.
Vastu tips
இதற்கு எலுமிச்சை பழம் ஒன்றை எடுத்து இரண்டாக வெட்டி அதில் மஞ்சள் தடவி கொள்ள வேண்டும். அதன் மீது குங்குமம் தடவி பின்னர் உப்பின் மீது வைக்க வேண்டும். இதனை இடது மற்றும் வலது புற வாசல்களின் வைத்தால் கண் திருஷ்டி கோளாறுகள், செய்வினை கோளாறுகள், பில்லி, சூனியம், ஏவல், கெட்ட சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள் எதுவும் நம்மை அண்டவே அண்டாது.