- Home
- Lifestyle
- Fish Pulusu: காரசாரமான ஆந்திரா ஸ்டைல் மீன் புலுசு.! 3 நாள் ஆனாலும் கெட்டுப்போகாது.! இதோ செய்முறை.!
Fish Pulusu: காரசாரமான ஆந்திரா ஸ்டைல் மீன் புலுசு.! 3 நாள் ஆனாலும் கெட்டுப்போகாது.! இதோ செய்முறை.!
Meen Kulambu Vaippathu Eppadi: ஞாயிற்றுக்கிழமை வந்தாலே அசைவம்தான் ஸ்பெஷல். சிக்கன், மட்டனை விட இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் புலுசு செஞ்சு பாருங்க. சுடச்சுட சாதத்துல போட்டு சாப்பிட்டா, அடடா! மூணு நாள் ஆனாலும் இதன் சுவை குறையவே குறையாது.

Meen Kulambu Vaippathu Eppadi - ஆந்திரா ஸ்டைல் மீன் புலுசு
ஞாயிற்றுக்கிழமை வந்தாச்சு, வீடே மணக்க மணக்க அசைவம் சமைக்க வேண்டாமா? எப்பவும் செய்யுற சிக்கன், மட்டனுக்கு பதிலா ஆந்திரா ஸ்டைல் காரசாரமா ஒரு மீன் புலுசு செஞ்சு பாருங்க. உடம்புக்கும் நல்லது, சுவையும் அபாரம். சுடச்சுட சாதத்தோட சாப்பிடும்போது, எச்சில் ஊறுவது நிச்சயம். இதோட ஸ்பெஷல் என்னன்னா, மூணு நாள் ஆனாலும் கெட்டுப்போகாது, சுவையும் கூடும்.
இதையும் படியுங்கள் - Fish: கருவாடு நல்லதா, ஃப்ரெஷ் மீன் நல்லதா? எதுல சத்து அதிகம்?
தேவையான பொருட்கள்
- மீன் துண்டுகள் – ½ கிலோ,
- வெங்காயம் – 2,
- தக்காளி – 2,
- பச்சை மிளகாய் – 3,
- புளி – சிறிய எலுமிச்சை அளவு,
- இஞ்சி-பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்,
- மிளகாய்த்தூள் – 1½ டேபிள் ஸ்பூன்,
- மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்,
- தனியா தூள் – 1 டீஸ்பூன்,
- சீரகத் தூள் – ½ டீஸ்பூன்,
- வெந்தயப் பொடி – ஒரு சிட்டிகை,
- உப்பு – தேவையான அளவு,
- எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்,
- கறிவேப்பிலை – 2 கொத்து,
- கொத்தமல்லி – சிறிதளவு.
இதையும் படியுங்கள் - கையால் சாப்பிடுவது ஏன் நல்லது? இந்த 5 காரணங்கள் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
மீன் புலுசு தயாரிக்கும் முறை
- மீனை நல்லா கழுவிட்டு, கொஞ்சம் மஞ்சள் தூள், உப்பு போட்டு 10 நிமிஷம் ஊற வைங்க. அப்போதான் மீன்ல மசாலா நல்லா பிடிக்கும், கவுச்சி வாடையும் இருக்காது.
- புளியை வெந்நீர்ல ஊற வச்சு, சாறு எடுத்து வச்சுக்கோங்க. ஒரு கனமான பாத்திரம் அல்லது மண் சட்டியை அடுப்புல வச்சு எண்ணெய் ஊத்துங்க. எண்ணெய் சூடானதும் வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிங்க.
- பொடியா நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமா வதக்குங்க. அடுத்து இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போற வரைக்கும் வதக்கணும். இப்போ தக்காளி சேர்த்து நல்லா மசிய வேக விடுங்க.
- அப்புறம் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீரகத் தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியுற வரைக்கும் வதக்குங்க. கடைசியா புளித் தண்ணி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்க.
- குழம்பு நல்லா கொதிச்சதுக்கு அப்புறம்தான் மீன் துண்டுகளை ஒன்னொன்னா சேர்க்கணும்.
இதையும் படியுங்கள் - உங்க அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருக்கா? கலப்படத்தை கண்டறிய 4 ஈஸி டிப்ஸ்.!
கரண்டியை அதிகம் பயன்படுத்த வேண்டாம்
மீன் துண்டுகளை சேர்த்த பிறகு, கரண்டி போட்டு அதிகமா கிளறாதீங்க, மீன் உடைஞ்சிடும். பாத்திரத்தை கையால லேசா சுத்தி விட்டா போதும். மூடி போட்டு மிதமான தீயில 10–12 நிமிஷம் வேக விடுங்க. கடைசியா, ஒரு சிட்டிகை வெந்தயப் பொடி, நறுக்கின கொத்தமல்லி தூவி அடுப்பை அணைச்சிடுங்க. செஞ்ச உடனேயே சாப்பிடாம, ஒரு 20–30 நிமிஷம் கழிச்சு சாப்பிட்டா மசாலா எல்லாம் மீன்ல நல்லா இறங்கி இருக்கும்.
இதையும் படியுங்கள் -கோழி வயிற்றில் முட்டை எப்படி உருவாகுது தெரியுமா? ஒரு முட்டை உருவாக எவ்வளவு நேரம் ஆகும்?
மறுநாள் சாப்பிட்டால் சுவை இன்னும் அமோகம்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

