Fish: கருவாடு நல்லதா, ஃப்ரெஷ் மீன் நல்லதா? எதுல சத்து அதிகம்?
Dry Fish vs Fresh Fish: கருவாடு vs ஃப்ரெஷ் மீன்: எதில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன? BP மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது என்பதை விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
16

Image Credit : stockPhoto
கருவாடு vs ஃப்ரெஷ் மீன்: எது பெஸ்ட்?
நிறைய பேருக்கு கருவாடு நல்லதா, ஃப்ரெஷ் மீன் நல்லதான்னு ஒரு டவுட் இருக்கும். நிபுணர்கள் என்ன சொல்றாங்கன்னா, ஃப்ரெஷ் மீன்லதான் இயற்கையான சத்துக்கள் அதிகம். அதுல புரோட்டீன், ஒமேகா-3, வைட்டமின் D, வைட்டமின் B12 எல்லாம் முழுசா கிடைக்கும். இது இதயம், மூளை, நோய் எதிர்ப்பு சக்திக்கு ரொம்ப நல்லது. முக்கியமா, ஃப்ரெஷ் மீன்ல உப்பு கம்மியா இருக்கறதால, பிபி இருக்கறவங்களுக்கு இதுதான் சேஃபான சாய்ஸ்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
26
Image Credit : our own
கருவாடு சாப்பிட்டா?
கருவாடுலயும் நிறைய சத்துக்கள் இருக்கு. மீன்ல இருக்குற தண்ணியை எடுக்குறதால, புரோட்டீன், மினரல்ஸ் எல்லாம் ரொம்ப அடர்த்தியா இருக்கும். அதனால, கொஞ்சமா கருவாடு சாப்பிட்டாலே நிறைய புரோட்டீன் கிடைக்கும். கால்சியம், இரும்புச்சத்தும் இதுல அதிகம். ஆனா, கருவாட்டைப் பதப்படுத்த அதிகமா உப்பு சேர்ப்பாங்க. இந்த அதிகப்படியான சோடியம், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கலாம்.
36
Image Credit : stockPhoto
தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள்
சில சமயங்கள்ல, கருவாட்டைப் பதப்படுத்த தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்ஸ் அல்லது பிரிசர்வேட்டிவ்ஸ் பயன்படுத்த வாய்ப்பிருக்கு. இது நீண்ட நாள்ல உடம்புக்குக் கெடுதல் தரும். அதுமட்டுமில்லாம, சுகாதாரமில்லாத முறையில தயாரிச்ச கருவாட்டுல பாக்டீரியா, பூஞ்சை, ஒட்டுண்ணிகள் இருக்கலாம். இதனால ஃபுட் பாய்சன், இன்ஃபெக்ஷன்ஸ் வரலாம்.
46
Image Credit : stockPhoto
இவர்கள் சாப்பிடுவது நல்லது
கருவாட்டுல மெர்குரி போன்ற கன உலோகங்களோட அளவு சில சமயம் அதிகமா இருக்கலாம். குறிப்பா, பெரிய மீன்களை காய வைக்கும்போது இந்த உலோகங்கள் இன்னும் அடர்த்தியாகும். இது கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்தானது. மீனை காயவைக்கும்போது, அதுல இருக்குற நீரில் கரையும் வைட்டமின்களும் குறைஞ்சிடும்.
56
Image Credit : stockPhoto
இந்த எச்சரிக்கைகள் அவசியம்
ஃப்ரெஷ் மீன் விஷயத்துலயும் சில எச்சரிக்கைகள் தேவை. ஃப்ரெஷ் மீன் சீக்கிரம் கெட்டுப்போயிடும். அதனால, சரியான வெப்பநிலையில அதை ஸ்டோர் பண்ணனும். இல்லன்னா, பாக்டீரியா உருவாகி உடல்நலப் பிரச்னைகளை உண்டாக்கும். ஆனா, சரியா ஸ்டோர் பண்ணி, ஃப்ரெஷ்ஷா சமைச்சு சாப்பிட்டா, ஃப்ரெஷ் மீன் தான் ஆரோக்கியத்துக்கு பெஸ்ட் சாய்ஸ்னு நிபுணர்கள் சொல்றாங்க.
66
Image Credit : stockPhoto
மீன்களை ரெகுலராக சாப்பிட்டால்?
நிபுணர்களோட கருத்துப்படி, தினமும் சாப்பிடுறதுக்கு ஃப்ரெஷ் மீனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது நல்லது. கருவாட்டை முழுசா தவிர்க்கணும்னு அவசியம் இல்லை, ஆனா அளவா சாப்பிடணும். குறிப்பா, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் இருக்கறவங்க கருவாட்டை குறைச்சிக்கிறது ரொம்ப நல்லது. சமைக்கிறதுக்கு முன்னாடி கருவாட்டை தண்ணியில ஊறவெச்சு, அதுல இருக்குற உப்பைக் குறைச்ச பிறகு சமைக்கலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.
Latest Videos

