MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Ginger Hack: இஞ்சியைத் துருவ கஷ்டமா இருக்கா? இந்த சிம்பிள் ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! பலருக்கும் தெரியாத சூப்பர் டிப்ஸ்.!

Ginger Hack: இஞ்சியைத் துருவ கஷ்டமா இருக்கா? இந்த சிம்பிள் ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! பலருக்கும் தெரியாத சூப்பர் டிப்ஸ்.!

The 15 Minute Fridge Trick for Perfectly Grated Ginger Every Time: இஞ்சியைத் துருவுறது கஷ்டமான வேலை. இஞ்சி துருவும் போது அது கிரேட்டர்ல சிக்கிக்கும். ஆனா இந்த சிம்பிள் ட்ரிக் மட்டும் பண்ணுங்க, இஞ்சியை ஈஸியா துருவலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Aug 05 2026, 02:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Easy Kitchen Hack to Grate Ginger
Image Credit : AI Generated

Easy Kitchen Hack to Grate Ginger

நம்ம கிச்சன்ல இஞ்சி இல்லாம ஒரு நாள் கூட ஓடாது. டீல இஞ்சி தட்டிப் போடலைனா அந்த நாளே ஆரம்பிக்காது. குழம்பு, ரசம், கறி, பிரியாணினு எல்லாத்துலயும் இஞ்சி-பூண்டு பேஸ்ட் இல்லனா இஞ்சித் துருவல் கண்டிப்பா வேணும்.

ஆனா, இஞ்சியைத் துருவும்போதுதான் பெரிய பிரச்சனையே வரும். மெத்து மெத்துனு இருக்கிற இஞ்சியைத் துருவும்போது கைல கத்தி பட்டுருமோனு ஒரு பயம் இருக்கும். அதுவும் இல்லாம, கிரேட்டர்ல தேய்க்கும்போது, அதோட நார் எல்லாம் சேர்ந்து கட்டியா ஆகி, கிரேட்டரோட ஓட்டை எல்லாம் அடைச்சிடும். கடைசியில கோபம் வந்து, இஞ்சியைத் தூக்கிப் போடலாமானு தோணும்.

இந்த சின்ன பிரச்சனையால சமைக்கிற மூடே போயிடும், சரிதானே? டென்ஷன் ஆகாதீங்க. இந்த பிரச்சனைக்கான தீர்வு உங்க ஃப்ரிட்ஜ்லயே இருக்கு.

இதையும் படியுங்கள் - உங்க அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருக்கா? கலப்படத்தை கண்டறிய 4 ஈஸி டிப்ஸ்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஒரே ஒரு சிம்பிள் வேலை - ஃப்ரிட்ஜ்ல வைங்க
Image Credit : Pixabay

ஒரே ஒரு சிம்பிள் வேலை - ஃப்ரிட்ஜ்ல வைங்க

சமைக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, காய்கறி எல்லாம் வெட்டுறதுக்கு ஒரு 10-15 நிமிஷம் முன்னாடி இஞ்சித் துண்டை எடுத்து நார்மல் ஃப்ரிட்ஜ்ல வைங்க. டீப் ஃப்ரீஸர்ல வெச்சு ஐஸ் ஆக்க வேண்டிய அவசியம் இல்லை. அவ்ளோதான். இதுக்கு அப்புறம் நடக்குற மேஜிக்கைப் பாருங்க.

இதையும் படியுங்கள் -  பிரியாணியும் புலாவும் ஒண்ணு இல்ல... ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

Related Articles

Related image1
Fake Rice: உங்க அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருக்கா? கலப்படத்தை கண்டறிய 4 ஈஸி டிப்ஸ்.!
Related image2
Biriyani vs Pulao: பிரியாணியும் புலாவும் ஒண்ணு இல்ல... ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
35
குளிர்ந்த இஞ்சி ஏன் ஈஸியா துருவ வருது?
Image Credit : Pixabay

குளிர்ந்த இஞ்சி ஏன் ஈஸியா துருவ வருது?

நார்மல் ஃப்ரிட்ஜ்ல வைக்கிறதால, இஞ்சியோட உள்ள இருக்கிற ஈரப்பதம் கொஞ்சம் இறுகிடும். அதனால இஞ்சி மென்மையா இல்லாம, கொஞ்சம் கெட்டியா, மொறுமொறுனு ஆகிடும்.

இதனால, நீங்க கிரேட்டர்ல தேய்க்கும்போது, நார் எல்லாம் சிக்காம, கட்டியாகாம, நல்லா பூ மாதிரி உதிரி உதிரியா வரும். கிரேட்டரும் சுத்தமா இருக்கும்.

இதையும் படியுங்கள் - நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஏன் கருப்பு நிற அங்கி அணிகிறார்கள் தெரியுமா? 99% பேருக்கு தெரியாத தகவல்.!

45
இந்த டிப்ஸ்ல இன்னும் 2 பெரிய நன்மை இருக்கு
Image Credit : Pixabay

இந்த டிப்ஸ்ல இன்னும் 2 பெரிய நன்மை இருக்கு

1. தோல் சீவுறது ஈஸி, விரல் கட் ஆகாது: மெத்துனு இருக்கிற இஞ்சியோட மெல்லிசான தோலை சீவும்போது எத்தனை தடவை விரல்ல காயம் பட்டிருக்கும்? ஆனா, ஃப்ரிட்ஜ்ல வெச்ச இஞ்சிக்கு அந்தப் பிரச்சனை இல்லை. ஒரு ஸ்பூனோட பின்பக்கத்தை வெச்சு லேசா சுரண்டினாலே போதும், தோல் தானா வந்துடும். கத்தியே எடுக்க வேண்டாம்.

2. மொத்தமா துருவி ஸ்டோர் பண்ணி வெச்சுக்கலாம்: உங்களுக்கு தினமும் இஞ்சி தேவைப்பட்டா, ஒரு தடவையிலேயே 2-3 இஞ்சித் துண்டுகளைத் துருவி, ஒரு கண்ணாடி ஏர்டைட் பாக்ஸ்ல போட்டு ஃப்ரிட்ஜ்ல வெச்சிடுங்க. சமைக்கும்போது, தேவைக்கு ஒரு ஸ்பூன் எடுத்துப் பயன்படுத்திக்கலாம். தினமும் துருவுற வேலை மிச்சம்.

இதையும் படியுங்கள் - சோறுக்கு பதிலா 30 நாள் சோள ரொட்டி சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா? கொட்டிக்கிடக்கும் நன்மைகள்.!

55
ஒரு சின்ன புரோ டிப்ஸ் ஞாபகம் வெச்சுக்கோங்க
Image Credit : AI Generated

ஒரு சின்ன புரோ டிப்ஸ் ஞாபகம் வெச்சுக்கோங்க

இஞ்சியை ரொம்ப நேரம் ஃப்ரிட்ஜ்ல வெச்சா, அது கல்லு மாதிரி ஆகிடும். அப்போ துருவுறதுக்கு இன்னும் கஷ்டமா இருக்கும். அதனால 10-ல இருந்து 15 நிமிஷம் தான் சரியான நேரம். பயன்படுத்தினது போக மீதி இஞ்சியை மறுபடியும் ஃப்ரிட்ஜ்லயே வெச்சிடுங்க, இல்லைனா மறுபடியும் மெத்துனு ஆகிடும். பார்த்தீங்களா? எவ்வளவு சிம்பிள். இனிமே இஞ்சியைத் துருவுறதைப் பத்தி கவலையே வேண்டாம். 10 செகண்ட்ல வேலை முடிஞ்சிடும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
உணவு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Monsoon Gardening: மழைக்காலத்தில் எந்த செடிகள் நன்றாக வளரும்? வீட்டை பசுமையாக்கும் சூப்பர் இன்டோர் ப்ளாண்ட்ஸ்!
Recommended image2
Hotel Mirrors : ஹோட்டல் பெட்டுக்கு எதிரே கண்ணாடி ஏன்? இதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணமா?
Recommended image3
Crush Signs: சைலன்ட் லவ்வா? இல்ல வெறும் க்ரஷ்ஷா? 5 விஷயங்களை வச்சு ஈஸியா கண்டுபிடிக்கலாம்!
Related Stories
Recommended image1
Fake Rice: உங்க அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருக்கா? கலப்படத்தை கண்டறிய 4 ஈஸி டிப்ஸ்.!
Recommended image2
Biriyani vs Pulao: பிரியாணியும் புலாவும் ஒண்ணு இல்ல... ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved