MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • kumbakonam special kadappa: கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா...இப்படி ஒருமுறை செய்து பாருங்க

kumbakonam special kadappa: கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா...இப்படி ஒருமுறை செய்து பாருங்க

தென்னிந்திய காலை உணவுகளான இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி போர் அடித்துவிட்டதா? சோழர் காலத்து பாரம்பரியமிக்க 'கடப்பா' ஒரு சிறந்த மாற்று! ஹோட்டல் சுவையில் இந்த சுவையான கடப்பாவை வீட்டிலேயே எளிதாகச் செய்வதற்கான ரகசியக் குறிப்புகளை இங்கு தெரிந்துகொள்ளலாம்

2 Min read
Author : Priya Velan
Published : Jul 06 2026, 04:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா:
Image Credit : Getty

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா:

தஞ்சாவூர் மாவட்டத்தின் சமையல் கலைக்கு உலகளவில் ஒரு தனித்தன்மை உண்டு. அதில் கும்பகோணம் என்றாலே டிகிரி காபிக்கு அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருவது சுடச்சுட இட்லியுடன் பரிமாறப்படும் "கடப்பா" ஆகும். உருளைக்கிழங்கு, பாசிப்பருப்பு மற்றும் தேங்காய் விழுதின் கூட்டணியில் தயாராகும் இந்த உணவின் சுவை, சாம்பார் மற்றும் குருமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதை ஒரு முறை சாப்பிட்டால் அதற்கு பிறகு சட்னி, சாம்பாரையே மறந்துடுவீங்க. சாப்பிடுவதற்கு மிகவும் லேசானதாகவும் (Light food), அதே சமயம் நாவிற்கு அலாதி சுவையையும் தரும் இந்த கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பாவை, அதன் பாரம்பரியம் மாறாமல் வீட்டில் எப்படித் தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
பாசிப்பருப்பு வேகவைப்பதில் உள்ள சூட்சுமம்:
Image Credit : Getty

பாசிப்பருப்பு வேகவைப்பதில் உள்ள சூட்சுமம்:

கடப்பாவின் அடிப்படையே பாசிப்பருப்பு தான். ஆனால், பருப்பை சாம்பாருக்கு வேகவைப்பது போல குழைய வேகவைக்கக் கூடாது. பருப்பு மலர்ந்திருக்க வேண்டும், ஆனால் அதன் வடிவம் சிதையாமல் கைவிரலால் அழுத்தினால் மசியும் பதத்தில் இருக்க வேண்டும். பருப்பை வேகவைக்கும் போது ஒரு துளி நெய் சேர்த்தால் அதன் வாசனை அற்புதம் தரும்.

37
உருளைக்கிழங்கின் அளவு மற்றும் பக்குவம் :
Image Credit : Getty

உருளைக்கிழங்கின் அளவு மற்றும் பக்குவம் :

உருளைக்கிழங்கைத் தனியாக வேகவைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ள வேண்டும். கைகளால் மசிக்கும் போது கட்டிகள் ஏதும் இல்லாமல், அதே சமயம் கூழ் போல ஆகாமல் நடுத்தரமாக மசிக்க வேண்டும். பருப்பின் அளவும், மசித்த உருளைக்கிழங்கின் அளவும் சமமாக (1:1 என்ற விகிதத்தில்) இருப்பது தான் சரியான பக்குவம்.

47
கடப்பா மசாலா விழுதின் ரகசியம் :
Image Credit : Getty

கடப்பா மசாலா விழுதின் ரகசியம் :

இதன் அசல் சுவைக்குத் தேவையானது பச்சையாக அரைக்கப்படும் மசாலா விழுது. துருவிய தேங்காயுடன் பொட்டுக்கடலை, சோம்பு, பூண்டுப் பற்கள் மற்றும் காரத்திற்கு பச்சை மிளகாய் மட்டுமே சேர்க்க வேண்டும். கடப்பாவிற்கு வண்ணமே பச்சை மிளகாய் தான், இதில் மிளகாய்த்தூள் சேர்க்கக் கூடாது. இந்த விழுதை மிக நைஸாக அரைக்காமல் லேசான கொரகொரப்புடன் அரைக்க வேண்டும்.

57
எலுமிச்சை சாறு சேர்க்கும் சரியான நேரம் :
Image Credit : Getty

எலுமிச்சை சாறு சேர்க்கும் சரியான நேரம் :

கடப்பாவின் தனித்துவமான புளிப்புச் சுவைக்கு எலுமிச்சை சாறு தான் காரணம். தக்காளி சேர்க்கக் கூடாது. குழம்பு முழுமையாகக் கொதித்து, அடுப்பை அணைத்த இரண்டு நிமிடங்களுக்குப் பிறகுதான் எலுமிச்சை சாற்றைக் கலக்க வேண்டும். கொதிக்கும் போதே சேர்த்தால் குழம்பு கசப்புத் தன்மையைப் பெற்றுவிடும்.

67
தாளிப்பு மற்றும் வெங்காயத்தின் குணம் :
Image Credit : Getty

தாளிப்பு மற்றும் வெங்காயத்தின் குணம் :

தாளிப்பதற்குச் சமையல் எண்ணெயுடன் சிறிதளவு வெண்ணெய் சேர்த்தால் கும்பகோணம் ஹோட்டல் சுவை அப்படியே கிடைக்கும். பட்டை, கிராம்பு, பிரியாணி இலை தாளித்து, நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்க்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறக் கூடாது, கண்ணாடி பதத்திற்கு வதங்கினால் மட்டுமே கடப்பாவின் நிறம் மாறாமல் வெண்மையாக இருக்கும்.

77
சரியான நீர் நிலை (Consistency) :
Image Credit : Getty

சரியான நீர் நிலை (Consistency) :

மசாலா விழுது மற்றும் பருப்பு சேர்த்த பிறகு குழம்பு ஆறியவுடன் கெட்டியாகும் தன்மை கொண்டது. எனவே, கொதிக்க வைக்கும் போதே தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சற்றுத் தளர்வான (Watery consistency) பதத்தில் இறக்க வேண்டும். அப்போதுதான் இட்லியின் மீது ஊற்றிச் சாப்பிடும் போது அது நன்றாக ஊறிச் சுவை கூடும்.

ஃபைனல் டச்:  நறுக்கிய புதிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி, சுடச்சுட மல்லிகைப்பூ இட்லி அல்லது மொறுமொறு தோசையுடன் இதனைப் பரிமாறலாம். இதன் மென்மையான காரமும், தேங்காயின் பாலும் கலந்த சுவை குழந்தைகளையும், பெரியவர்களையும் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
சமையலறை குறிப்புகள்
உணவு
வாழ்க்கை முறை
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pressure Cooker Tips: குக்கரில் சாதம் வைக்கும்போது பொங்கி வழியுதா? ஒரு சின்ன கிண்ணம் செய்யும் மேஜிக்
Recommended image2
Dal Cooking Tips: பருப்பு ஊறவைத்த தண்ணீரை கீழ ஊத்துறீங்களா..? சத்துகள் வீணாகாம சமைப்பது எப்படி..?
Recommended image3
Parents Karma: பெற்றோரின் கண்ணீர் பிள்ளைகளை பாதிக்குமா..? கர்ம வினை சொல்லும் பாடம்..!
Related Stories
Recommended image1
chicken thanni kuzhambu : கிராமத்து ஸ்டைல் சிக்கன் தண்ணிகுழம்பு...இப்படி செய்து பாருங்க
Recommended image2
kuska recipe: பிரியாணி சுவையை மிஞ்சும் பிளைன் குஸ்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved