MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • 7000 சொகுசு கார்கள்; உலகின் மிகப்பெரிய அரண்மனை; புருனே மன்னரின் சொத்து மதிப்பு இவ்வளவா?

7000 சொகுசு கார்கள்; உலகின் மிகப்பெரிய அரண்மனை; புருனே மன்னரின் சொத்து மதிப்பு இவ்வளவா?

Brunei King Networth : உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான புருனே மன்னர் சுல்தான் ஹசனல் போல்கியாவின் ஆடம்பர வாழ்க்கை முறை, 7,000 கார்கள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனை மற்றும் தனியார் ஜெட் விமானங்கள் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

3 Min read
Ramya s
Published : Sep 04 2024, 04:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Sultan Hassanal Bolkiah

Sultan Hassanal Bolkiah

பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் புருனே பயணம் கவனம் ஈர்த்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று புருனேவுக்கு 2 நாள் பயணமாக சென்றார். தென்கிழக்கு ஆசிய நாடான புருனேவிற்கு செல்லும் முதல் பிரதமர் என்ற பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரும், புருனே மன்னருமான சுல்தான் ஹசனல் போல்கியாவின் செழுமையான வாழ்க்கை குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலான வருகிறது.

புருனேயின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களில் இருந்து பெறப்பட்ட சுல்தானின் அபரிமிதமான செல்வம், உலகின் மிகப்பெரிய தனியார் கார் சேகரிப்பு, ஆடம்பரமான அரண்மனை மற்றும் தனியார் மிருகக்காட்சிசாலை உள்ளிட்ட அவரது ஆடம்பரமான உடைமைகளுக்கு முக்கிய பங்களிக்கிறது. சுல்தான் ஹசனல் போல்கியாவின் ஆடம்பர வாழ்க்கை முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

25
Sultan Hassanal Bolkiah

Sultan Hassanal Bolkiah

சுல்தான் ஹசானல் போல்கியா 1967 ஆம் ஆண்டு தனது 21வது வயதில் புருனேயின் அரியணை ஏறினார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட பரம்பரையில் இருந்து வந்த இவர் போல்கியா குடும்பத்தின் 29வது வாரிசு ஆவார். மன்னராட்சி என்ற பாத்திரத்திற்கு அப்பால், அவர் புருனேயின் பிரதம மந்திரி, வெளியுறவு மந்திரி மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றுகிறார், நாட்டின் நிர்வாகத்தில் முக்கியமான நபராகவும் இருக்கிறார்.

புருனேயின் சுல்தான் தனது தலைமைக்கு மட்டுமல்ல, தனது அபரிமிதமான செல்வத்திற்கும் புகழ் பெற்றவர். 2009 இல், ஃபோர்ப்ஸ் அவரது சொத்து மதிப்பு ரூ.1.36 லட்சம் கோடி என்று மதிப்பிட்டது. இருப்பினும், அவரது சொத்து இரட்டிப்புக்கு மேல் அதிகரித்து, தற்போது ரூ.2.88 லட்சம் கோடியைத் தாண்டி, உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுல்தானின் முதன்மையான செல்வம் புருனேயின் ஏராளமான எண்ணெய் இருப்புக்கள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றிலிருந்து வருகிறது. இந்த வளங்கள் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற உதவி உள்ளது. மேலும் சுல்தானின் பரந்த செல்வத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. புருனேயின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் வளமான வைப்பு, தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் புருனே பணக்கார நாடுகளில் ஒன்றாக ஆக்கியுள்ளது.

35
Sultan Hassanal Bolkiah

Sultan Hassanal Bolkiah

சுல்தான் ஹசனல் போல்கியாவின் செல்வத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அடையாளங்களில் ஒன்று அவரின் அற்புதமான அரண்மனை, இஸ்தானா நூருல் ஈமான் ஆகும். 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், 1984ல் கட்டப்பட்ட இந்த அரண்மனை, உலகிலேயே மிகப் பெரிய அரண்மனை என்று கூறப்படுகிறது. இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்த அரண்மனையின் மதிப்பிடப்பட்ட மதிப்பு ரூ.2,250 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. புருனே மன்னரின் இந்த அரண்மனை ஆடம்பர மற்றும் செழுமையின் அடையாளமாக உள்ளது.

இஸ்தானா நூருல் இமான் அரண்மனையில் மொத்தம் 1,700 அறைகள், 257 குளியலறைகள், ஐந்து நீச்சல் குளங்கள் மற்றும் 110 கேரேஜ்கள் உள்ளன. அரண்மனையின் குவிமாடம் 22 காரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, மேலும் சுவர்கள் தங்கத்தால் பதிக்கப்பட்டுள்ளன. அரண்மனையின் பிரமாண்டம் சுல்தானின் ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் ஆடம்பர வாழ்க்கையின் மீதான அவரது விருப்பத்திற்கு சான்றாக திகழ்கிறது..

45
Sultan Hassanal Bolkiah

Sultan Hassanal Bolkiah

சுல்தான் ஹசனல் போல்கியா ஒரு கார் ஆர்வலராகவும் இருக்கிறார், சுமார் 7,000 கார்கள் கொண்ட கலெக்‌ஷனை வைத்திருக்கிறார். அவரின் கார் சேகரிப்பில் 600 ரோல்ஸ் ராய்ஸ், 300 ஃபெராரிஸ், 134 கோனிக்செக்ஸ், 11 மெக்லாரன் எஃப்1, ஆறு போர்ஷே 962எம் மற்றும் பல ஜாகுவார் ஆகியவை அடங்கும். அவரது அரண்மனையில் இந்த கார்களை வைக்க 110 கேரேஜ்கள் உள்ளன. கூடுதலாக, அவர் 200 குதிரைகளுக்கான குளிரூட்டப்பட்ட தொழுவத்தை வைத்திருக்கிறார், 

சுல்தான் தனது தனிப்பட்ட உபயோகத்திற்காக போயிங் 747 விமானம் ஒன்றையும் வைத்திருக்கிறார். இதன் விலை கிட்டத்தட்ட ரூ. 3,000 கோடி ($400 மில்லியன்) ஆகும்., மேலும் 120 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்க வாஷ்பேசின் போன்ற ஆடம்பரமான அம்சங்கள் பல உள்ளன. அவர் தனது மகளின் பிறந்தநாளுக்கு ஏர்பஸ் ஏ 340 ஐ பரிசாக அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

55
Sultan Hassanal Bolkiah

Sultan Hassanal Bolkiah

புருனே மன்னர் சுல்தனைடம் கார்கள் மட்டுமின்றி போயிங் 747-400, போயிங் 767-200 மற்றும் ஏர்பஸ் ஏ340-200 உட்பட பல தனியார் ஜெட் விமானங்கள் உள்ளன. இந்த ஜெட் விமானங்கள் சாதாரண விமானங்கள் அல்ல; அவை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தங்கத்தால் செய்யப்பட்ட வாஷ் பேசின், தங்கத்தால் பதிக்கப்பட்ட சுவர்கள் மற்றும் தங்க நூல்களால் நெய்யப்பட்ட கம்பளம் ஆகியவற்றைக் கொண்ட அவரது ஜெட் விமானம் ஒன்றின் மதிப்பு ரூ.3,359 கோடி என கூறப்படுகிறது. ஜெட் விமானத்தில் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு தேவையான அனைத்தையும் கொண்டுள்ளது, 

சுல்தான் ஹசனல் போல்கியாவின் தனிப்பட்ட வாழ்க்கையும் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். சுல்தான் ஆவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1965 இல், பெங்கிரான் அனாக் ஹாஜா சலேஹா என்பவருடன் அவரது முதல் திருமணம் நடந்தது. பின்னர் அவர் 1981 இல் மரியம் அப்துல் அஜீஸையும் 2005 இல் அஸ்ரினாஸ் மஜாரையும் மணந்தார். இருப்பினும், தனது 2-வது மனைவியை 2003-ம் ஆண்டும், அஸ்ரினாவை 2010-ம் ஆண்டும் அவர் விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved