வியர்குருவுக்கு 'பவுடர்' யூஸ் பண்றது பலன் தருமா?
வியர்க்குருவை விரட்டியடிக்க வியர்க்குரு பவுடர் பயன்படுத்தலாமா?கூடாதா? என்பதை குறித்து இங்கு காணலாம்.

Is Prickly Heat Powder a Summer Essential : கோடை காலம் வந்தாலே கூடவே வியர்க்குரு போன்ற பல சரும பிரச்சனைகள் வந்து விடும். இதிலிருந்து சருமத்தை காத்துக் கொள்ள சில வழிமுறைகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வியர்க்குரு (prickly heat) என்பது வியர்வை நாளங்கள் அடைப்பட்டு விட்டால் வியர்க்குரு உண்டாகும். இதனால் அரிப்பு, எரிச்சல், சிவந்து போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் அதிகமாக வியர்க்கும். நம்முடைய வியர்வை சுரப்பிகளில் (sweat glands) பாக்டீரியாக்கள் மற்றும் இறந்த செல்கள் சென்று அடைத்துக் கொள்வதால், வியர்வியல் வெளியேற முடியாமல் போகும் இதனால் அரிப்பு எரிச்சல் தொற்று நோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், பெரும்பாலானோர் கோடையில் வரும் வியர்க்குருவை விரட்டி அடிக்க வியர்க்குரு பவுடரை பயன்படுத்துவார்கள். ஆனால் இப்படி வியர்குருவுக்கு பவுடர் பயன்படுத்தலாமா? அது நல்லதா? என்பதைக் குறித்து இங்கு காணலாம்.
இதையும் படிங்க: வியர்க்குருவை நீக்கும் சூப்பர் டிப்ஸ்.. வலியில்லாமல் நிவாரணம்
வியர்க்குருவை விரட்டியடிக்க பயன்படுத்தப்படும் பவுடரில் டார்ல் அல்லது arrow starch, corn starch போன்றவை இருக்கும். கூடவே வியர்வை நாற்றம் அடிக்காமல் இருக்க சில வாசனை திரவியங்களும் சேர்க்கப்பட்டிருக்கும். இது தவிர menthol, camphor, zinc oxide இவையெல்லாம் கலந்து தான் வியர்க்குரு பவுடர் தயாரிக்கப்படுகிறது. வியர்க்குருவுக்கு இந்த பவுடரை பயன்படுத்தினால் வியர்வை கொஞ்சம் உறிஞ்சப்படும். மேலும் இதை பயன்படுத்தும் போது சற்று இதமாகவும் உணர முடியும். ஆனால் இந்த பவுடர் நிரந்தர நிவாரணம் அளிக்காது. மேலும் வியர்க்குரு பவுடரை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அது வியர்வை நாளங்களை அடைத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதையும் படிங்க: Verkuru Tips : வியர்க்குருவை அடியோடு விரட்ட 'இத' விட பெஸ்ட் டிப்ஸ் எதுவும் இல்ல!!
வியர்க்குருவை விரட்டியடிக்க சில இயற்கையான வழிகள் இங்கே:
- வியர்க்குருவை இயற்கை முறையில் விரட்டியடிக்க கற்றாழை ஜெல் உங்களுக்கு உதவும். வியர்க்குரு இருக்கும் இடங்களில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- சந்தனத்தை தண்ணீரில் குழைத்து அதை வியர்க்குரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால், சருமத்தில் நல்ல மாற்றம் காண்பீர்கள்.
- வெயில் காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை கண்டிப்பாக குளித்து வந்தால் வியர் குரு பிரச்சினை வராது அதுபோல குளிர்ந்த நீரை தான் குளிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
- கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். எனவே ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடியுங்கள்.
- வெயில் காலத்தில் அழகான பருத்தி ஆடைகளை அணியுங்கள். இதனால் வியர்க்குரு வருவது தடுக்கப்படும்.
- கோடையில் நீங்கள் இருக்கும் இடம் நல்ல காற்றோட்டத்துடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.