MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • சொத்தை பற்களை தடுக்குமா வாக்கிங்? யாருக்கும் தெரியாத தகவல்!! 

சொத்தை பற்களை தடுக்குமா வாக்கிங்? யாருக்கும் தெரியாத தகவல்!! 

Walking : நடைபயிற்சிக்கும் பற்களுக்கும் உள்ள தொடர்பு மற்றும் பிற அற்புத நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.   

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Jan 18 2025, 09:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Walking and sugar cravings in tamil

Walking and sugar cravings in tamil

ஒரு ஆய்வில் தினமும் நடப்பவர்களுடைய ஆயுள் காலம் 10 ஆண்டு அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. நடைபயிற்சி நம்முடைய ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத வரப்பிரசாதம். இன்றைய காலகட்டத்தில் மக்களின் உடல் நலத்தை பேண நடைபயிற்சி மேற்கொள்ள மருத்துவர்களே அறிவுறுத்துகின்றனர்.  அனைத்து வயதினரும் செய்யக்கூடிய எளிமையான பயிற்சி நடைபயிற்சியாகும். நடைபயிற்சியினால் உங்களுடைய பற்களின் ஆரோக்கியம் மேம்படும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த பதிவில் நடைபெற்றினால் கிடைக்கும் ஐந்து பயன்களை காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Walking and sugar cravings in tamil

Walking and sugar cravings in tamil

எடையை கட்டுப்படுத்தும்! 

ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 12 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் உடல் பருமனை பற்றிய முக்கியமான தகவல் தெரியவந்துள்ளது. இதில் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் சுறுசுறுப்பாக நடப்பவர்களுடைய மரபணுவில் உடல் பருமனுக்கான விளைவுகள் பாதியாக குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது உங்களுடைய மரபணு உடல் பருமனை அதிகரிக்கும் சாத்தியம்  பாதியாக குறையும். இதன் மூலம் உங்களால் உருவாகும் சந்ததியும் ஆரோக்கியமாக மாற வாய்ப்புள்ளது. 

இதையும் படிங்க:  வாரத்தில் '2' நாட்கள் பின்னோக்கி நடந்தால் கூட போதும்.. இத்தனை நன்மைகளா?

36
Walking and sugar cravings in tamil

Walking and sugar cravings in tamil

பற்களுக்கும் நடைபயிற்சிக்கும் தொடர்பு: 

சொத்தைப் பற்களைக் கட்டுப்படுத்த நடைபயிற்சி உதவும். எக்ஸிடர் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட இரு ஆய்வுகளில் இனிப்பு சாப்பிடும் விருப்பத்தை நடைபயிற்சி குறைப்பதாக தெரியவந்துள்ளது. ஒரு நாளில் 15 நிமிடங்கள் நடந்தால் கூட உங்களுக்கு சாக்லேட் மீது ஏற்படும் ஆசை  கட்டுப்படுத்தும் என தெரியவந்துள்ளது. நீங்கள் அதிகமான மன அழுத்தம் காரணமாக சாக்லேட் சாப்பிட தூண்டப்படுவீர்கள். நடைபயிற்சி செய்யும் போது உங்களுடைய மனநிலை சீராகி சாக்லேட் சாப்பிடும் எண்ணங்கள் குறைவதாகவும், இனிப்பு பண்டங்களை சாப்பிடுவது கட்டுப்படுத்தும் ஆற்றல் நடைபயிற்சிக்கு உள்ளதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நீங்கள் இனிப்புகளை குறைக்கும்போது உங்களுடைய பற்களின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். 

46
Walking and sugar cravings in tamil

Walking and sugar cravings in tamil

மார்பகப் புற்றுநோய் தடுப்பு: 
 
உங்களுடைய உடல் இயங்கிக் கொண்டிருப்பது மார்பகப் புற்று நோயிலிருந்து உங்களை காப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது தினசரி உடற்பயிற்சிகள் அல்லது நடைப்பயிற்சி மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைப்பதாக அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு வாரத்தில் குறைந்தது 7 அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரங்கள் வாக்கிங் செல்லும் பெண்களுக்கு ஒரு நாளில் மூன்று மணி நேரம் அல்லது அதற்கு குறைவாக நடைபயிற்சி செய்த பெண்களை விட மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 14 சதவீதம் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல் பருமன், ஹார்மோன்கள் சமநிலை உள்ளிட்ட பல காரணங்கள் புற்றுநோய் ஏற்படலாம். ஆனால் நடைபயிற்சி பெண்களை புற்றுநோயிலிருந்து காப்பாற்றுகிறது. 

56
Walking and sugar cravings in tamil

Walking and sugar cravings in tamil

மூட்டு வலி நிவாரணம்: 

நீங்கள் தினமும் வாக்கிங் செல்வதால் மூட்டு வலியில் இருந்து விடுதலை அடைய முடியும். ஒரு வாரத்தில் அதிகபட்சம் ஆறு மைல்கள் வரை நடப்பதை பழக்கப்படுத்திக் கொண்டால் மூட்டுகள் வலுவாகி வலியிலிருந்து நிவாரணம் பெறலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்களுடைய முழங்கால்கள் இடுப்பு எலும்புகளை நடைப்பயிற்சி  உயவூட்டுகிறது. அவை சார்ந்த தசைகளை உறுதியாக்குவதால் வலிகள் நீங்குகின்றன. 

இதையும் படிங்க:  வாக்கிங்ல 'கட்டாயம்' சேர்க்க வேண்டிய '5' விஷயங்கள்.. தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க!!

66
Walking and sugar cravings in tamil

Walking and sugar cravings in tamil

நோய் எதிர்ப்பு மண்டலம்: 

நடைபயிற்சி உங்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி நோய்தொற்றிலிருந்து காக்கிறது. பருவகாலங்களில் ஏற்படும் சளி, காய்ச்சல் போன்றவற்றிலிருந்து நடைபயிற்சி உங்களை பாதுகாக்கிறது. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஒரு வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்கள், ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் நடைபயிற்சி செய்தவர்கள், வாரத்தில் ஒரு முறை அல்லது அதற்கும் குறைவாகவே உடற்பயிற்சிகளை செய்தவர்களைக் காட்டிலும்  43 சதவீதம் குறைவாகவே நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்கள்.  அவர்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்கிறது என்பதற்கு இந்த ஆய்வின் முடிவுகளே சான்றளிக்கிறது. ஒருவேளை அவர்களுக்கு நோய்கள் ஏற்பட்டிருந்தாலும், அவை குறுகிய காலத்திற்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில் இருந்து அவர்கள் விரைவில் மீண்டுள்ளார்கள். 

ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுவதற்கு தினமும் நடைபயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. அதை இன்றிலிருந்து தொடங்குங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
நடைப்பயிற்சியின் நன்மைகள்
நடைப்பயிற்சி குறிப்புகள்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Yanomami Tribe Ash Soup: இறந்தவர்களின் சாம்பலில் சூப் செய்து குடிக்கும் பழங்குடியினர்.. காரணம் என்ன?
Recommended image2
Pressure Cooker Tips: குக்கரில் சாதம் வைக்கும்போது பொங்கி வழியுதா? ஒரு சின்ன கிண்ணம் செய்யும் மேஜிக்
Recommended image3
Dal Cooking Tips: பருப்பு ஊறவைத்த தண்ணீரை கீழ ஊத்துறீங்களா..? சத்துகள் வீணாகாம சமைப்பது எப்படி..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved