வாரத்தில் '2' நாட்கள் பின்னோக்கி நடந்தால் கூட போதும்.. இத்தனை நன்மைகளா?
Benefits of Walking Backward : பின்னோக்கி நடந்தால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.
Benefits of Walking Backward in Tamil
ஆங்கிலத்தில் ரெட்ரோ வாக்கிங் என சொல்லப்படும் பின்னோக்கி நடத்தல் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பல வழிகளில் உதவுகிறது. சமூக வலைதளங்களில் இந்த பயிற்சி அதிக கலோரிகள் எரிக்கும் எனவும், மன ஆரோக்கியம் மேம்படும் எனவும் சொல்லப்படுகிறது. இது உண்மையா? பின்னோக்கி நடந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை என இங்கு காணலாம். நம் உடல் தசைகள், உடலமைப்பு முன்னோக்கி செல்ல ஏற்றவாறு அமைந்துள்ளது. அது எளிமையான விஷயமும் கூட. ஆனால் பின்னோக்கி நடத்தல், முன்னோக்கி நடப்பது மாதிரி எளிதல்ல. குறிப்பிட்ட நேரம் பின்னோக்கி நடப்பது சவலான விஷயம். இதற்கு உடல் ரீதியாக அதிக ஆற்றல் வேண்டும். கவனமாகவும் செயல்பட வேண்டும்.
Benefits of Walking Backward in Tamil
தசைகள் வலுவாகும்:
நடைபயிற்சி நல்ல பயிற்சி தான். ஆனால் தினமும் ஒரே தசைகளை பயிற்றுவித்தால் மற்றவை தளர்வாகிவிடும். எந்த உடற்பயிற்சியை செய்தாலும் ஒரே தசைகளை மட்டும் பயிற்றுவிக்கக் கூடாது. நீங்கள் வாக்கிங் அல்லது ஜாகிங் செல்லும்போது அவ்வப்போது பின்னோக்கி நடத்தல் பயிற்சியை செய்யலாம். இதில் பல தசைகள் ஈடுபடுகின்றன. பின்னோக்கி நடப்பதால் இடுப்பு தசைகள், பிட்டம், தொடை எலும்புகள், காப்ஸ் தசைகள், கால்களின் உள்ள பெரும்பாலான தசைகள் வலுப்பெறுகின்றன.
அதிக கலோரிகளை எரிக்கலாம்:
திடீரென நீங்கள் பின்னோக்கி நடப்பதால் ஏற்கனவே பழகிய பயிற்சிகளுக்கு எதிர்மாறான விஷயத்தை செய்கிறீர்கள். இது உங்களுடைய உடலில் அதிக இயக்கத்தை கோரும். உங்கள் நடைபயிற்சியை மாற்றி அமைக்க பின்னோக்கி நடத்தல் உதவும். உங்களுடைய தசைகளை வெவ்வேறு வழிகளில் இயக்குவதற்கு பின்னோக்கி நடப்பது அவசியம். இதனால் இதயத் துடிப்பு அதிகமாகும். அதிகமான கலோரிகளை எரிப்பதற்கு இந்த பயிற்சி நல்ல தேர்வாகும். நீங்கள் சாதாரணமாக நடப்பத்தை காட்டிலும் பின்னோக்கி நடப்பது பல மடங்கு நல்ல பலன்களை அளிக்கிறது.
Benefits of Walking Backward in Tamil
மூட்டு வலி குறையும்:
பின்னோக்கி நடப்பது
மூட்டு வலி, கீல்வாதம் குறைவதற்கு நல்ல பயிற்சியாக மாறும். பின்னோக்கி நடந்தால் கால், குதிகால் அசைவு நன்கு இருக்கும். இதனால் குவாட்டர்செப்ஸ் முனைப்பாக செயல்படுகிறது. இதனால் முழங்கால்கள் மேம்படும். பின்னோக்கி நடத்தல் இடுப்பு நெகிழ்வுகளில் இயக்கத்தை அதிகரிக்கும். ஏற்கனவே, மூட்டு வலி இருப்பவர்கள் பின்னோக்கி நடக்கக் கூடாது.
மூளைக்கு சிறந்த பயிற்சி!
முன்னோக்கி நடப்பது அதிக ஆற்றலை கேட்காத மிதமான பயிற்சியாகும். ஏனெனில் நாம் எப்போதுமே முன்னோக்கி நடப்போம். ஆனால் பின்னோக்கி நடப்பது அப்படியல்ல. அதனால் நடையின் தூரம், வேகம் போன்றவை மாறுபடும். அனைத்து புலன்களும் அதிக ஈடுபாடுடன் செயல்பட வேண்டியது அவசியம். இதனால் இதயமும் வலுப்படும். மனநிலையை மேம்படுத்த, மனச்சோர்வை நீக்க இந்த பயிற்சி உதவும்.
Benefits of Walking Backward in Tamil
தோரணை மாறும்!
நம்மில் பலர் நாள் முழுக்க அமர்ந்த நிலையில் இருப்பதால் தோரணை மாறிவிடுகிறது. மணிக்கணக்கில் குனிந்தபடி இருப்பது, படுத்துக் கொள்வது மோசமான தோரணையை வழங்கலாம். நடக்கும்போதும் அப்படியே இருப்பீர்கள். அடிக்கடி நீங்கள் பின்னோக்கி நடந்தால் உங்கள் கூன் போன்ற தோற்றமாறி நிமிர்ந்த தோற்றம் கிடைக்கும்.
இலகுவாக உணர்தல்:
ஓடுதல், ஹிட் பயிற்சிகள் மாதிரியான தீவிரமான உடற்பயிற்சிகளை முடித்த பின் பின்னோக்கி நடந்தால் உடல் இலகுவாக உணர உதவும். இதயத்துடிப்பும் இயல்பு நிலைக்கு திரும்பும். கால் தசைகள் இறுக்கமான நிலையில் இருந்து தளர்வாகும். மூட்டுகளுக்கு கீழே காணப்படும் காப்ஸ் தசைகள் இலகுவாகும்.
இதையும் படிங்க: வாக்கிங் முதுகு வலிக்கு நிவாரணம்! எத்தனை நிமிஷம் நடக்கனும் தெரியுமா?
Benefits of Walking Backward in Tamil
எவ்வளவு நேரம்?
நீங்கள் ஐந்து நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் நடக்கலாம். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த பயிற்சியை செய்யலாம். நடக்கும்போது அந்த பரப்பு உங்களுக்கு ஆபத்து விளைவிக்காத வண்ணம் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உங்களுக்கு காயம் ஏற்படாத வகையில் பின்னோக்கி நடப்பது நல்லது.
இதையும் படிங்க: வாக்கிங்ல 'கட்டாயம்' சேர்க்க வேண்டிய '5' விஷயங்கள்.. தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க!!