MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வாக்கிங்ல 'கட்டாயம்' சேர்க்க வேண்டிய '5' விஷயங்கள்.. தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க!! 

வாக்கிங்ல 'கட்டாயம்' சேர்க்க வேண்டிய '5' விஷயங்கள்.. தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க!! 

Walking Tips and Tricks : நடைபயிற்சியில் கூடுதல் பயன்கள் கிடைக்க செய்ய வேண்டிய 5 விஷயங்களை இங்கு காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 16 2025, 09:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Walking health benefits in tamil

Walking health benefits in tamil

உணவு பழக்கங்களில் கவனமாக இருப்பது எடை மேலாண்மையில் உதவும். மற்ற நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கும்.  நடைபயிற்சியை தொடர்ந்து செய்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் கூடுதல் பயன்களுக்கு நாம் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இங்கு 5 விஷயங்களை பற்றி நாம் காண்போம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Improve walking benefits in tamil

Improve walking benefits in tamil

வலிமை பயிற்சி: 

நடைப்பயிற்சியுடன் அவ்வப்போது வலிமை பயிற்சிகளையும் (strength training) செய்ய வேண்டும்.  இதனால் உங்களுடைய தசைகள் வலிமை அடைவதோடு உடலில் சகிப்புத்தன்மையும் அதிகரிக்கும். இந்த பயிற்சிகளை குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் செய்தாலும் போதுமானது. 

-குறைந்த எடையுள்ள டம்பல்ஸ் அல்லது மணிக்கட்டு எடைகளை வைத்து பயிற்சி செய்யலாம். 
- வாக்கிங் செல்லும்போது குந்துகைகள் (squats) அல்லது லஞ்சஸ் (lunches) பயிற்சிகளை செய்யலாம். 
- ரெசிஸ்டன்ஸ் பேண்ட்ஸ் வைத்து பயிற்சி செய்யலாம்.  

36
Walking tips and tricks in tamil

Walking tips and tricks in tamil

ஹிட் வொர்க்அவுட்: 

ஹிட் வொர்க்அவுட் என சொல்லப்படும் அதிக தீவிர பயிற்சிகளை (HIIT) வாரத்தில் ஏதேனும் இருநாட்கள் செய்யலாம். இந்த பயிற்சிகள் உங்களுடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிகமான கலோரிகளை எரிக்கச் செய்து எடையை குறைக்க உதவும். 

- சுறுசுறுப்பாக நடக்கும்போது  நடுவில் சில நிமிடங்கள் ஜாகிங் அல்லது ரன்னிங் செய்யலாம். 
- நடைபயிற்சியின் தீவிரத்தை கூட்ட படிக்கட்டுகள் ஏறலாம். ஏற்ற இறக்கமான பகுதியில் நடக்கலாம். 

இதையும் படிங்க:  வெறும் '5' நிமிஷம் வாக்கிங்க்கு இவ்ளோ பவரா? என்னென்ன நன்மைகள்??

46
Enhance walking routine in tamil

Enhance walking routine in tamil

 தியானம் பண்ணுங்க! 

உங்களுடைய மன அழுத்தத்தைக் குறைக்கவும்,  மன தெளிவை அதிகரிக்கவும்  நடைபயிற்சியுடன் தியானம் செய்வதை பழக்கப்படுத்துங்கள். 

- தியானம் செய்யும்போது சுவாசத்தில் கவனம் செலுத்த வேண்டும். உங்களை சுற்றியிருக்கும் விஷயங்களை கவனியுங்கள்.  
- நன்றியுணர்வுடன் இருங்கள். தியானத்தில் நேர்மறையான உறுதிமொழிகளை சொல்லி பழகுங்கள். 

இதையும் படிங்க:  வாக்கிங் முதுகு வலிக்கு நிவாரணம்! எத்தனை நிமிஷம் நடக்கனும் தெரியுமா?

56
Walking for health and wellness in tamil

Walking for health and wellness in tamil

புதிய முயற்சிகள்: 

நடைபயிற்சியில் சலிப்பு தட்டாமல் இருக்க உங்களுடைய சூழல்களை மாற்றுங்கள். நடைபயிற்சியை  சுவாரஸ்யமாக வைக்கவும், சலிப்பு வராமல் இருக்கவும்  புதிய முயற்சிகளை செய்ய வேண்டும்.

- ஒரே தூரத்தை கடக்காமல் புதிய இலக்குகளை வைத்துகொள்ளுங்கள். 
- கூடுதல் பயிற்சிக்காக மலைப்பாதைகள் அல்லது புதிய இடங்களில் வாக்கிங் செல்லலாம். 
- வெவ்வேறு நேரத்தில் நடக்க செல்லாம். எப்போது
 காலையில் நடக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காலை, மாலை, மதியம் என மூன்று நேரங்களில் பிரித்து நடக்கலாம் அல்லது ஒவ்வொரு நாளும் ஒரு நேரத்தில் நடக்கலாம். 

66
Boost walking benefits in tamil

Boost walking benefits in tamil

வார்ம் அப் - கூல் டவுன்

நீங்கள் நடக்க தொடங்கும்போது உங்களுடைய தசைகளை நெகிழ்வுதன்மையுடன் வைத்திருக்கவும், நடந்து முடிந்ததும் தசைகளில் வலி ஏற்படாமல் தடுக்கவும் வார்ம் அப் மற்றும் கூல் டவுன் பயிற்சிகளை செய்வது அவசியம். நடக்கும் முன்பு 5 நிமிடம் வார்ம் அப், நடந்து முடித்தபின் ஐந்து நிமிடங்கள் கூல் டவுன் பயிற்சிகளை செய்தால் உடலை நெகிழ்வு தன்மையுடன் வைத்திருப்பதோடு, தசை பிடிப்பு, சுளுக்கு போன்ற காயங்கள் ஏற்படாமல் தடுக்கவும் உதவும். நடைபயிற்சியின் பலன்களை முழுதாக பெற்றுக் கொள்ளவும் உதவும். 

- நடைபயிற்சிக்கு முன்னும் பின்னும் தசைகளை நன்கு மசாஜ் செய்யவேண்டும். இதற்கான உபகரணமான உருளைகளை உபயோகிக்கலாம். இந்த உருளைகள் இல்லாவிட்டால் வாட்டர் பாட்டில் வைத்தும் செய்யலாம். யூடியூபில் இதற்கு வழிகாட்டல் வீடியோக்கள் உள்ளன.  
- நடைபயிற்சியுடன் யோகா அல்லது பைலேட்ஸ் பயிற்சிகளை செய்யலாம். 

இங்கே கூறப்பட்டுள்ள ஐந்து விஷயங்களை நீங்கள் பின்பற்றினால் நடைபயிற்சியுடன் கூடுதலான நன்மைகளை பெற முடியும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
நடைப்பயிற்சியின் நன்மைகள்
நடைப்பயிற்சி குறிப்புகள்
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
329
AUSAUS
(91.2 ov)338/4
Day 3 - Session 1
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
குளிர்ந்த நீரா, வெந்நீரா? சாப்பிட்டதும் நீங்கள் செய்யும் இந்தத் தவறு செரிமானத்தைப் பாதிக்குமா?
Recommended image2
Silk Saree : பட்டுப் புடவையின் ஜரிகையில் இருந்து எவ்வளவு தங்கம் கிடைக்கும்? கணக்கு இதோ!
Recommended image3
Tips to Beat Loneliness: தனிமையா ஃபீல் பண்றீங்களா? மனச்சோர்வை விரட்ட 10 சிம்பிள் டிப்ஸ் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved