MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • சட்டென்று மாறுது வானிலை...நம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி?

சட்டென்று மாறுது வானிலை...நம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி?

தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில், மறுநாள் மழை, பகலில் கொளுத்தும் அனல், மாலையில் ஜில்லென்று காற்று என வானிலை திடீர் திடீரென மாறிக் கொண்டே இருக்கிறது. இந்த திடீர் வானிலை மாற்றத்திலிருந்து பாதுகாத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இதோ சில எளிய டிப்ஸ்

1 Min read
Author : Priya Velan
Published : May 18 2026, 12:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தொண்டைக்கு கொடுங்க ஒரு 'ஹெர்பல் கவசம்'!
Image Credit : Getty

தொண்டைக்கு கொடுங்க ஒரு 'ஹெர்பல் கவசம்'!

கிளைமேட் மாறும் போது முதல்ல அட்டாக் ஆகுறது தொண்டை தான். தினமும் காபி, டீ-க்கு பதிலா, சுக்கு, மல்லி, நாலு மிளகு தட்டிப்போட்ட சுடச்சுட கஷாயம் குடிங்க. தொண்டை கரகரப்பு ஸ்டார்ட் ஆனா உடனே கெமிக்கல் மாத்திரை போடாதீங்க. வெதுவெதுப்பான தண்ணியில கொஞ்சம் கல்லுப்பும், ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் போட்டு 'காக்லிங்' (வாய் கொப்பளித்தல்) பண்ணுங்க, வைரஸ் ஓடிடும்!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
'பிரிட்ஜ்' தண்ணீருக்கு நோ... 'பானை' தண்ணீருக்கு எஸ்!
Image Credit : Getty

'பிரிட்ஜ்' தண்ணீருக்கு நோ... 'பானை' தண்ணீருக்கு எஸ்!

வெயில் அடிக்குதேன்னு டக்குனு பிரிட்ஜ்ல இருக்குற ஐஸ் வாட்டரைக் குடிச்சா, அடுத்த ஒரு மணி நேரத்துல ஜலதோஷம் கன்பார்ம்! மண் பானைத் தண்ணீரில் கொஞ்சம் வெட்டிவேர் அல்லது சீரகம் போட்டு குடிங்க. இது உடம்பை இயற்கையாவே குளிர்ச்சியாக வச்சுக்கும்; அதே சமயம் திடீர்னு மழை பெய்ஞ்சு கிளைமேட் மாறினாலும் உடம்புக்கு சளி பிடிக்காது.

Related Articles

Related image1
குழந்தைகளின் மூளை வளர்ச்சியைத் தூண்டும் 8 ஒமேகா-3 நிறைந்த சைவ உணவுகள்
Related image2
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க...வெறும் வயிற்றில் இந்த பழங்களை சாப்பிடுங்க
35
சுடச்சுட உணவுகள் மட்டுமே!
Image Credit : Getty

சுடச்சுட உணவுகள் மட்டுமே!

இந்த சீசன்ல பாக்டீரியாக்கள் காத்துல ஜாலியா சுத்திட்டு இருக்கும். அதனால் காலையில் செஞ்ச சாப்பாட்டை நைட்டு சாப்பிடுறது, பழைய சாதம் சாப்பிடுறதை கொஞ்சம் தவிர்த்திடுங்க. சாப்பாடு எப்பவும் சுடச்சுட இருக்கணும். குறிப்பாக நைட் டின்னருக்கு ரசம் சாதம் அல்லது மிளகு சேர்த்த கஞ்சி சாப்பிட்டா, தூங்கும் போது மூக்கடைப்பு வராமல் நிம்மதியான தூக்கம் வரும்.

45
உடைகளிலும் வேணும் 'ஸ்மார்ட்' பிளான்!
Image Credit : Getty

உடைகளிலும் வேணும் 'ஸ்மார்ட்' பிளான்!

வெளியில் போகும் போது என்ன டிரஸ் போடுறதுன்னு குழப்பமா இருக்கா? வியர்வையை உறிஞ்சுற காட்டன் ஆடைகளைத் தேர்ந்தெடுங்க. பைக்ல போறவங்க உங்க பேக்ல எப்பவும் ஒரு லைட் வெயிட் விண்ட்சீட்டர் (Windcheater) அல்லது ஒரு குட்டி குடை வச்சுக்கோங்க. திடீர்னு அடிக்கிற மழையில இருந்தும் தப்பிக்கலாம், சில்லுனு வர்ற காத்துல இருந்தும் நெஞ்சைப் பாதுகாக்கலாம்!

55
'இம்யூனிட்டி பூஸ்டர்' - சிட்ரஸ் பழங்களின் மேஜிக்!
Image Credit : Getty

'இம்யூனிட்டி பூஸ்டர்' - சிட்ரஸ் பழங்களின் மேஜிக்!

நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) தான் இந்த கிளைமேட் சேஞ்ச்ல நமக்கு இருக்குற ஒரே ஆயுதம். அதுக்கு வைட்டமின் சி ரொம்ப முக்கியம். ரொம்ப காஸ்ட்லியான பழங்கள் வேண்டாம். தினமும் ஒரு நெல்லிக்காய் அல்லது ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான லெமன் ஜூஸ் குடிங்க. இது உடம்புல இருக்குற நச்சுக்களை வெளியேத்தி, பாடியை எப்பவும் அலர்ட்டா வச்சிருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
கோடைக்கால உடல்நலக் குறிப்புகள்
சுகாதார நன்மைகள்
வானிலை
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hotel : ஹோட்டலில் இந்த பொருட்களில் டாய்லெட்டைவிட அதிகமாக அழுக்கு.. பயன்படுத்தும் முன் கவனம்!
Recommended image2
Kitchen Hacks: பால் அடிக்கடி திரிஞ்சு போகுதா? இனி அப்படி நடக்காது.!
Recommended image3
motivational tips தோல்விகள் உங்களை துரத்துகிறதா? 'மாஸ்' ஆக மீண்டு வர 6 சூப்பர் வழிகள்
Related Stories
Recommended image1
குழந்தைகளின் மூளை வளர்ச்சியைத் தூண்டும் 8 ஒமேகா-3 நிறைந்த சைவ உணவுகள்
Recommended image2
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க...வெறும் வயிற்றில் இந்த பழங்களை சாப்பிடுங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved