MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Pimples Remedy: ஒரே இரவில் பருக்கள் மாயமாகும்! ஒரு ரூபாய் செலவில்லாமல் எளிய வீட்டு வைத்தியம் இதோ!

Pimples Remedy: ஒரே இரவில் பருக்கள் மாயமாகும்! ஒரு ரூபாய் செலவில்லாமல் எளிய வீட்டு வைத்தியம் இதோ!

Pimples Remedy: முகத்தில் வரும் பருக்களை ஒரே இரவில் விரட்ட, விலை உயர்ந்த கிரீம்களைத் தேடாதீர்கள். ஒரு பைசா செலவில்லாமல், நமது வீட்டு வேப்பிலையை வைத்தே பருக்களை எப்படி போக்குவது என விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 17 2026, 07:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
முகத்தில் பருக்களை போக்க டிப்ஸ்
Image Credit : Asianet News

முகத்தில் பருக்களை போக்க டிப்ஸ்

காலையில் ஒரு விழா, ஆனால் இரவில் முகத்தில் ஒரு பரு வந்தால் பதற்றம் ஆகிவிடும் அல்லவா? அதற்கு வேதிப்பொருள் (கெமிக்கல்) கிரீம்கள் எல்லாம் வேண்டாம். நமது வீட்டில் இருக்கிற வேப்பிலையே போதும். ஒரே இரவில் பருவைச் சரிசெய்துவிடலாம்.

இயற்கை தந்த அற்புதம் - வேம்பு

ஆயுர்வேதம் முதல் நவீன தோல் மருத்துவர்கள் வரை, வேப்பிலையை ஒரு சிறந்த மருந்து என்று சொல்கிறார்கள். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஃபங்கல் மற்றும் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி குணங்கள் பருக்களுக்கு எதிராகச் செயல்படும்.

இதையும் படிங்க:பால்கனியில் வாஷிங் மெஷின் இருக்கா? தப்பான திசை பண நஷ்டத்தை தருமாம்.. இதை படிங்க!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ஒரே ஒரவில் பிம்பில்ஸ்களை விரட்டியடிக்கும் வேப்பிலை
Image Credit : Getty

ஒரே ஒரவில் பிம்பில்ஸ்களை விரட்டியடிக்கும் வேப்பிலை

சருமத் துளைகளில் பாக்டீரியாக்கள் சேர்வதால்தான் பருக்கள் வருகின்றன. வேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் இந்த பாக்டீரியாக்களை வேரோடு அழித்துவிடும்.

வீக்கம் மற்றும் சிவத்தல் குறையும்

வேப்பிலையில் உள்ள ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி (Anti-inflammatory) பண்புகள், பருக்களால் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் சிவந்த நிறத்தை உடனடியாகக் குறைக்கும்.

எண்ணெய்ப் பசையைக் கட்டுப்படுத்தும்

முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையைக் கட்டுப்படுத்தி, புதிதாகப் பருக்கள் வராமலும் வேப்பிலை தடுக்கும்.

இதையும் படிங்க: தினமும் தூக்கமில்லாம தவிக்கிறீங்களா? படுக்கையறையை இப்படி மாத்திப் பாருங்க!

Related Articles

Related image1
Fridge: கரண்ட் பில்லை மிச்சப்படுத்த ஃப்ரிட்ஜை ஆஃப் செய்றீங்களா? நிபுணர்கள் சொல்வதை கேளுங்க!
Related image2
Fridge: ஃபிரிட்ஜில் பேக்கிங் சோடா வச்சா இவ்ளோ நடக்குமா? 30 நிமிடத்தில் புத்தம் புதுசாக மாறும் மேஜிக்!
36
பருக்களை விரட்டியடிக்க வழிமுறை (Step-by-Step)
Image Credit : Getty

பருக்களை விரட்டியடிக்க வழிமுறை (Step-by-Step)

ஒரே இரவில் நல்ல முடிவைப் பார்க்க, இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:

  • புதிய வேப்பிலைகளைக் கழுவி, விழுது போல் அரைத்துச் சாறு எடுங்கள்.

இரவில் தூங்குவதற்கு முன்னால், முகத்தை நன்றாகக் கழுவித் துடைத்துக் கொள்ளுங்கள்.

  • ஒரு பஞ்சு முனைக் குச்சி (Cotton buds) வைத்து, பரு இருக்கிற இடத்தில் மட்டும் அந்தச் சாறை வையுங்கள்.
  • இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு, காலையில் எழுந்ததும் தண்ணீரில் முகத்தைக் கழுவுங்கள். பருவின் வீக்கம் குறைந்து, அது காயத் தொடங்கியிருப்பதை நீங்களே காண்பீர்கள்.
46
சருமத்துக்கு கூடுதல் பொழிவை பெற
Image Credit : PINTEREST

சருமத்துக்கு கூடுதல் பொழிவை பெற

வேப்பிலையுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் அல்லது துளசி இலைகளைச் சேர்த்து அரைத்துப் பயன்படுத்துவது சருமத்திற்கு கூடுதல் பொலிவையும் ஆரோக்கியத்தையும் தரும். மஞ்சள் இயற்கையிலேயே சிறந்த கிருமிநாசினி என்பதால், அது பருக்கள் உருவாவதை ஆரம்ப நிலையிலேயே தடுக்கிறது. 

மேலும், பருக்களால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை மிக விரைவாக மறைக்க இது உதவுகிறது. பருக்கள் முழுமையாக மறைந்த பிறகும் அந்த இடத்தில் ஏற்படும் கருமை நிறத்தைக் குறைக்க, வேப்பிலைச் சாற்றுடன் சில துளிகள் தேன் கலந்து தேய்த்து வரலாம்.

இதையும் படிங்க: சோபாவை 10 நிமிடத்தில் புதுசு போல மாற்றலாம்! இதோ அந்த 'வைரல் பாத்திர மூடி' ரகசியம்!

56
பருக்கள் இருக்கும்போது இதை மட்டும் செய்யாதீங்க
Image Credit : stockPhoto

பருக்கள் இருக்கும்போது இதை மட்டும் செய்யாதீங்க

அதேபோல, பருக்கள் இருக்கும்போது அவற்றை நகங்களால் கிள்ளவோ அல்லது கைகளால் அழுத்தவோ கூடாது. அவ்வாறு செய்வதால் பாக்டீரியாக்கள் முகத்தின் மற்ற இடங்களுக்கும் பரவி, புதிய பருக்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கும். முகத்தை எப்போதும் சுத்தமான குளிர்ந்த நீரால் கழுவி வர வேண்டும். 

அத்துடன், தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலின் நச்சுக்களை வெளியேற்றி, உள்ளிருந்தே சருமத்தை பொலிவாகவும் பருக்கள் இல்லாமலும் வைத்திருக்க உதவும். ஆரோக்கியமான உணவு முறையும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

அதிக எண்ணெய் மற்றும் காரமான உணவுகளைத் தவிர்த்து, பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. இது சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான செபம் (Sebum) எனப்படும் எண்ணெய்ப் பசையைக் கட்டுப்படுத்தி, முகப்பருக்கள் மீண்டும் வராமல் தடுக்கிறது.

66
முக்கிய அறிவிப்பு
Image Credit : pisabay

முக்கிய அறிவிப்பு

உங்களுடைய சருமம் மிகவும் உணர்திறன் (Sensitive Skin) வாய்ந்தது என்றால், முகத்தில் தடவுவதற்கு முன்னால் கையில் ஒவ்வாமைப் பரிசோதனை (Patch test) செய்து பாருங்கள். வேதிப் பொருட்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்வதற்குப் பதிலாக, இந்த இயற்கை வழியை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
tomato chutney: 5 வித்தியாசமான சுவைகளில் அசத்தலான தக்காளி சட்னி ரெசிபிகள்
Recommended image2
banana stem cutlet: மொறுமொறுப்பான வாழைத்தண்டு கட்லெட் செய்வது எப்படி?
Recommended image3
Green Chutney: ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி வேணுமா? அரைக்கும் போது இந்த 2 சீக்ரெட் பொருளை மட்டும் சேருங்க.!
Related Stories
Recommended image1
Fridge: கரண்ட் பில்லை மிச்சப்படுத்த ஃப்ரிட்ஜை ஆஃப் செய்றீங்களா? நிபுணர்கள் சொல்வதை கேளுங்க!
Recommended image2
Fridge: ஃபிரிட்ஜில் பேக்கிங் சோடா வச்சா இவ்ளோ நடக்குமா? 30 நிமிடத்தில் புத்தம் புதுசாக மாறும் மேஜிக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved