MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Sofa Cleaning: சோபாவை 10 நிமிடத்தில் புதுசு போல மாற்றலாம்! இதோ அந்த 'வைரல் பாத்திர மூடி' ரகசியம்!

Sofa Cleaning: சோபாவை 10 நிமிடத்தில் புதுசு போல மாற்றலாம்! இதோ அந்த 'வைரல் பாத்திர மூடி' ரகசியம்!

Sofa Cleaning: அழுக்காக இருக்கும் உங்கள் வீட்டு சோபாவை வெறும் 10 நிமிடத்தில் புதுசு போல மாற்றலாம். அதற்கான எளிய வழிமுறைகளை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 14 2026, 07:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sofa Cleaning   சோபாவை 10 நிமிடத்தில் புதுசு போல மாற்றலாம்
Image Credit : AI

Sofa Cleaning - சோபாவை 10 நிமிடத்தில் புதுசு போல மாற்றலாம்

வீட்டின் வரவேற்பறையில் முக்கிய அங்கம் வகிப்பது சோபாதான். ஆனால், தினமும் நாம் பயன்படுத்துவதால் தூசி, வியர்வை, உணவுத் துகள்கள், குழந்தைகளின் கிறுக்கல்கள் என சுலபமாக அழுக்காகிவிடும். இதை நீண்ட நாட்கள் கவனிக்காமல் விட்டால், சோபாவின் அழகே கெட்டுப்போவதுடன், துர்நாற்றம் வீசி, ஒவ்வாமைப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடும். ஆனால் கவலை வேண்டாம், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, வீட்டிலேயே உங்கள் சோபாவை மீண்டும் புதிதுபோல் மாற்ற முடியும்.

இதையும் படிங்க: Running Shoes: உங்க கால்களுக்கு எது செட் ஆகும்? ரன்னிங் ஷூ வாங்கும் போது செய்யக்கூடாத 3 தவறுகள்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சோபாவை சுத்தம் செய்வதற்கு முன் இதை கவனிங்க
Image Credit : pinterest

சோபாவை சுத்தம் செய்வதற்கு முன் இதை கவனிங்க

முதலில், உங்கள் சோபாவை சுத்தம் செய்யத் தொடங்கும் முன், அதன் துணிக்கு எந்த வகை கிளீனிங் முறை சரியானது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்காக சோபாவின் குஷன்களுக்கு அடியில் இருக்கும் 'கிளீனிங் கோட்' (Cleaning Code) லேபிளைப் பாருங்கள். அதில் 'W' எனக் குறிப்பிட்டிருந்தால் தண்ணீர் சார்ந்த கிளீனர்களையும், 'S' எனக் குறிப்பிட்டிருந்தால் தண்ணீர் இல்லாத சால்வென்ட் (Solvent) வகை கிளீனர்களையும் பயன்படுத்த வேண்டும். 'X' என்று இருந்தால், வாக்யூம் கிளீனர் அல்லது பிரஷ் கொண்டு மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும்.

நீங்கள் எந்தக் கிளீனிங் கரைசலைப் பயன்படுத்தினாலும், அதை சோபாவின் மறைவான ஒரு சிறிய இடத்தில் முதலில் சோதனை செய்வது மிக அவசியம். சுமார் 10 நிமிடங்கள் கழித்து, துணியின் நிறம் மாறவில்லை என்பதை உறுதி செய்த பிறகே, முழு சோபாவையும் சுத்தம் செய்யத் தொடங்குங்கள். மேலும், சுத்தம் செய்வதற்கு முன்பு வாக்யூம் கிளீனர் கொண்டு சோபாவின் மூலை முடுக்குகளில் உள்ள தூசிகளை முழுமையாக அகற்றிவிடுங்கள். இது, ஈரத்துணியால் துடைக்கும்போது தூசி பரவி கறையாக மாறுவதைத் தடுக்கும்.

இதையும் படிங்க:தியேட்டர், மால் டாய்லெட் கதவுக்கு கீழே ஏன் பெரிய கேப் இருக்கு? 99% பேருக்கு தெரியாத உண்மை!

34
வைரலாகும் பாத்திர மூடி டிப்ஸ்
Image Credit : getty

வைரலாகும் பாத்திர மூடி டிப்ஸ்

வீட்டிலேயே கிளீனிங் கரைசல் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீருடன், சில துளிகள் பாத்திரம் கழுவும் திரவம் மற்றும் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவைச் சேர்த்துக் கலக்குங்கள். இப்போதுதான் அந்த வைரல் டெக்னிக்கே வருகிறது. 

ஒரு மைக்ரோஃபைபர் துணியை இந்தக் கரைசலில் நனைத்து, தண்ணீர் சொட்டாத அளவுக்குப் பிழிந்து, ஒரு தட்டையான பாத்திர மூடியின் மீது விரித்து ரப்பர் பேண்டால் இறுக்கமாகக் கட்டிக்கொள்ளுங்கள். இந்த மூடியைப் பயன்படுத்தி சோபாவின் மேற்பரப்பை ஒரே திசையில் மெதுவாகத் தேய்த்தால், கைகளால் சுத்தம் செய்ய முடியாத அழுக்குகள்கூட எளிதாக வெளியேறும். ஆச்சரியமாக இருக்கிறதா? இந்த முறை அழுக்கை நீக்குவதோடு, அதிக தண்ணீர் சோபாவுக்குள் இறங்குவதையும் தடுக்கிறது.

44
கறைகள் மற்றும் துர்நாற்றத்தை விரட்ட..
Image Credit : pinterest

கறைகள் மற்றும் துர்நாற்றத்தை விரட்ட..

காபி, டீ போன்ற கறைகள் மீது, தயாரித்து வைத்துள்ள சோப்புக் கரைசலைத் தொட்டு மெதுவாக ஒற்றி எடுத்தால் போதும். தேய்க்க வேண்டாம், ஒற்றி எடுப்பதுதான் முக்கியம். பேனா மை போன்ற கறைகளுக்கு, பஞ்சில் சிறிதளவு ரப்பிங் ஆல்கஹால் தொட்டு மெதுவாகத் துடைக்கலாம். 

சோபாவிலிருந்து வரும் விரும்பத்தகாத வாசனையைப் போக்க, அதன் மீது பேக்கிங் சோடாவைத் தூவி, சுமார் 20 நிமிடங்கள் கழித்து வாக்யூம் கிளீனர் மூலம் உறிஞ்சி எடுத்தால், துர்நாற்றம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சுத்தம் செய்த பிறகு, சோபாவை மின்விசிறி அல்லது ஜன்னல்களைத் திறந்து வைத்து இயற்கையான காற்றில் முழுமையாக உலர வைப்பது மிக முக்கியம். பட்டு, வெல்வெட் போன்ற விலை உயர்ந்த துணி சோபாக்களுக்கு இந்த வீட்டு முறைகள் சரிவராது; அதற்கு தொழில்முறை கிளீனர்களின் உதவியை நாடுவதுதான் சிறந்தது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
சுத்தம் குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Related Stories
Recommended image1
Iron Box Cleaning: அயர்ன் பாக்ஸ் கறையை 5 நிமிடத்தில் நீக்கலாம்! சமையலறை பொருட்கள் போதும்!
Recommended image2
Fridge: ஃபிரிட்ஜில் பேக்கிங் சோடா வச்சா இவ்ளோ நடக்குமா? 30 நிமிடத்தில் புத்தம் புதுசாக மாறும் மேஜிக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved