MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Iron Box Cleaning: அயர்ன் பாக்ஸ் கறையை 5 நிமிடத்தில் நீக்கலாம்! சமையலறை பொருட்கள் போதும்!

Iron Box Cleaning: அயர்ன் பாக்ஸ் கறையை 5 நிமிடத்தில் நீக்கலாம்! சமையலறை பொருட்கள் போதும்!

Iron Box Cleaning: அயர்ன் பாக்ஸில் உள்ள கருகிய கறை ஆடைகளில் படிந்துவிடுகிறதா? கத்தி, ஸ்க்ரப்பர் இல்லாமல், பேக்கிங் சோடா, வினிகர் போன்ற எளிய வீட்டுப் பொருட்களை வைத்தே அதை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 09 2026, 11:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அயர்ன் பாக்ஸ் சுத்தம் செய்வது எப்படி
Image Credit : AI

அயர்ன் பாக்ஸ் சுத்தம் செய்வது எப்படி

நீங்கள் வேலைக்கோ அல்லது முக்கிய விழாவுக்கோ அவசரமாக கிளம்பும்போது, அயர்ன் செய்த சட்டையில் கருப்புக்கறை படிந்தால் எப்படி இருக்கும்? பலரும் இந்த சிக்கலை சந்தித்திருப்போம். அதிக வெப்பம் அல்லது ஒரே இடத்தில் அயர்ன் பாக்ஸை நீண்ட நேரம் வைப்பதால், துணியின் சில பகுதிகள் கருகி அதன் அடிப்பாகமான soleplate-ல் ஒட்டிக்கொள்கின்றன. இதை சுத்தம் செய்யாமல் விட்டால், அடுத்தடுத்து அயர்ன் செய்யும் மற்ற ஆடைகளும் பாழாகிவிடும்.

இதை ஒருபோதும் செய்யாதீங்க

கறையை நீக்குகிறேன் என கத்தி, பிளேடு அல்லது ஸ்டீல் ஸ்க்ரப்பர் போன்ற கூர்மையான பொருட்களைக் கொண்டு ஒருபோதும் சுரண்டக் கூடாது. இது அயர்ன் பாக்ஸின் அடிப்பாகத்தில் நிரந்தர கீறல்களை உண்டாக்கி, அதன் non-stick அல்லது ceramic பூச்சுகளை முற்றிலுமாக சேதப்படுத்திவிடும். இதன் பிறகு, நீங்கள் அயர்ன் செய்யும் ஒவ்வொரு முறையும் துணிகள் கிழிந்துபோக வாய்ப்புள்ளது. பாதுகாப்பான மற்றும் எளிய முறைகளைப் பின்பற்றுவதே சிறந்தது. சுத்தம் செய்வதற்கு முன்பு, அயர்ன் பாக்ஸை மின் இணைப்பிலிருந்து துண்டித்து, அது முழுவதுமாக குளிர்ந்துவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இது மிக மிக அவசியம்.

இதையும் படிங்க: இரும்பு பீரோவில் விடாப்பிடியான கறையா? சுலபமாக பளபளக்க வைக்க 'சூப்பர்' டிப்ஸ்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அயர்ன் பாக்ஸ் கறையை 5 நிமிடத்தில் நீக்கலாம்
Image Credit : pixabay

அயர்ன் பாக்ஸ் கறையை 5 நிமிடத்தில் நீக்கலாம்

முதலில், இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பசை போல செய்துகொள்ளுங்கள். இந்தப் பசையை கறை படிந்த இடங்களில் தடவி, சில நிமிடங்கள் கழித்து பழைய டூத் பிரஷ் கொண்டு மெதுவாகத் தேய்த்தால், கறைகள் எளிதில் இளகி வந்துவிடும். பிறகு, ஈரமான துணியால் துடைத்து எடுத்தால் அயர்ன் பாக்ஸ் பளபளக்கும். பேக்கிங் சோடாவில் போகாத பிடிவாதமான கறைகளுக்கு வெள்ளை வினிகர் நல்ல தீர்வு.

இதையும் படிங்க: வாட்டர் பாட்டிலில் ஒரே துர்நாற்றமா? 'இந்த' 2 பொருள் போதும்! புதுசு போல ஜொலிக்கும்!

Related Articles

Related image1
Kitchen Hacks: வெறும் ரூ.300-ல் தரமான ஸ்டீல் ரேக்! இனி உங்க கிச்சன் கசகசன்னு இருக்காது!
Related image2
Train Food: பிரியாணியையே ஓரங்கட்டிய 'அந்த' உணவு! ரயிலில் பயணிகள் அதிகம் ஆர்டர் செய்த ஃபுட் லிஸ்ட் இதோ!
34
சமையலறை பொருட்களே போதும்
Image Credit : google

சமையலறை பொருட்களே போதும்

சம அளவு வினிகர் மற்றும் தண்ணீரை கலந்து, அதில் ஒரு மென்மையான துணியை நனைத்து அயர்ன் பாக்ஸின் அடிப்பாகத்தை துடைக்கலாம். வினிகரின் தன்மை, கருகிய எச்சங்களை எளிதில் கரைத்துவிடும். இன்னொரு ஆச்சரியமான வழி உப்பு பயன்படுத்துவது. ஒரு தடிமனான காகிதத்தில் சமையல் உப்பை பரப்பி, மிதமான சூட்டில் உள்ள அயர்ன் பாக்ஸை அதன் மீது வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். உப்பின் சொரசொரப்பு தன்மை கறைகளை அகற்றிவிடும். ஆனால், இந்த முறையை பயன்படுத்தும்போது ஸ்டீம் பட்டனை 'OFF' செய்துவிடுவது முக்கியம்.

இதையும் படிங்க:ஃபிரிட்ஜில் பேக்கிங் சோடா வச்சா இவ்ளோ நடக்குமா? 30 நிமிடத்தில் புத்தம் புதுசாக மாறும் மேஜிக்!

44
இதை செய்தால் அயர்ன் பாக்ஸ் துணி கருகுவதை தடுக்கலாம்
Image Credit : Getty

இதை செய்தால் அயர்ன் பாக்ஸ் துணி கருகுவதை தடுக்கலாம்

இந்த முறைகள் மட்டுமின்றி, ஜெல் இல்லாத வெள்ளை நிற டூத் பேஸ்ட்டை கறையின் மீது தடவி, மென்மையான பிரஷ் கொண்டு தேய்த்தாலும் நல்ல பலன் கிடைக்கும். ஸ்டீம் அயர்ன் பயன்படுத்துபவர்கள், அதன் நீராவி வரும் துளைகளை (Steam Holes) காட்டன் பட்ஸ் கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்வதும் அவசியம். மீண்டும் இதுபோல கறை படியாமல் இருக்க, ஒவ்வொரு துணிக்கும் ஏற்ற சரியான வெப்பநிலையை செட் செய்யுங்கள். பாலியஸ்டர், சில்க் போன்ற துணிகளுக்கு குறைந்த வெப்பமும், காட்டன் போன்றவற்றுக்கு அதிக வெப்பமும் தேவை. அயர்ன் செய்யும்போது ஒரே இடத்தில் வைக்காமல், தொடர்ந்து நகர்த்திக்கொண்டே இருப்பதன் மூலம் துணி கருகுவதை தவிர்க்கலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Train Food: பிரியாணியையே ஓரங்கட்டிய 'அந்த' உணவு! ரயிலில் பயணிகள் அதிகம் ஆர்டர் செய்த ஃபுட் லிஸ்ட் இதோ!
Recommended image2
Cleaning Tips: இரும்பு பீரோவில் விடாப்பிடியான கறையா? சுலபமாக பளபளக்க வைக்க 'சூப்பர்' டிப்ஸ்!
Recommended image3
Turmeric Milk: தூங்குவதறதுக்கு முன் மஞ்சள் பால் குடிச்சா இவ்ளோ நல்லதா?
Related Stories
Recommended image1
Kitchen Hacks: வெறும் ரூ.300-ல் தரமான ஸ்டீல் ரேக்! இனி உங்க கிச்சன் கசகசன்னு இருக்காது!
Recommended image2
Train Food: பிரியாணியையே ஓரங்கட்டிய 'அந்த' உணவு! ரயிலில் பயணிகள் அதிகம் ஆர்டர் செய்த ஃபுட் லிஸ்ட் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved