MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Kitchen Tips: பருப்பில் வண்டு வராம இருக்கணுமா? ரொம்ப நாள் கெடாம இருக்கணுமா? இந்த ட்ரிக் மட்டும் யூஸ் பண்ணுங்க.!

Kitchen Tips: பருப்பில் வண்டு வராம இருக்கணுமா? ரொம்ப நாள் கெடாம இருக்கணுமா? இந்த ட்ரிக் மட்டும் யூஸ் பண்ணுங்க.!

How to Protect Lentils From Insects: பருவமழை காலம் தொடங்க இருக்கிறது. இந்த நேரத்தில் இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய சவாலே சமையலறையில் இருக்கும் பருப்பு வகைகளில் வண்டு வருவது தான். அதை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து இங்கு காணலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Jun 13 2026, 12:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பருப்பில் வண்டு வராமல் இருக்க
Image Credit : ChatGPT

பருப்பில் வண்டு வராமல் இருக்க

பருவமழை காலம் தொடங்கி விட்டாலே சமையலறையில் இருக்கும் அரிசி, பருப்புகளில் பூச்சிகள் மற்றும் வண்டு வரும் வாய்ப்புகள் அதிகம். இல்லத்தரசிகள் பருவமழை தொடங்கிய பின்னர் வண்டுகள் மற்றும் பூச்சிகளிடமிருந்து தானியங்களை பாதுகாப்பதற்கு பெரும் சிரமப்பட வேண்டி இருக்கும். ஆனால் இந்த பதிவில் சில எளிய வழிமுறை மூலம் வண்டுகள் மற்றும் பூச்சிகளிடமிருந்து பருப்புகளை நம்மால் பாதுகாக்க முடியும். அது குறித்து இங்கு பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்: Facts: அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
பருப்பில் வண்டு வருவதற்கான முக்கிய காரணங்கள்
Image Credit : Getty

பருப்பில் வண்டு வருவதற்கான முக்கிய காரணங்கள்

பருப்பு அல்லது தானியங்களில் வண்டு வருவதற்கு முக்கிய காரணம் அதில் உள்ள ஈரப்பதம் தான். அதிக அளவில் பருப்புகளை சேமித்து வைத்திருந்தால் அதில் இருக்கும் ஈரப்பதமே அதற்கு எதிரியாக மாறிவிடும். எனவே மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை நன்றாக சூரிய ஒளியில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெயிலில் வைத்து எடுத்த பிறகு அறை வெப்ப நிலையில் நன்கு காய வைத்து அதன் பின்னர் காற்று புகாத டப்பாவில் வைத்து அடைத்து விடுங்கள்.

இதையும் படியுங்கள்:  Washing Machine Cleaning: வாஷிங் மெஷின்ல தண்ணி சரியா வெளியேற மாட்டிக்குதா? 5 நிமிஷத்துல நீங்களே சரிபண்ணிடலாம்.!

Related Articles

Related image1
Cashew Farming: கோடிகளில் வருமானம் தரும் முந்திரி விவசாயம்.! முந்திரி சாகுபடி செய்யவது எப்படி? எளிய வழிமுறை இதோ.!
Related image2
Skin Care for Kids: கோடையில் குழந்தையின் தோலில் வெள்ளைத் திட்டுகளா? 4 ஸ்டெப்ஸில் தீர்வு
36
பருப்புகளை சேமிக்கும் டப்பாக்கள்
Image Credit : Gemini AI

பருப்புகளை சேமிக்கும் டப்பாக்கள்

பருப்புகளை சேமிப்பதற்கு டப்பாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சரியான டப்பாக்களை தேர்ந்தெடுக்காவிட்டால் அதில் எளிதில் பூச்சிகள் பரவலாம். காற்றும், ஈரப்பதமும் புகாத அளவிற்கு கண்ணாடி, எவர் சில்வர் அல்லது தரமான பிளாஸ்டிக் கன்டைனரில் சேமிக்க வேண்டும். பருப்புகளை சேமிக்கும் டப்பாக்களை கழுவி, நன்கு உலர்ந்த பின்னரே அதில் சேமிக்க வேண்டும். டப்பாக்களில் இருக்கும் சிறு ஈரப்பதம் கூட பூச்சி அல்லது வண்டுகளை வரவழைக்கும். எனவே சரியான கண்ணாடி பாட்டில்கள் துரு பிடிக்காத எவர்சில்வர் பாட்டில்களில் காற்று புகாதவாறு சேமிப்பது அவசியம்.

இதையும் படியுங்கள்: Old Nighties Reuse Ideas: பழைய நைட்டியை தூக்கிப் போடாதீங்க.! வீட்டுக்கு தேவையான 5 சூப்பர் பொருட்களை செய்யலாம்.!

46
பிரியாணி இலை அல்லது பூண்டு
Image Credit : Freepik

பிரியாணி இலை அல்லது பூண்டு

பருப்பு இருக்கும் டப்பாக்களில் பூச்சி வராமல் இருப்பதற்கு பிரியாணி இலைகள் உதவுகிறது. பருப்பு டப்பாவில் மூன்று முதல் நான்கு பிரிஞ்சி இலைகளை போட்டு வைக்கலாம். இந்த இலைகள் பலமான வாசனை கொண்டது. மேலும் இதில் இருக்கும் காரத்தன்மை வண்டுகள் மற்றும் பூச்சிகளை விரட்டும். இதனால் பருப்புகள் நீண்ட நாட்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். பருப்புகளை பூச்சிகளிடமிருந்து காப்பாற்ற பூண்டுகளும் உதவும். பருப்பு டப்பாவில் நான்கு முதல் ஐந்து பூண்டு பற்களை சேர்த்தால் பருப்பு கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:  Rocket Stove: சிலிண்டர் விலை உயர்ந்தாலும் கவலை இல்லை.! 10 செங்கல் வச்சு சூப்பர் அடுப்பு செய்யலாம்.! 24 மணி நேரமும் சமைக்கலாம்.!

56
காய்ந்த மிளகாய்/வசம்பு/கிராம்பு
Image Credit : Getty

காய்ந்த மிளகாய்/வசம்பு/கிராம்பு

பருப்பு இருக்கும் டப்பாவில் மூன்று அல்லது நான்கு காம்பு உள்ள காய்ந்த மிளகாய்களை போட்டு வைக்கலாம். இதன் காரத்தன்மைக்கு வண்டுகள் வராது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வசம்பை ஒரு துணியில் முடிந்து, பருப்பு டப்பாவிற்குள் போட்டு வைக்கலாம். இதனால் எந்த பூச்சியும் அண்டாது. அல்லது நான்கு முதல் ஐந்து கிராம்புகளையும் போட்டு வைக்கலாம். உங்களிடம் அதிக அளவு பருப்பு இருந்தால் அதை பயன்படுத்த அளவிற்கு மட்டும் வெளியில் எடுத்துவிட்டு மீதியை ஃப்ரிட்ஜில் வைத்து விடலாம். இதனால் பல ஆண்டுகள் ஆனாலும் வண்டு வராது.

இதையும் படியுங்கள்:  Bay Leaf Benefits: சாதம் வடிக்கும்போது ஒரு பிரியாணி இலை.! இவ்வளவு மருத்துவ நன்மைகள் கிடைக்குமா?

66
முக்கிய குறிப்பு
Image Credit : Gemini AI

முக்கிய குறிப்பு

பருப்பை எடுக்கும் பொழுது எப்போதும் ஈரம் இல்லாத காய்ந்த கரண்டிகளையே பயன்படுத்த வேண்டும். கைகளில் எடுப்பதாக இருந்தால் கைகள் ஈரம் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஈரமான கைகளால் பருப்புகளை எடுத்தால் அதில் வண்டு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த நடைமுறைகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றினாலே உங்கள் வீட்டு பருப்பு வகைகள் நீண்ட நாட்களுக்கு வண்டு பிடிக்காமல் சுத்தமாக இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
சமையலறை குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Skin Care for Kids: கோடையில் குழந்தையின் தோலில் வெள்ளைத் திட்டுகளா? 4 ஸ்டெப்ஸில் தீர்வு
Recommended image2
Hair Fall: அடிக்கடி முடி கொட்டுகிறதா? குளிக்கும்போது 'இந்த' 5 தவறுகளை செய்யாதீங்க!
Recommended image3
Sleeping Tips : படுத்தவுடன் தூங்க வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க 5 நிமிஷத்துல தூங்கிடலாம்!
Related Stories
Recommended image1
Cashew Farming: கோடிகளில் வருமானம் தரும் முந்திரி விவசாயம்.! முந்திரி சாகுபடி செய்யவது எப்படி? எளிய வழிமுறை இதோ.!
Recommended image2
Skin Care for Kids: கோடையில் குழந்தையின் தோலில் வெள்ளைத் திட்டுகளா? 4 ஸ்டெப்ஸில் தீர்வு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved