Storing bananas: வாழைப்பழங்கள் 7 நாள்கள் ஆனாலும் கெட்டு போகாமல் ப்ரெஷாக இருக்க சூப்பர் டிப்ஸ்!!
வாழைப்பழங்கள் ஒரு வாரம் வரைக்கும் கருப்பாக மாறாமல், அழுகாமல் ப்ரெஷாக இருக்க சில பயனுள்ள குறிப்புகளை இங்கு காணலாம்.
அனைவரும் வாங்கக் கூடிய விலையில் கிடைக்கும் ஒரே பழம் வாழைப்பழம். நாவின் சுவை நரம்புகளையும் இவை திருப்திப்படுத்தும். நன்கு கனிந்த வாழைப்பழங்கள் தித்திப்பான சுவையில் இருக்கும். இதை சாப்பிடுவதால் உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும். வாழைப்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளது. பல நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியை உடலுக்குத் தருகிறது. வாழைப்பழத்தில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினமும் வாழைப்பழம் உண்பதால் அந்த பிரச்சனை அப்படியே குணமாகும். செரிமான அமைப்பு, சிறுநீரகம், இதயம் தொடர்பான நோய்களிலிருந்து விடுபட வாழைப்பழம் உதவும்.
எத்தனையோ உடல்நல நன்மைகளை வாழைப்பழம் வாரி கொடுத்தாலும் கோடைக்காலத்தில் வாழைப்பழத்தை நீண்ட காலம் கெடாமல் பாதுகாப்பது கடினம். சீக்கிரமே கனிந்துவிடும். சிக வாழைப்பழங்கள் விரைவில் அழுகியேவிடுகிறது. வாழைப்பழத்தை நீண்ட காலம் வைத்திருந்தால் கருப்பாக மாறும். வாழைப்பழங்கள் கருப்பாக மாறாமல் இருக்க சில டிப்ஸை இங்கு காணலாம்.
வாழைப்பழம் கருப்பு நிறத்தில் மாறாமல் இருக்க அதனுடைய தண்டில் நூல் கட்டி தொங்கவிட வேண்டும். இப்படி வாழை சீப்புகளை தொங்கவிட்டால் விரைவில் கெட்டுப்போகாது. இது தவிர வாழைப்பழம் கருப்பாக மாறாமல் இருக்க பிளாஸ்டிக் பையில் சுற்றி வைத்துக்கொள்ளலாம். வாழைத்தண்டையும் டேப் வைத்து ஒட்டிவிடலாம்.
வாழைப்பழத்தை ப்ரெஷ்ஷாக வைத்திருக்க, ஒரு பாத்திரத்தில் வினிகரைப் போட்டு, அதில் வாழைப்பழத்தைப் போட்டு, தனித்தனியாக தொங்கவிடவும். விரைவில் கெடாது. இந்த டிப்ஸுகளை பயன்படுத்தி வீட்டில் வாழைப்பழங்களை கெடாமல் பத்திரப்படுத்தலாம்.
இதையும் படிங்க: கழிப்பறையும் குளியலறையும் இணைந்திருந்தால் பிரச்சனையா? குளியலறை வாஸ்து பிரச்சனையை தடுக்க எளிய பரிகாரம்!!