நல்ல தர்பூசணியை வாங்குவது எப்படி? இந்த 6 வழிகள் இருக்கு..! 1 தர்பூசணிக்குள் ஓராயிரம் நன்மைகள்!!
watermelon benefits in tamil: நல்ல சுவையான தர்பூசணி பழங்களை தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி? பயனுள்ள டிப்ஸ்...
Tamil health updates watermelon benefits: சுட்டெரிக்கும் வெயிலில் தர்பூசணி நமக்கு கிடைத்த அருமருந்து. வாயில் தர்பூசணி பழத்தை வைத்து கடித்தால் இனிப்பு சுவையுள்ள தண்ணீர் தொண்டையில் இதமாக இறங்கும். வெயிலுக்கு அப்படி ஒரு ஊட்டம் தரும் பழம் வேறு இல்லை. உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து வெயில் கால நோய்களில் இருந்து விலக்கி வைக்கும்.
|
இந்த பழத்தை காலை உணவின் போது அல்லது மதிய உணவுக்கு முன்பு உண்ணலாம். மாலையில் உண்ணலாமே தவிர இரவில் உண்ணக் கூடாது. இந்த பழத்தில் காணப்படும் வைட்டமின் சி சத்து நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. தலைமுடி, சரும ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் பி, பீட்டா கரோட்டின் தர்பூசணியில் அதிகம் உள்ளன.
|
தர்பூசணியில் 91% நீர் சத்து உள்ளது. நார்ச்சத்தும் அதிகம் கொண்ட இந்த பழம் பசியை கட்டுப்படுத்துகிறது. உடல் எடை குறைப்பில் தர்ப்பூசணி பழம் உதவும். நிறைந்துள்ளது. கண் பார்வையை மேம்படுத்தும்.
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் என்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும். அழற்சி எதிர்ப்பு தன்மை அதிகம் கொண்டது. தர்பூசணி பழத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கும்போது, அதனை நல்ல பழமாக பார்த்து வாங்குவது அவசியம் தானே.. எப்படி அதை தேர்ந்தெடுப்பது என்பதை இங்கு காணலாம்.
நல்ல தர்பூசணியை வாங்குவது எப்படி?
• நாம் வாங்கும் தர்பூசணி எந்த வடிவம் என்பதில் கொஞ்சம் கவனம் வேண்டும். வட்டமான தர்பூசணி, நீள் வட்டமான தர்ப்பூசணி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை... அதில் புடைப்புகள், வெட்டுக்கள் இருக்கக் கூடாது. சீரான வடிவத்தில் இருக்க வேண்டும்.
• தர்பூசணியைத் தேர்ந்தெடுக்கும்போது, அதன் அளவுக்கு ஏற்ற கனம் கொண்ட பழத்தை தேர்ந்தெடுங்கள். சில பழங்கள் பார்க்க பெரிதாகவும் கையில் எடுத்தால் எடையில்லாமலும் இருக்கும். அது வேண்டாம்.
நல்ல தர்பூசணியை வாங்குவது எப்படி?
• தர்பூசணியைச் சுற்றி மஞ்சள் நிறப் புள்ளி இருக்கிறதா என்பதை தேடுங்கள், இது கொடியின் உச்சக்கட்ட முதிர்ச்சியை குறிக்கும். ஆனால் வெள்ளை நிற புள்ளிகளை கண்டால் அதை தவிர்க்கவும்.
• உங்கள் கை அல்லது முஷ்டியால் தர்பூசணியைத் தட்டி பாருங்கள். அதில் நல்ல ஆழமான சத்தம் வந்தால் அது பழுத்த பழம். அதிக பழுத்த பழம் என்றால் வெற்று அல்லது தட்டையாக ஒரு சத்தம் வரும்.
இதையும் படிங்க: Throat Pain: தொண்டை வலி.. விழுங்குவதில் சிரமமா? நிவாரணம் கிடைக்க இந்த 6 உணவுகளை செய்து சாப்பிடுங்க..!
நல்ல தர்பூசணியை வாங்குவது எப்படி?
• நன்கு பழுத்த தர்பூசணியானது எளிதில் கீற முடியாத உறுதியான தோலைக் கொண்டிருக்கும்.
• ஒரு தர்பூசணியின் காம்பு என்பது அறுவடையின் போது வெட்டப்பட்ட தண்டு. உலர்ந்த தண்டு பொதுவாக பழுத்த தர்பூசணியைக் குறிக்கிறது.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பயன்படுத்தி கோடை காலத்தில் நல்ல தர்பூசணிகளை வாங்கி முழு பலன்களை பெறுங்கள்..
இதையும் படிங்க: மொபைலுக்கு அடிமையாகும் குழந்தைகளுக்கு வரும் பாதிப்புகள்.. அதிலிருந்து விலக்கி பாதுகாப்பது எப்படி?