மொபைலுக்கு அடிமையாகும் குழந்தைகளுக்கு வரும் பாதிப்புகள்.. அதிலிருந்து விலக்கி பாதுகாப்பது எப்படி?
மொபைல் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றி இங்கு காணலாம்.
இன்றைய காலகட்டத்தில் மொபைல் எல்லோருக்கும் முக்கியமான பொருளாக மாறிவிட்டது. ஆனாலும் குழந்தைகளுக்கு அதிக மொபைல் பயன்பாடு ஆபத்தானது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஏனெனில் இதனால் குழந்தைகளின் நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படுகிறது. அதிகமாக மொபைல் பயன்படுத்தும் குழந்தைகளால் கவனத்தை குவித்து எந்த செயலையும் செய்ய முடிவதில்லை. ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு விஷயங்கள் ஆதிக்கம் செலுத்தும். அப்படி இன்றைய தலைமுறையினரை மொபைல் போன் ஆட்டிப்படைக்கிறது.
குழந்தைகள், தொடர்ந்து மொபைல் பயன்படுத்தும் போது அவர்களுடைய சிறுபிள்ளைத்தனம், அப்பாவித்தனம் காணாமல் போகிறது. அவர்களின் உடல் செயல்பாடு கூட நின்றுவிடுகிறது. வெளியில் விளையாட செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். சில குழந்தைகளின் மன வளர்ச்சியும் மிகவும் பாதிக்கப்படுகிறது. இந்த சூழலில், குழந்தைகளை மொபைலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என மருத்துவர்களும், உளவியல் நிபுணர்களும் தெளிவாகச் சொல்கிறார்கள். மொபைல் குழந்தைகளின் வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மொபைல் போனின் கதிர்வீச்சு குழந்தைகள் மீது பாதிப்பு உண்டாக்கும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்
* தூக்கமின்மை, தூக்கத்தில் இடையூறு
* கவனச்சிதறல்
* நினைவாற்றல் குறைதல்
* உடல் பருமன், பிற நோய்கள் ( உடல் செயல்பாடு குறைவதால்)
* படிப்பில் மந்தம்
* வயதுக்கு மீறிய விஷயங்கள் அறிதல் (Inappropriate Media)
* மூளையில் செயல்திறன் பாதிப்பு (Affects Brain Activity)
* மூளையில் கட்டி (tumours)
* கண்கள் பாதிப்பு
எப்படி சரி செய்ய வேண்டும்?
குழந்தைகளின் அழுகையை நிறுத்த, நேரப்போக்கிற்கு (Time pass), அவர்களுடன் நேரம் செலவிட முடியாத சமயம், குழந்தைகளின் நச்சரிப்பை தவிர்க்க என பெற்றோர் குழந்தைகளுக்கு, ஸ்மார்ட் போன் கொடுத்து பழக்குகின்றனர். இந்த தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்ற கதையாக, குழந்தைகள் மொபைலை நாள் முழுக்க வைத்திருக்க பழகிவிடுகிறார்கள். உடல் உழைப்பை கோரும் விளையாட்டு, உணவு மீது கூட அவர்களுக்கு ஆர்வம் குறைகிறது. குழந்தைகளை மொபைல் போன் இல்லாமல் பழக்குவதற்கு சில டிப்ஸ் இங்கு காணலாம்.
பெற்றோர் கட்டுப்பாடு
குழந்தைகள் தங்களுடைய பெற்றோர் செய்வதை பார்த்து தான் பழகுகிறார்கள். ஆகவே பெற்றோரும் மொபைலை அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் முன்னிலையில் மொபைலை அதிகமாக பயன்படுத்தக்கூடாது.
இதையும் படிங்க: சனி பெயர்ச்சி.. இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகுது.. இவர்களின் காட்டில் பண மழை...!
திட்டக்கூடாது
மொபைல் போனை வைத்திருக்கும் குழந்தைகளை அதிகமாக திட்டி அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. திடீரென பெற்றோர் இப்படி கோவமாக நடந்து கொண்டால் குழந்தைகளிடையே எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். குழந்தைகளிடம் மொபைல் போன் குறித்து அன்பாக பேசி அதனுடைய தீமைகளை புரிய வைக்க வேண்டும். அதை மெல்ல அவர்கள் உணர்ந்து கொள்ளலாம்.
குழந்தைகளுடன் நேரம் செலவிடல்
படுக்கை நேரத்தில் மொபல் போன், மடிக்கணினிகளை உபயோகிக்க விடக் கூடாது. அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்களின் திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்தினால் மொபைல் போன் இரண்டாம்பட்சம் ஆகிவிடும். வரைதல், பாடுதல், நடனம் மாதிரியான திறமைகளை ஊக்குவியுங்கள். வெளியில் ஓடியாடி விளையாட செல்ல அனுமதியுங்கள். அவர்களுடன் இணைந்து நீங்களும் இணைந்து விளையாடுங்கள்.
இதையும் படிங்க: Throat Pain: தொண்டை வலி.. விழுங்குவதில் சிரமமா? நிவாரணம் கிடைக்க இந்த 6 உணவுகளை செய்து சாப்பிடுங்க..!