MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Donne Biryani: கர்நாடகா ஸ்பெஷல் 'தொன்னே பிரியாணி'.! ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்வது எப்படி?

Donne Biryani: கர்நாடகா ஸ்பெஷல் 'தொன்னே பிரியாணி'.! ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்வது எப்படி?

How to Make Donne Biryani at Home: வழக்கமா செய்யுற மசாலா பிரியாணி சாப்பிட்டு போர் அடிச்சுடுச்சா? அப்போ கர்நாடகாவின் ஃபேமஸ் தொன்னே பிரியாணியை ட்ரை பண்ணுங்க.இந்த பிரியாணியை செய்வது ரொம்ப ஈஸி. ஹோட்டல் சுவையில வீட்டிலேயே எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

3 Min read
Author : Ramprasath S
Published : Jul 22 2026, 03:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
How to Make Donne Biryani at Home
Image Credit : vagmi foods youtube

How to Make Donne Biryani at Home

வழக்கமா ஒரே மாதிரி ரெட் மசாலா பிரியாணி சாப்பிட்டு உங்களுக்கு போர் அடிச்சுடுச்சா? அப்போ இந்த முறை, கர்நாடகாவின் ரொம்பவே பிரபலமான 'தொன்னே பிரியாணி' அல்லது 'கிரீன் சிக்கன் பிரியாணி'யை வீட்ல செஞ்சு பாருங்க. பார்க்குறதுக்கு பச்சை நிறத்துல வித்தியாசமா இருக்குன்னு நினைக்காதீங்க, சாப்பிடுறதுக்கும் இது ரொம்பவே சுவையா இருக்கும். கர்நாடகா முழுக்க இந்த பிரியாணி ரொம்ப ஃபேமஸ். இதுல இன்னொரு ஸ்பெஷல் என்னன்னா, சமைக்கவே தெரியாத பேச்சிலர்ஸ்கூட இதை ஈஸியா செஞ்சிடலாம். சரி, வாங்க... 'தொன்னே பிரியாணி' செய்யத் தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை ஸ்டெப்-பை-ஸ்டெப்பா பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் -  கோயில் ஸ்டைல் சர்க்கரைப் பொங்கல்.! அதே சுவையுடன் வீட்டிலேயே செய்வது எப்படி?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தொன்னே பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்
Image Credit : stockPhoto

தொன்னே பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்

  • சிக்கன் (எலும்புடன் அல்லது எலும்பில்லாதது): 1 கிலோ
  • தயிர்: 1/4 கப்
  • மஞ்சள் தூள்: 1/2 டீஸ்பூன்
  • உப்பு: 1 டீஸ்பூன் (ஊறவைக்க)
  • புதினா இலைகள்: 1/4 கப்
  • கொத்தமல்லி தழை: 1/4 கப்
  • கறிவேப்பிலை: 2 கொத்து
  • பச்சை மிளகாய்: 6
  • இஞ்சி: 1 இன்ச் துண்டு
  • பூண்டு: 5 பல்
  • கசூரி மேத்தி: 1 டீஸ்பூன்
  • ஜீரக சம்பா அரிசி: 2 கப்
  • நெய்: 3 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய்: 3 டேபிள் ஸ்பூன்
  • நறுக்கிய வெங்காயம்: 1/2 கப்
  • பிரியாணி மசாலா தூள்: 1 டேபிள் ஸ்பூன்
  • கறி மசாலா தூள்: 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகுத் தூள்: 1/4 டேபிள் ஸ்பூன்
  • தனியா தூள்: 1.5 டேபிள் ஸ்பூன்
  • சூடான நீர்: 4 கப்
  • எலுமிச்சை சாறு: பாதி மூடி
     

தாளிக்க வேண்டிய மசாலாப் பொருட்கள்: 

  • பிரியாணி இலை - 1,
  • சோம்பு - 1/2 டீஸ்பூன்,
  • அன்னாசிப் பூ - 1,
  • கிராம்பு - 2,
  • ஏலக்காய் - 2,
  • பட்டை - 2 துண்டு

இதையும் படியுங்கள் - மட்டன் பஞ்சு மாதிரி வேகணுமா? இந்த ஒரு ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஹோட்டல் டேஸ்ட்ல வரும்.!

Related Articles

Related image1
RO Water Purifier: ஃபில்டர் தண்ணி குடிச்சா கிட்னி பாதிக்குமா? டாக்டர்ஸ் சொல்றது என்ன?
Related image2
யானைகள் பழி வாங்குமா? 14 ஆண்டுகளுக்குப் பிறகு தேடி வந்த யானை.! ஒரே குடும்பத்தில் பறிபோன 4 உயிர்.!
35
தொன்னே பிரியாணி செய்முறை
Image Credit : Chatgpt

தொன்னே பிரியாணி செய்முறை

  • முதலில், ஜீரக சம்பா அரிசியை நன்றாகக் கழுவி, குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கன் துண்டுகளைப் போட்டு, அதனுடன் தயிர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து ஊற வைக்கவும்.
  • இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் கசூரி மேத்தி சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு நைசான பச்சை பேஸ்ட்டாக (Green Paste) அரைத்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், பிரியாணி இலை, சோம்பு, ஏலக்காய் உள்ளிட்ட அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.

இதையும் படியுங்கள் -  அலுமினியம் குக்கர் vs ஸ்டீல் குக்கர்.! சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது பெஸ்ட்?

45
பச்சை பேஸ்ட் முக்கியம்
Image Credit : Zomato

பச்சை பேஸ்ட் முக்கியம்

  • பிறகு, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அது மென்மையாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், அரைத்து வைத்த பச்சை பேஸ்ட்டைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை 3-4 நிமிடங்கள் வதக்கவும்.
  • அதன் பிறகு, பிரியாணி மசாலா, கறி மசாலா தூள் (curry masala powder), மிளகுத் தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  • இப்போது, ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து, மசாலா சிக்கனில் நன்றாகப் பிடிக்கும்படி கிளறவும். குக்கர் மூடியை லேசாக மேலே வைத்து, மிதமான தீயில் 10 நிமிடங்கள் வேகவிடவும். இடையில் அவ்வப்போது கிளறிவிடவும் (இந்த சமயத்தில் தண்ணீர் சேர்க்க வேண்டாம்).

இதையும் படியுங்கள் -  Water Bottle: வாட்டர் பாட்டிலில் இந்த கோடுகள் ஏன் இருக்கு? இது வெறும் டிசைன் இல்ல, செம இன்ஜினியரிங் ட்ரிக்!

55
தொன்னே பிரியாணி செய்ய சரியான தண்ணீர் அளவு
Image Credit : Swiggy

தொன்னே பிரியாணி செய்ய சரியான தண்ணீர் அளவு

  • சிக்கன் ஓரளவுக்கு வெந்ததும், ஊறவைத்த அரிசியை (தண்ணீரை வடித்துவிட்டு) சேர்க்கவும். பிறகு, ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் என்ற விகிதத்தில் 4 கப் சுடுதண்ணீர் ஊற்றிக் கிளறவும்.
  • தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, தண்ணீர் கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும்போது, குக்கர் மூடியைப் போட்டு 2 விசில் விடவும். பிறகு, தீயை குறைத்து, சுமார் 20 நிமிடங்கள் தம் (Dum) போடவும்.
  • குக்கரில் பிரஷர் இறங்கியதும் மூடியைத் திறந்தால், கமகமக்கும் கர்நாடகா ஸ்டைல் தொன்னே பிரியாணி தயார்.
  • இதை குளிர்ச்சியான வெங்காய ரைத்தா மற்றும் வேகவைத்த முட்டையுடன் சூடாகப் பரிமாறவும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
உணவு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Fan : சீலிங் ஃபேனில் ஜம்முனு காத்து வர எவ்வளவு உயரத்துல மாட்டணும்னு தெரியுமா? 90% பேருக்கு தெரியாத ரகசியம்
Recommended image2
Mango Benefits: தினமும் மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 முக்கிய நன்மைகள்
Recommended image3
Kitchen Sink: அடைத்த கிச்சன் சிங்கை சரி செய்ய பிளம்பரை கூப்பிடாதீங்க!
Related Stories
Recommended image1
RO Water Purifier: ஃபில்டர் தண்ணி குடிச்சா கிட்னி பாதிக்குமா? டாக்டர்ஸ் சொல்றது என்ன?
Recommended image2
யானைகள் பழி வாங்குமா? 14 ஆண்டுகளுக்குப் பிறகு தேடி வந்த யானை.! ஒரே குடும்பத்தில் பறிபோன 4 உயிர்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved