MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Kitchen Tips: வெண்டைக்காய் சீக்கிரம் வாடிப்போகுதா? நீண்ட நாள் ப்ரெஷ்ஷாக வைக்க சூப்பர் டிப்ஸ்!

Kitchen Tips: வெண்டைக்காய் சீக்கிரம் வாடிப்போகுதா? நீண்ட நாள் ப்ரெஷ்ஷாக வைக்க சூப்பர் டிப்ஸ்!

Kitchen Tips: உங்கள் வீட்டில் வெண்டைக்காய் சீக்கிரம் வாடிப்போய் விடுகிறதா? வெண்டைக்காய் வாடாமல் நீண்ட நாள் பிரெஷ்ஷாக வைத்திருப்பது எப்படி? என்பது குறித்து எளிய டிப்ஸ் இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 26 2026, 03:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வெண்டைக்காய் நீண்ட நாள் ப்ரெஷ்ஷாக வைத்திருக்க டிப்ஸ்
Image Credit : AI

வெண்டைக்காய் நீண்ட நாள் ப்ரெஷ்ஷாக வைத்திருக்க டிப்ஸ்

மழைக்காலத்துல வாரக்கணக்குல காய்கறிகளை மொத்தமா வாங்கி வெச்சுக்கிறது நம்ம பழக்கம். ஆனா, சரியா ஸ்டோர் பண்ணலைன்னா சில காய்கறிகள் சீக்கிரம் வீணாகிடும். அதுல வெண்டைக்காயும் ஒண்ணு. சரியா பாதுகாக்கலைன்னா, அது காய்ஞ்சுடும் அல்லது கொழகொழப்பு அதிகமாகி அழுக ஆரம்பிச்சுடும். வெண்டைக்காய் நீண்ட நாள் ஃப்ரெஷ்ஷா இருக்க சில ஈஸி டிப்ஸை ஃபாலோ பண்ணா போதும்.

வெண்டைக்காயில் ஏகப்பட்ட சத்துக்கள் இருக்கு. இதுல கலோரிகள் குறைவு, ஆனா நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம். வைட்டமின் சி, வைட்டமின் கே, ஃபோலேட் இதுல நிறைய இருக்கு. பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற அத்தியாவசிய சத்துக்களும் இதில் உள்ளன. வெண்டைக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் செரிமானத்தை மேம்படுத்தி, உடல்நலப் பிரச்சினைகளைக் குறைக்க உதவுது.

இதையும் படிங்க: Hotel Bathrooms: ஹோட்டல் பாத்ரூம்ல எதுக்கு 2 வாஷ்பேசின்? இதுக்கு பின்னாடி இருக்கும் மாஸ்டர் பிளான்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சரியான வெண்டைக்காயை வாங்குவது முக்கியம்
Image Credit : our own

சரியான வெண்டைக்காயை வாங்குவது முக்கியம்

சரியான வெண்டைக்காயை வாங்குவது முதல் படி. எப்போதுமே பிஞ்சு வெண்டைக்காயா பார்த்து வாங்குங்க. அதோட நுனியை உடைச்சா, சுலபமா உடையணும். முத்தின வெண்டைக்காய் சீக்கிரம் கெட்டுப்போயிடும். வெண்டைக்காயை ஈரப்பதத்திலிருந்து தள்ளி வைங்க. மார்க்கெட்டிலிருந்து வாங்கிட்டு வந்ததும், கொஞ்ச நேரம் காய வைங்க. பிறகு, ஒரு காய்ந்த துணியில சுத்தி, காத்து புகாத டப்பாவுல போட்டு வைங்க. இதனால ஈரம் உள்ளே போகாம, வெண்டைக்காய் வீணாகாது.

வெண்டைக்காயை ஃபிரிட்ஜில் வைப்பதா இருந்தா, ஒரு பாலிதீன் பை அல்லது காய்கறிப் பையில் போடுங்க. காத்தோட்டத்துக்காக பையில ஒண்ணு ரெண்டு சின்ன ஓட்டை போடுங்க. ஃபிரிட்ஜின் காய்கறி ட்ரேயில் வைப்பதற்கு முன்னாடி, அடியில் நியூஸ்பேப்பர் அல்லது டிஷ்யூ பேப்பரை விரிச்சு வைங்க. இது அதிகப்படியான ஈரத்தை உறிஞ்சிடும். ஈரமான காய்கறிகளோட சேர்த்து வெண்டைக்காயை வைக்காதீங்க. ஈரம் பட்டா சீக்கிரம் அழுகிடும். வாங்குன காய்கறிகளை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயன்படுத்துவது நல்லது.

இதையும் படிங்க: Chips Packet: பாதி சிப்ஸ்... பாதி காற்று.. கம்பெனிகள் நம்மை ஏமாற்றுகின்றனவா? பின்னாடி சயின்ஸ் இருக்கு!

Related Articles

Related image1
Ladies Finger in Winter : குளிர்காலத்துல வெண்டைக்காய் 'கண்டிப்பா' சாப்பிடனும் தெரியுமா? நிபுணர்கள் சொல்ற அறிவியல் உண்மை
Related image2
UK Cost of Living: ஒரு கிலோ வெண்டைக்காய் ₹1000-ஆ? UK-வில் காய்கறி விலையை கேட்டா மயக்கமே வந்திடும்!
34
கழுவிய பின் நறுக்காதீர்கள்
Image Credit : our own

கழுவிய பின் நறுக்காதீர்கள்

வெண்டைக்காயைக் கழுவிய உடனேயே நறுக்கினால் கொழகொழப்பு அதிகமாகும். கழுவிய பிறகு, ஒரு சுத்தமான துணியால் துடைத்து அல்லது முழுமையாகக் காய்ந்த பிறகே நறுக்க வேண்டும்.

அளவோடு நறுக்குங்கள்: மிகவும் பொடியாக நறுக்குவதைத் தவிர்த்து, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கினால் கொழகொழப்பு வெளிப்படுவது குறையும்.

புளிப்புச் சுவை சேர்த்தல்: வெண்டைக்காய் வதக்கும் போது சிறிதளவு தயிர், எலுமிச்சை சாறு, புளி அல்லது தக்காளி சேர்த்தால், கொழகொழப்புத் தன்மை உடனே மறைந்துவிடும்.

44
திறந்து வைத்து வதக்குங்கள்
Image Credit : others

திறந்து வைத்து வதக்குங்கள்

வெண்டைக்காயைச் சமைக்கும் போது ஆரம்பத்திலேயே மூடி போட்டு சமைக்கக் கூடாது. மூடியில் உருவாகும் நீராவி நீர் காயில் விழுந்து கொழகொழப்பை அதிகமாக்கும்.

உப்பை கடைசியில் சேர்க்கவும்: சமைக்கத் தொடங்கிய உடனேயே உப்பு போட்டால் காயிலிருந்து நீர் வெளிப்பட்டு கொழகொழப்பாகிவிடும். காய் முக்கால் பாகம் வெந்த பிறகே உப்பு சேர்க்க வேண்டும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
சமையலறை குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vande Bharat: ஒரு வந்தே பாரத் ரயில் செய்ய எத்தனை கோடி செலவாகும் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!
Recommended image2
Shower Tips: பச்சைத் தண்ணி குளியலா, வெந்நீர் குளியலா? எது பெஸ்ட்? சயின்ஸ் என்ன சொல்லுது?
Recommended image3
Gas Cylinder : கேஸ் சிலிண்டர் தீரப்போகிறதா? இந்த அறிகுறிகளை வைத்து முன்கூட்டியே கண்டுபிடிக்கலாம்!
Related Stories
Recommended image1
Ladies Finger in Winter : குளிர்காலத்துல வெண்டைக்காய் 'கண்டிப்பா' சாப்பிடனும் தெரியுமா? நிபுணர்கள் சொல்ற அறிவியல் உண்மை
Recommended image2
UK Cost of Living: ஒரு கிலோ வெண்டைக்காய் ₹1000-ஆ? UK-வில் காய்கறி விலையை கேட்டா மயக்கமே வந்திடும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved