MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Chips Packet: பாதி சிப்ஸ்... பாதி காற்று.. கம்பெனிகள் நம்மை ஏமாற்றுகின்றனவா? பின்னாடி சயின்ஸ் இருக்கு!

Chips Packet: பாதி சிப்ஸ்... பாதி காற்று.. கம்பெனிகள் நம்மை ஏமாற்றுகின்றனவா? பின்னாடி சயின்ஸ் இருக்கு!

Chips Packet: சிப்ஸ் பாக்கெட்டில் பாதி சிப்ஸ் மீதி காற்று தான் இருக்கு. கம்பெனி தான் நம்மை ஏமாற்றுகிறது என நினைக்கிறோம். ஆனால் இதற்கு பின்னாடி சயின்ஸ் ஒன்று உள்ளது. அது குறித்து பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 25 2026, 08:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சிப்ஸ் பாக்கெட்டில் காற்று மட்டும் இருப்பது ஏன்?
Image Credit : chat gpt

சிப்ஸ் பாக்கெட்டில் காற்று மட்டும் இருப்பது ஏன்?

சின்னவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிப்ஸ் என்றால் பிடிக்கும். மார்க்கெட்டில் விதவிதமான கம்பெனி சிப்ஸ் பாக்கெட்கள் கிடைக்கின்றன. ஆனால், பாக்கெட்டைப் பிரித்தால் பாதி காற்று, பாதி சிப்ஸாக இருக்கும்போது கோபம் வரும். இது நம்மை ஏமாற்றுவதற்கான மார்க்கெட்டிங் தந்திரம் என நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல.

பாக்கெட் உப்பலாகத் தெரிய வேண்டும் என்பதற்காக சாதாரணக் காற்றை நிரப்புகிறார்கள் என நாம் நினைக்கிறோம். ஆனால், அதில் இருப்பது நைட்ரஜன் வாயு. சிப்ஸை பேக் செய்வதற்கு முன்பு, இந்த நைட்ரஜனைத்தான் உள்ளே நிரப்புகிறார்கள். நைட்ரஜனுக்கு நிறமோ, வாசனையோ கிடையாது. நாம் சுவாசிக்கும் காற்றில் கூட 78% நைட்ரஜன்தான் இருக்கிறது. இந்த வாயு உணவுப் பொருளுடன் எந்த வேதிவினையும் புரியாது. அதனால், சிப்ஸ் கெட்டுப் போகாது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சிப்ஸ் பாக்கெட்டில் நைட்ரஜன் வாயு
Image Credit : pinterest

சிப்ஸ் பாக்கெட்டில் நைட்ரஜன் வாயு

நாம் விரும்பி சாப்பிடும் சிப்ஸை எண்ணெயில் பொரித்துதான் தயாரிக்கிறார்கள். இதில் ஆக்சிஜன் பட்டால், சிப்ஸ் சீக்கிரமே கெட்டுப்போய், ஒருவித வாசனை வரும். அதன் மொறுமொறுப்பும் போய்விடும். இதைத் தடுக்கத்தான் ஆக்சிஜனுக்குப் பதிலாக நைட்ரஜனை நிரப்புகிறார்கள். இதனால்தான், சிப்ஸ் எப்போதுமே ஃபிரெஷ்ஷாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கிறது. அதுமட்டுமல்ல, சிப்ஸ் மிகவும் மெல்லிசாக இருப்பதால், லேசாகத் தொட்டாலே உடைந்துவிடும். ஃபேக்டரியில் இருந்து கடைகளுக்கு வரும் வழியில் பாக்கெட் மீது அழுத்தம் ஏற்பட்டால், சிப்ஸ் நொறுங்கிவிடும்.

Related Articles

Related image1
குழந்தைகளின் மூளைக்கு எமனாகும் சிப்ஸ், குளிர்பானங்கள்.. மருத்துவர்கள் வார்னிங்.. மாற்று உணவுகள் லிஸ்ட்!
Related image2
Business: வீட்டில் இருந்தே தினமும் 3 ஆயிரம் சம்பாதிக்கலாம்.! சிப்ஸ் தயாரித்தால் இவ்ளோ லாபம் கிடைக்குமா?!
34
சிப்ஸ் கம்பெனிகள் நம்மை ஏமாற்றுகின்றனவா?
Image Credit : Getty

சிப்ஸ் கம்பெனிகள் நம்மை ஏமாற்றுகின்றனவா?

இந்த நைட்ரஜன் காற்று, ஒரு குஷன் போல இருந்து சிப்ஸை உடையாமல் பாதுகாக்கிறது. அப்படியானால் சின்ன பாக்கெட்டில் விற்கலாமே என உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். ஆனால், சிப்ஸ் எல்லாம் ஒரே அளவில் இருக்காது. அதன் வடிவம், தடிமனுக்கு ஏற்ப இடம் தேவைப்படும். அதனால்தான் பாக்கெட் பெரிதாக இருக்கிறது. அப்படியென்றால் கம்பெனிகள் நம்மை ஏமாற்றுகின்றனவா? நிச்சயமாக இல்லை.

ஏனென்றால், ஒவ்வொரு பாக்கெட்டிலும் சிப்ஸின் எடை எவ்வளவு என்று தெளிவாக எழுதியிருப்பார்கள். நாம் வாங்கும் போது அதைச் சரிபார்த்துக் கொள்ளலாம். மொத்தத்தில், சிப்ஸ் பாக்கெட்டில் இருக்கும் காற்று நம்மை ஏமாற்றுவதற்கு அல்ல. சிப்ஸை ஃபிரெஷ்ஷாகவும், உடையாமலும் நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்காகத்தான்.

44
'நைட்ரஜன் ஃபிளஷிங்'என்றால் என்ன?
Image Credit : Getty

'நைட்ரஜன் ஃபிளஷிங்'என்றால் என்ன?

சிப்ஸ் பாக்கெட்டில் நைட்ரஜன் வாயுவை நிரப்பும் இந்தத் தொழில்நுட்ப முறைக்கு 'நைட்ரஜன் ஃபிளஷிங்' என்று பெயர். உருளைக்கிழங்கை எண்ணெயில் வறுத்துப் பேக் செய்யும்போது, அந்தப் பையில் இருக்கும் ஆக்ஸிஜனை முழுமையாக வெளியேற்றிவிட்டு, அதற்குப் பதிலாக அதிக அழுத்தத்தில் நைட்ரஜன் வாயுவை உள்ளே செலுத்துவார்கள்.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் ஆக்ஸிஜனுடன் தொடர்புகொள்ளும்போது, அதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் ஆக்ஸிஜனேற்றம் அடையும். இதனால் உணவின் சுவை மாறி, ஒருவித துர்நாற்றம் வீசத் தொடங்கும். வேதியியலில் இதை 'ரான்சிடிட்டி' என்பார்கள். நைட்ரஜன் வாயு இதை முற்றிலும் தடுக்கிறது.

பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சி தடுப்பு

ஆக்ஸிஜன் மற்றும் ஈரப்பதம் இருக்கும் இடத்தில்தான் பூஞ்சைகளும் (Fungus) பாக்டீரியாக்களும் வேகமாக வளரும். நைட்ரஜன் வாயு பாக்கெட்டுக்குள் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி, பாக்டீரியாக்கள் வளர முடியாத ஒரு உறைவிடத்தை உருவாக்குகிறது. இதனால் ரசாயனப் பொருட்கள் (Preservatives) எதுவும் சேர்க்காமலேயே சிப்ஸ் பல மாதங்களுக்குக் கெட்டுப்போகாமல் இருக்கும்.

பாக்கெட்டின் ஆயுட்காலம் கூடுகிறது

மேலும் நைட்ரஜன் வாயுவை நிரப்புவதால், கடைகளின் அலமாரிகளிலும் கிடங்குகளிலும் சிப்ஸ் பாக்கெட்டுகளை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் வைத்திருக்க முடிகிறது. இது சில்லறை வியாபாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் பெருமளவில் நஷ்டத்தைக் குறைக்கிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Wooden Spoons Cleaning: மரக்கரண்டி எண்ணெய் பிசுக்கு, வாடையை விரட்ட இந்த 1 மேஜிக் பொருள் போதும்!
Recommended image2
Mental Health: ராத்திரி ஆனா மட்டும் ஏன் மனசு பாரமா இருக்கு? சைக்காலஜி சொல்லும் காரணங்கள்.!
Recommended image3
Bracelet Watch: பார்த்தாலே பிடிக்கும் பிரேஸ்லெட் வாட்ச் டிசைன்ஸ்!
Related Stories
Recommended image1
குழந்தைகளின் மூளைக்கு எமனாகும் சிப்ஸ், குளிர்பானங்கள்.. மருத்துவர்கள் வார்னிங்.. மாற்று உணவுகள் லிஸ்ட்!
Recommended image2
Business: வீட்டில் இருந்தே தினமும் 3 ஆயிரம் சம்பாதிக்கலாம்.! சிப்ஸ் தயாரித்தால் இவ்ளோ லாபம் கிடைக்குமா?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved