MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • நாக்கு வெள்ளையா மாறுதா? பூண்டு இப்படி பயன்படுத்துங்க.. எந்த நோயும் வராது..

நாக்கு வெள்ளையா மாறுதா? பூண்டு இப்படி பயன்படுத்துங்க.. எந்த நோயும் வராது..

நாக்கு வெண்மையாக இருந்தால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.  

2 Min read
Author : maria pani
Published : Feb 16 2023, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

எல்லோரும் முத்து போல வெண்மையான பற்களை விரும்புகிறார்கள். ஆனால் நாக்கை எப்போதும் வெண்மையாக வைத்திருக்க மறந்துவிடுகிறார்கள். ஆரோக்கியமான நாக்கு இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும். மேற்பரப்பில் கொஞ்சம் வெள்ளையாக இருந்தால் போதும். ஆனால் முழுவதும் வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக இருந்தால் ஆபத்து. 

26

வாய் சுகாதாரத்தை பேணாமல் விடுவது, புகைபிடித்தல், மரபியல் காரணம், காபி, டீ ஆகிய காபின் கலந்த பானங்களை அருந்துவது போன்ற காரணங்களால் நாக்கு வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக மாறும். நாவில் வெள்ளை பூச்சு உணவு துகள்கள், கிருமிகள், இறந்த செல்கள் காரணமாகவும் ஏற்படுகிறது. இதிலிருந்து விடுபட சில எளிய வழிகள் உள்ளன. 

36

அழுக்குபடிந்த நாக்கை சுத்தம் செய்ய நாக்கு வளிப்பானை (tongue cleaner) பயன்படுத்துவதாகும். இவை மெடிக்கல் ஷாப்களில், சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும். இவை உங்கள் நாக்கில் உள்ள பாக்டீரியா மற்றும் கழிவுகளை நீக்கும். 

46

தயிர் மாதிரியான புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகளை உண்பதும் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை நீக்கும். புரோபயாடிக்குகள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைக்கும் வல்லமை கொண்டவை. இது நாக்கில் வெள்ளை பூச்சு உருவாவதைத் தடுக்கும். 

 

56

பூண்டு சாறை நாக்கில் தடவி 5 நிமிடம் கழித்து வாய் கொப்பளிக்கலாம். நாவில் உள்ள பூஞ்சை தொற்று, கிருமிகள் நீங்கும்.  

ஒரு டம்பளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி உப்பை சேர்த்து கொள்ளுங்கள். இந்த நீரை சுமார் 30 வினாடிகள் முன்னும் பின்னுமாக வாய்க்குள் கொண்டு சென்று கொப்பளிக்கவும். உப்பு கிருமிகளுக்கு எதிராக செயல்படும் பண்புகளைக் கொண்டுள்ளது. வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிப்பதோடு, உங்கள் நாக்கில் வெள்ளை நிறத்தை மாற்றவும் உதவுகிறது.

66

ஆயில் புல்லிங் என்பது பழங்கால ஆயுர்வேத முறை. ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் விட்டு அதனை 15 முதல் 20 நிமிடங்கள் வரை வாயில் வைத்திருங்கள். அதை முன்னும் பின்னுமாக நகர்த்தவும். இதனால் வாயிலிருந்து பாக்டீரியா, கழிவுகள் நீங்கும். 

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு பாலில் மருந்து.. தண்ணீருக்கு பதில் பாலுடன் மருந்து உட்கொள்வது சரியா? அறிவியல் என்ன சொல்கிறது..

இதையும் படிங்க: மகா சிவராத்திரி 2023: அய்யன் சிவனின் அருளைப் பெற வாழ்வில் ஒருமுறையாவது இந்த விரதம் இருக்கணும்.. ஏன் தெரியுமா?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved