Tamil

எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை

கடைகளில் விற்கும் விலை உயர்ந்த ஹேர் ஆயிலை விட, உங்கள் சமையலறையில் இருக்கும் எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை முடிக்கு அதிக நன்மை தரும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Tamil

பொடுகு தொல்லைக்கு தீர்வு

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், பொடுகை உண்டாக்கும் பூஞ்சைகளை அழிக்கிறது. தேங்காய் எண்ணெய் தலையின் ஸ்கால்ப் (Scalp) வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் பார்த்துக்கொள்கிறது.

Image credits: Getty
Tamil

முடியின் வேர்களை வலுப்படுத்தும்

தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம், முடியில் இருக்கும் புரதச்சத்தை பாதுகாக்கிறது. இது முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வதைத் தடுக்கிறது.

Image credits: Getty
Tamil

தலையில் ஏற்படும் அரிப்பை குறைக்கிறது

எலுமிச்சை சாறு, தலையின் ஸ்கால்ப்பில் உள்ள pH அளவை சீராகப் பராமரிக்கிறது. இது அதிகப்படியான எண்ணெய் பிசுக்கை நீக்கி, தலையில் ஏற்படும் அரிப்பைக் குறைக்கிறது.

Image credits: adobe stock
Tamil

மென்மையான பளபளப்பான முடி

தேங்காய் எண்ணெய் முடிக்குத் தேவையான ஈரப்பதத்தை (Moisture) அளிக்கிறது. அதே சமயம், எலுமிச்சை தலையில் உள்ள அழுக்குகளைச் சுத்தம் செய்கிறது. இதனால், முடி பட்டுப் போல பளபளப்பாக மாறும்.

Image credits: Freepik
Tamil

அடர்த்தியான முடி வளர்ச்சி

இந்த கலவையைக் கொண்டு மசாஜ் செய்யும்போது, ரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்க்கால்கள் (Follicles) சுறுசுறுப்பாகின்றன. இதனால் முடி வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

Image credits: Freepik
Tamil

பயன்படுத்துவது எப்படி?

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைக் கலக்கவும். இதைத் தலையில் தடவி 30 நிமிடம் ஊறவைத்து, பிறகு மைல்டான ஷாம்பூ கொண்டு கழுவவும்.

Image credits: Getty

ரூ.200-க்குள் கிடைக்கும் புடவை மேட்சிங் கம்மல்கள்.. மிஸ் பண்ணாதீங்க

Gold Rings: 1 கிராமில் அசத்தலான மோதிரம் டிசைன்கள்.!

Silver Anklet Designs: கால்களுக்கு புது பொலிவு தரும் கொலுசு டிசைன்ஸ்.!

Weight Loss: உடல் எடையை குறைக்க இந்த தண்ணீரை மட்டும் குடிச்சா போதும்