- Home
- Lifestyle
- Mushy Rice: குக்கரில் சாதம் குழைந்துவிட்டதா? பிரெட் துண்டு போதும்.. உதிரி உதிரியாக மாற்றலாம்!
Mushy Rice: குக்கரில் சாதம் குழைந்துவிட்டதா? பிரெட் துண்டு போதும்.. உதிரி உதிரியாக மாற்றலாம்!
Mushy Rice: குக்கரில் சில சமயம் சாதம் குழைந்துவிடுவது வழக்கம். இந்த பிரச்சனைக்கு இனி டென்ஷன் ஆக வேண்டாம். சாதத்தின் மேல் ஓரிரு பிரெட் துண்டுகளை வைத்தால் போதும். அது சாதத்தை உதிரி உதிரியாக மாற்றிவிடும். இது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

Mushy Rice - குக்கரில் சாதம் குழைந்துவிட்டதா?
சமையல் செய்யும்போது சில டிப்ஸ் தெரிஞ்சு வெச்சிருந்தா, நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எவ்வளவு பெரிய சமையல் திறமைசாலியாக இருந்தாலும், சின்ன சின்ன தவறுகளால் சொதப்ப வாய்ப்பிருக்கு.
அந்த வகையில் சாதம் வடிப்பது சுலபம்னு நினைச்சாலும், ஒவ்வொரு முறையும் அரிசியின் தரம் மாறுபடும். இதனால தண்ணீர் அளவு அதிகமாகவோ, குறைவாகவோ ஆகிவிடும். சில அரிசிக்கு அதிக தண்ணீர் தேவைப்படும், சிலவற்றுக்கு குறைவாகப் போதும். இதனால, ஒரே அளவு தண்ணீர் வெச்சாலும் சில சமயம் சாதம் குழைந்துவிடும்.
இதையும் படிங்க:Expiry Date : இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் பிரஷர் குக்கரை உடனே மாற்றுங்கள்!
இந்த டிப்ஸ் உங்களுக்கு கைகொடுக்கும்
குக்கரில் சாதம் வைக்கும்போதும் சில சமயம் குழைந்துவிடும். ஆனால், பாத்திரத்தில் வடிக்கும்போது இந்த பிரச்சனை அதிகமாக வரும். குக்கரிலோ, பாத்திரத்திலோ, சாதம் குழைந்துவிட்டால் இனிமேல் தலையில் கை வைக்கத் தேவையில்லை. குறிப்பாக, கலவை சாதம் செய்யும்போது சாதம் உதிரி உதிரியாக இருக்க வேண்டும். அதற்காக தண்ணீர் குறைவாக வைத்தாலும், சில அரிசியின் தன்மையால் சாதம் குழைந்துவிடும். அந்த மாதிரி நேரத்திலும் இந்த டிப்ஸ் கை கொடுக்கும்.
இதையும் படிங்க:Ceiling Fan Tips: ஃபேன் காற்று கம்மியா இருக்கா? ஜெட் வேகத்தில் சுற்ற வைக்கும் 5 சிம்பிள் டிப்ஸ்!
பிரெட்டின் மேஜிக்
நீங்க செய்ய வேண்டியது இதுதான். சாதம் ரொம்ப குழைந்துவிட்டால், அதன் மேல் இரண்டு பிரெட் துண்டுகளை வைத்து சிறிது நேரம் மூடி விடுங்கள். பிரெட், சாதத்தில் உள்ள அதிகப்படியான நீரை உறிஞ்சி, சாதத்தை உதிரி உதிரியாக மாற்றிவிடும்.
எலுமிச்சை ட்ரிக்கும் இருக்கு
சாதம் சமைக்கும்போதே சில துளிகள் எலுமிச்சை சாறு விட்டால், சாதம் உதிரியாக வரும். இந்த டிப்ஸும் ரொம்ப நல்லது. ஒருவேளை அப்படி செய்ய மறந்து, சாதம் குழைந்துவிட்டால், பிரெட் டிப்ஸ் நிச்சயம் வொர்க் அவுட் ஆகும்.
இதையும் படிங்க:Washing Machine: பால்கனியில் வாஷிங் மெஷின் இருக்கா? தப்பான திசை பண நஷ்டத்தை தருமாம்.. இதை படிங்க!
பிரிட்ஜ் ட்ரிக் (உடனடி குளிர்ச்சி)
சாதம் குழைந்துவிட்டது என்று தெரிந்ததும், உடனடியாக அதை ஒரு அகலமான தட்டில் பரப்பி, ஃபேன் காற்றில் ஆறவையுங்கள். அதன் பிறகும் ஈரப்பதம் இருந்தால், 10-15 நிமிடங்கள் பிரிட்ஜில் (Fridge) வையுங்கள். குளிர்ச்சியால் சாதத்தின் ஸ்டார்ச் (Starch) இறுகி, சாதம் தனித்தனியாக உதிரி ஆகிவிடும்.
நெய் அல்லது எண்ணெய் மேஜிக்: சாதம் வெந்து கொண்டிருக்கும்போதோ அல்லது வடித்த உடனேயோ ஒரு ஸ்பூன் நெய் அல்லது சமையல் எண்ணெய் சேர்த்து லேசாகக் கிளறிவிட்டால், சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரியாக இருக்கும்.
அரிசி அலசும் முறையும் முக்கியம்
சமைப்பதற்கு முன் அரிசியை 2-3 முறை நன்றாகக் கழுவ வேண்டும். அரிசியில் உள்ள அதிகப்படியான ஸ்டார்ச் (கஞ்சித் தன்மை) நீங்கினால் மட்டுமே சாதம் குழையாமல் வரும்.
ஒருவேளை சாதம் மிக அதிகமாகக் குழைந்துவிட்டால், அதை வற்புறுத்தி உதிரியாக்க முயலாமல், தக்காளி சாதம், லெமன் சாதம் போன்ற கலவை சாதங்களுக்குப் பயன்படுத்தாமல்... சுவையான தயிர் சாதம், அரிசி பாயசம் அல்லது கீர் செய்யப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

