- Home
- Lifestyle
- Jeera Benefits : சீரகத்துடன் இந்த 1 பொருளையும் எடுத்துக்கோங்க; உடல்ல பல பிரச்சினைகள் தீரும்!
Jeera Benefits : சீரகத்துடன் இந்த 1 பொருளையும் எடுத்துக்கோங்க; உடல்ல பல பிரச்சினைகள் தீரும்!
சீரகத்தை சில மசாலா பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன உடல்நல பிரச்சனைகள் தீரும்? அதை எப்படி சாப்பிட வேண்டும்? என்று இங்கு பார்க்கலாம்.

Jeera Benefits
சீரகம் சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மசாலா பொருள். ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட இந்த மசாலா பொருளானது செரிமான கோளாறு உள்ளிட்ட பல உடல்நல பிரச்சினைகளை சரி செய்ய உதவும். இத்தகைய சூழ்நிலையில், சீரகத்தை தனியாக எடுத்துக் கொள்வதற்கு பதிலாக, சில மசாலா பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் பல உடல்நல பிரச்சினைகள் தீரும் என்று சொல்லப்படுகின்றது. எனவே, இந்த பதிவில் சீரகத்துடன் என்னென்ன மசாலா பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.
சீரகம் மற்றும் வெந்தயம் :
இதற்கு ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும் அல்லது தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கவும். இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவானது கட்டுக்குள் இருக்கும். மேலும் இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும்.
சீரகம் மற்றும் சோம்பு :
சீரகம் மற்றும் சோம்பு இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளும்போது மிகப்பெரிய பலனை காண்பீர்கள். அதாவது உடலை குளிர்ச்சியாக்கவும், குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தவும் உதவி செய்யும். இதற்கு ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் பச்சையாக சாப்பிடலாம் அல்லது வறுத்து சாப்பிடவும். இல்லையெனில் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை அந்த நீரை வடிகட்டி குடிக்கவும்.
சீரகம் மற்றும் கொத்தமல்லி விதைகள்;
சீரகம் மற்றும் கொத்தமல்லி விதை கலந்த பானம் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக பெண்கள் இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் தைராய்டு, பிசிஓஎஸ் போன்ற பிரச்சனைகள் நீங்கும். மேலும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.
சீரகம் மற்றும் இலவங்கப்பட்டை:
இதற்கு இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீரகத்துடன் ஒரு துண்டு லவங்கப்பட்டை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து பிறகு காலையில் கொதிக்க வைத்து வடிக்கட்டி வெறும் வயிற்றில் அந்த நீரை குடிக்கவும். இந்த பானமானது உடலில் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும் மற்றும் கொழுப்பு சேருவதை தடுக்கும்.
சீரகம் மற்றும் ஓமம் :
சீரகம் மற்றும் ஓமம் இவை இரண்டிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் ஓமத்தை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும் அல்லது ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கவும். இந்த நீரானது வயிற்று உப்புசம், அசிடிட்டி மற்றும் அஜீரணக் கோளாறு சரியகும்.
இவை வேறும் தகவலுக்கு நோக்கங்களுக்காக மட்டுமே. எனவே மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.