- Home
- Lifestyle
- Gas Burner Cleaning: கேஸ் பர்னர் கறுப்பா இருக்கா? தீ சரியா எரியலையா? 5 சிம்பிள் டிப்ஸ் இதோ!
Gas Burner Cleaning: கேஸ் பர்னர் கறுப்பா இருக்கா? தீ சரியா எரியலையா? 5 சிம்பிள் டிப்ஸ் இதோ!
Gas Burner Cleaning: கேஸ் அடுப்பு பர்னர்கள் நாளடைவில் கறுத்து, அழுக்காகிவிடும். இதனால் தீயும் சரியாக எரியாது. பர்னர்களை எப்படி சுலபமாக சுத்தம் செய்து, பழையபடி பளபளக்க வைப்பது என இங்கு பார்க்கலாம்.

கேஸ் பர்னரை சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ் - Gas Burner Cleaning
சமைக்கும்போது காய்கறிகளையும் பாத்திரங்களையும் கழுவுவது போல, கேஸ் பர்னர்களையும் நாம அடிக்கடி சுத்தம் செய்யணும். இல்லைன்னா, அழுக்கு சேர்ந்துடும். இந்த அழுக்கை நீக்காம சமைக்கும்போது, சப்பாத்தி சுடுவது போல நேரடியாக தீயில் காட்டும் உணவுகளில் கிருமிகள் சேர வாய்ப்பிருக்கு. பர்னர்களை சுத்தம் செய்து, பழையபடி பளபளக்க வைக்க சில சூப்பர் டிப்ஸ் இருக்கு.
இதையும் படிங்க: Vastu Tips: வீட்டில் பணக்கஷ்டமா? பாத்ரூமில் இந்த 'ஒரு' பொருளை வைங்க பணம் கொட்டும்!
வினிகர் பயன்பாடு
பர்னர்களில் அதிகமா கிரீஸ் அல்லது எண்ணெய் பிசுக்கு சேர்ந்திருந்தா, வினிகர் பயன்படுத்தலாம். ஒரு கப் சுடுதண்ணீரில் அரை கப் வினிகரை கலந்து, அதில் பர்னர்களை சுமார் 30 நிமிஷம் ஊறவைங்க. பிறகு, பிரஷ் வைத்து தேய்த்து, ஒரு துணியால் துடைத்து எடுத்தால் போதும். பிடிவாதமான கறைகள், எண்ணெய் பிசுக்கு எல்லாம் சீக்கிரமா போயிடும்.
இதையும் படிங்க:Garden Tips: தினமும் தண்ணி ஊத்த நேரமில்லையா? செடிகள் வாடாமல் இருக்க 5 சூப்பர் டிப்ஸ்!
பாத்திரம் தேய்க்கும் சோப் பயன்பாடு
பர்னர்கள் ரொம்ப அழுக்காக இல்லைன்னா, வாரத்துக்கு ஒருமுறை பாத்திரம் தேய்க்கும் சோப்புடன் கொஞ்சம் உப்பு கலந்து சுத்தம் செய்யலாம். இது லேசான அழுக்குப் படலங்களை நீக்க உதவும். ஒரு ஸ்பான்ச் அல்லது பிரஷ்ஷால் தேய்த்தால் பளபளப்பாகிவிடும். மாசத்துக்கு ரெண்டு, மூணு முறை இப்படி சுத்தம் செஞ்சா, அதிக அழுக்கு சேர்வதை தடுக்கலாம்.
இதையும் படிங்க:Cooker Hacks: குக்கர் விசில் அடிக்கும்போது தண்ணீர் கொட்டுதா? இந்த சிம்பிள் ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை கொண்டு
கேஸ் பர்னர் தீயில் கருகி கறுத்துப்போயிருந்தா, வினிகர் அல்லது சோப்புக்கு பதிலாக பேக்கிங் சோடா, எலுமிச்சை பயன்படுத்துங்க. கறிகளை நீக்க பேக்கிங் சோடா ஒரு சிறந்த தேர்வு. ஒரு கிண்ணத்தில் ரெண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து, அதில் பாதி எலுமிச்சை சாற்றை பிழிந்து ஒரு பேஸ்ட் ஆக்குங்க. இதை பர்னரில் தடவி, சுமார் 20 நிமிஷம் அப்படியே விட்டுடுங்க. பிறகு, பழைய பிரஷ்ஷால் மெதுவாக தேய்த்தால், கருகிய பர்னர் மீண்டும் பளபளப்பதை நீங்களே பார்க்கலாம்.
இதையும் படிங்க:சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! ஐடி டூ EV.. இந்த 5 துறைகளில் 11.5% சம்பள உயர்வு.. முழு லிஸ்ட்!
ஈனோ பர்னர்களை பளபளக்க வைக்கும்
வீட்டில் சுத்தம் செய்ய வேறு பொருட்கள் எதுவும் இல்லைன்னா, சுடுதண்ணீர் மற்றும் ஈனோவை வைத்து முயற்சி செய்யலாம். கறிகளை நீக்க, ஒரு பாக்கெட் ஈனோவை சுடுதண்ணீரில் கலக்குங்க. இந்த கரைசலில் பர்னரை சுமார் 15-20 நிமிஷம் ஊறவைங்க. பிறகு, பிரஷ் வைத்து தேய்த்து சுத்தம் செய்யுங்க. பயன்படுத்துவதற்கு முன்பு பர்னரை முழுவதுமாக உலர வைப்பது ரொம்ப முக்கியம்.
அடைபட்ட துளைகளை நீக்க ஊசி / பாப் பின் பயன்பாடு
பர்னர்களை ஊறவைத்துத் தேய்த்த பிறகும், அதன் சிறிய துளைகளில் அழுக்கு அல்லது சோப்புத் துகள்கள் அடைத்திருக்கலாம். இவற்றை நீக்க ஒரு சிறிய பாப் பின் ஊசி அல்லது மெல்லிய கம்பியைப் பயன்படுத்தித் துளைகளைக் குத்தி அடைப்பை நீக்கலாம். இது எரிவாயு சீராக எரியவும், நீல நிறச் சுடர் வரவும் உதவும்.
மஞ்சள் தூள் மற்றும் உப்பு கரைசல்
இரசாயனங்கள் அல்லது ஈனோ இல்லாத பட்சத்தில், சுடுநீரில் 2 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் கல் உப்பு கலந்து பர்னரை 20 நிமிடங்கள் ஊறவைத்துத் தேய்க்கலாம். இது கிருமிகளை அழிப்பதோடு, பிசுபிசுப்பையும் எளிதில் போக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

