MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Garden Tips: தினமும் தண்ணி ஊத்த நேரமில்லையா? செடிகள் வாடாமல் இருக்க 5 சூப்பர் டிப்ஸ்!

Garden Tips: தினமும் தண்ணி ஊத்த நேரமில்லையா? செடிகள் வாடாமல் இருக்க 5 சூப்பர் டிப்ஸ்!

Garden Tips: உங்கள் வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்ற நேரம் இல்லையா? ஆனாலும் நீண்ட நாட்களாக செடிகளை வாடாமல் பிரெஷ்ஷாக வைத்திருக்க முடியும். இது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 28 2026, 08:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
நீண்ட நாட்கள் செடிகள் வாடாமல் பிரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்
Image Credit : AI

நீண்ட நாட்கள் செடிகள் வாடாமல் பிரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்

வீட்டில் பசுமையான செடிகளை வளர்ப்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால், தினமும் அவற்றுக்குத் தண்ணீர் ஊற்ற நேரம் இல்லாதபோது அல்லது கோடைக்காலத்தில் அவை எளிதில் வாடிவிடுவது பெரும் கவலையாக இருக்கும். உண்மையில், தினமும் தண்ணீர் ஊற்றாமலேயே தொட்டிச் செடிகளை பசுமையாக வைத்திருக்க முடியும். அதற்கு, சில அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்தினால் போதும்.

தொட்டி முதல் மண் வரை.. கவனிக்க வேண்டியவை

செடிகள் வாடுவதற்கு முக்கியக் காரணம், நாம் பயன்படுத்தும் தொட்டியும் மண் கலவையும்தான். பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்பதற்காக பலரும் சுடுமண் (Terracotta) தொட்டிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், இந்தத் தொட்டிகளின் பக்கவாட்டுகள் வழியாகவும் நீர் ஆவியாகி, மண் சீக்கிரமே காய்ந்துவிடும். இதற்குப் பதிலாக, நீரை நீண்ட நேரம் தக்கவைக்கும் பிளாஸ்டிக் அல்லது மெருகூட்டப்பட்ட (Glazed) பீங்கான் தொட்டிகளைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனம்.

இதையும் படிங்க: Cooker Hacks: குக்கர் விசில் அடிக்கும்போது தண்ணீர் கொட்டுதா? இந்த சிம்பிள் ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தொட்டியின் அளவும் முக்கியம்
Image Credit : Pinterest

தொட்டியின் அளவும் முக்கியம்

அதேபோல, தொட்டியின் அளவும் முக்கியம். சிறிய தொட்டிகளில் மண் குறைவாக இருப்பதால், வெயிலில் சில மணி நேரங்களிலேயே ஈரப்பதம் போய்விடும். சற்று பெரிய தொட்டிகளைப் பயன்படுத்தும்போது, மண் மெதுவாகவே சூடாகும், ஈரப்பதமும் நீண்ட நேரம் நீடிக்கும். வெறும் தோட்டத்து மண்ணை மட்டும் பயன்படுத்தாமல், 40% மண், 30% மக்கிய உரம், 20% தேங்காய் நார் கழிவு (Cocopeat) மற்றும் 10% மணல் கலந்த கலவையைத் தயார் செய்தால், அது நீரை உறிஞ்சி மெதுவாக வேர்களுக்குக் கொடுக்கும்.

மண்ணின் மேற்பரப்பில் காய்ந்த இலைகள், மரத்தூள் அல்லது வைக்கோல் கொண்டு சுமார் 2 அங்குல தடிமனுக்கு மூடாக்கு (Mulch) அமைப்பது ஒரு சிறந்த தந்திரம். இது நேரடியாக வெயில் படுவதைத் தடுத்து, நீர் ஆவியாவதைக் குறைத்து, மண்ணைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதனால், களைகளின் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படும் என்பது கூடுதல் நன்மை.

இதையும் படிங்க: AC Hack: ஏசி கரண்ட் பில்லை பாதியாக குறைக்கும் 'அந்த' ஒரு பட்டன்! இது தெரியாம போச்சே!

Related Articles

Related image1
Kitchen Garden: மளிகை செலவு பாதியாகும்! கோடையில் இந்த 10 காய்கறிகளை ஈஸியா வளர்க்கலாம்
Related image2
Kitchen Garden: 15 நாளில் அறுவடை! பால்கனி, மொட்டை மாடியில் ஈஸியா வளர்க்கும் 5 கீரைகள், காய்கறிகள்!
34
தண்ணீர் ஊற்றும் முறையில் கவனம் செலுத்தணும்
Image Credit : Pinterest

தண்ணீர் ஊற்றும் முறையில் கவனம் செலுத்தணும்

செடிகளுக்கு தினமும் கொஞ்சமாகத் தண்ணீர் தெளிப்பதை விட, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஆழமாக நீர் பாய்ச்சுவது மிகவும் சிறந்தது. தொட்டியின் அடியில் உள்ள துளைகள் வழியாக நீர் லேசாக வெளியேறும் வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். இப்படிச் செய்வதால், வேர்கள் ஆழமாகச் சென்று, மண்ணின் கீழ்ப்பகுதியில் உள்ள ஈரப்பதத்தையும் எடுத்துக்கொள்ளும். தண்ணீர் ஊற்றுவதற்கு மிகச் சரியான நேரம் அதிகாலை வேளைதான்.

மதிய வெயிலில் தண்ணீர் ஊற்றினால், அது செடியின் வேர்களைச் சென்றடைவதற்கு முன்பே ஆவியாகிவிடும். அதே சமயம், ஈரப்பதம் தேவை என்பதற்காக தொட்டியில் நீர் தேங்கிவிடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். தொட்டியின் அடியில் முறையான வடிகால் துளைகள் இருப்பது அவசியம், இல்லையெனில் வேர்கள் அழுகிவிடும் அபாயம் உள்ளது.

44
செடிகளைப் பாதுகாக்கும் இதர வழிகள்
Image Credit : Asianet News

செடிகளைப் பாதுகாக்கும் இதர வழிகள்

கடுமையான மதிய வெயில் படும் இடத்தில் செடிகளை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். காலை வெயில் மட்டும் படும் பால்கனி அல்லது மர நிழலில் வைப்பது நல்லது. தேவைப்பட்டால், 40 முதல் 50 சதவிகிதம் நிழல் தரும் பச்சை வலைகளைப் (Shade Net) பயன்படுத்தலாம். இது செடிகளின் நீர் தேவையைக் கணிசமாகக் குறைக்கும்.

சில நாட்கள் ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தால், தண்ணீர் பாட்டிலில் சிறிய துளையிட்டு, அதைத் தலைகீழாக மண்ணில் சொருகி வைக்கும் எளிய முறையைப் பின்பற்றலாம். இது சொட்டு நீர் பாசனம் போலச் செயல்பட்டு, செடிகளைக் காயாமல் பாதுகாக்கும். இது பெரிய ராக்கெட் சைன்ஸ் எல்லாம் இல்லை, கொஞ்சம் மெனக்கெட்டால் போதும், உங்கள் வீட்டுத் தோட்டம் எப்போதும் பசுமையாக இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Harm Your Brain : மூளையைக் மெதுவாகப் பாதிக்கும் 8 அன்றாடப் பழக்கங்கள்: நரம்பியல் நிபுணரின் முக்கிய எச்சரிக்கை!
Recommended image2
Hibiscus Shampoo : இரசாயனம் இல்லாத செம்பருத்தி மூலிகை ஷாம்பூ வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?
Recommended image3
chicken recipe : பேச்சுலர்ஸ் சிக்கன் - இவ்வளவு ஈஸியா யாராலையும் செய்ய முடியாது
Related Stories
Recommended image1
Kitchen Garden: மளிகை செலவு பாதியாகும்! கோடையில் இந்த 10 காய்கறிகளை ஈஸியா வளர்க்கலாம்
Recommended image2
Kitchen Garden: 15 நாளில் அறுவடை! பால்கனி, மொட்டை மாடியில் ஈஸியா வளர்க்கும் 5 கீரைகள், காய்கறிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved